Published:Updated:

டீன் கொஸ்டீன் : காதல் ஜோடிகளுக்கு ரேஷன் கார்டு!

டீன் கொஸ்டீன் : காதல் ஜோடிகளுக்கு ரேஷன் கார்டு!

பிரீமியம் ஸ்டோரி
டீன் கொஸ்டீன்
டீன் கொஸ்டீன் : காதல் ஜோடிகளுக்கு ரேஷன் கார்டு!
டீன் கொஸ்டீன் : காதல் ஜோடிகளுக்கு ரேஷன் கார்டு!
காதல் ஜோடிகளுக்கு ரேஷன் கார்டு!
 
டீன் கொஸ்டீன் : காதல் ஜோடிகளுக்கு ரேஷன் கார்டு!
டீன் கொஸ்டீன் : காதல் ஜோடிகளுக்கு ரேஷன் கார்டு!

அ.மாதவன், வேலூர்.

''நான் முன்பு பணியாற்றிய நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியதால், மூன்று மாதச் சம்பளப் பாக்கியுடன் என்னை வேலையைவிட்டு அனுப்பிவிட்டனர். என்னைப்போல இன்னும் நிறைய பேருக்கு பாக்கிவைத்துள்ளனர். பாக்கித் தொகையை பின்னர் தருவதாக எழுதியும் கொடுத்துள்ளனர். ஆனாலும், கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கடந்தும், இன்னும் திருப்பித் தரவில்லை. அந்தத் தொகையைப் பெற என்ன வழி?''

ஆர்.எஸ்.சர்மா,
தொழில் உறவு ஆலோசகர்.

''பாக்கித் தொகையைப் பெற நீங்கள் உங்கள் பகுதிக்கான தொழிலாளர் நீதிமன்றத்தை அணுக வேண்டும். தொழில் தகராறு சட்டம் 1947-ம் ஆண்டு பிரிவு 33 சி(2) படி, சம்பள பாக்கியைத் பெற்றுத்தரக் கோரி விண்ணப்பம் செய்து பெற்றுக்கொள்ளலாம். வைப்பு நிதியைப் பொறுத்தவரை உங்கள் பகுதியில் உள்ள வைப்பு நிதி அலுவலகத்தை அணுகுங்கள். அங்கு பி.எஃப். பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களிடம் அத்தாட்சி பெற்று, வைப்பு நிதி ஆணை யரிடம் அளித்தால் எவ்வளவு பாக்கி உள்ளதோ, அதைப் பெற்றுக்கொள்ளலாம். எளிய நடைமுறைகள்தான். முனைந்து பாருங்கள்!''


எஸ்.சரவணன், சேலம்.

''நான் காதல் திருமணம் செய்தவன். எனக்குத் தற்போது ரேஷன் கார்டு தேவைப்படுகிறது. புதிய கார்டு பதிவு செய்ய, பழைய கார்டில் இருந்துபெயர் நீக்கம் செய்ய வேண்டுமாம். ஆனால், இருவர் வீட்டையும் அணுக முடியாத நிலையில் இருக்கிறோம். புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க வேறு என்ன வழி?''

டீன் கொஸ்டீன் : காதல் ஜோடிகளுக்கு ரேஷன் கார்டு!

க.ராஜாராமன், ஐ.ஏ.எஸ்.,
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர்.

''கவலைப்படாதீர்கள் சரவணன். உங்களைப்போன்ற தம்பதிகளுக்காகவே, ஆறு மாதங்களுக்கு முன் ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறோம். அதன்படி, காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினரில் ஆணுக்கு 21 வயதும் பெண்ணுக்கு 18 வயதும் பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அவர்கள் தங்கள் பெயர்களைப் பழைய குடும்ப அட்டைகளில் இருந்து நீக்கம் செய்யக் கோரி மனு செய்யலாம். வயது வரம்பு மற்றும் விண்ணப்பதாரர் களின் பெற்றோர் பெயர் இரண்டையும் நிரூபிப்ப தற்கானப் பிறப்புச் சான்றிதழ் நகல் அல்லது கல்விச் சான்றிதழ், குடும்ப அட்டை எண், கடை குறியீடு எண், பெற்றோர் பெயர், குடும்ப அட்டையில் உள்ள முகவரி, திருமணப் பதிவுச் சான்றிதழ் நகல், தற்போதைய உங்க ளின் இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றுடன் உங்கள் பகுதிக்கான வட்ட வழங்கல் மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள் பெற்றோரின் பரிந்துரை இல்லாமலேயே பழைய ரேஷன் கார்டில் இருந்து பெயரை நீக்கிவிடுவார்கள். அந்தச் சான்றிதழைவைத்து புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்!''


எல்.கார்த்திக், மதுரை.

''எனக்கு மாறுகண் உள்ளது. பலரும் கிண்டல், கேலி செய்கிறார்கள். இதைச் சரிசெய்ய முடியுமா?''

டீன் கொஸ்டீன் : காதல் ஜோடிகளுக்கு ரேஷன் கார்டு!

டாக்டர் சௌந்தரி,
டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை.

''இரண்டு கண்களில் ஒன்றில் மட்டும் பார்வைக் குறைபாடு இருந்தாலோ, கண்ணாடி அணிய வேண்டியவர்கள் அணியாமல் இருந் தாலோ, கண்களில் உள்ள தசை பலவீனத்தாலோ, பிறவியிலோ மாறுகண் இருக்கும். கண்ணாடி அணியாததன் மூலம் ஏற்படும் பிரச்னைக்குக் கண்ணாடி அணிவதே தீர்வாகும். தசை பலவீனத்தை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யலாம். உங்களுடையது என்னவிதமான பிரச்னை என்பதைக் கண்டறிய, தக்க கண் சிகிச்சை மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். நிச்சயம் தீர்வு உண்டு கார்த்திக்!''


எம்.பிரிட்டோ, சென்னை-44.

''10 ஆண்டுகளாக வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். இப்போது மாதச் சம்பளம் 15 ஆயிரம் ரூபாய். தவிர, இன்சென்டிவ் உண்டு. இதுவரை சேமிப்பு என்று நயா பைசா சேர்க்கவில்லை. இனியாவது எதிலாவது முதலீடு செய்யலாம் என்று ஐடியா. எந்தத் திட்டம் எனக்கு ஏற்றதாக இருக்கும்?''

டீன் கொஸ்டீன் : காதல் ஜோடிகளுக்கு ரேஷன் கார்டு!

ராமகிருஷ்ணன் வி. நாயக்,
முதுநிலை துணைத் தலைவர், பஜாஜ் கேபிட்டல்.

''மாதந்தோறும் சேமிப்புக்கு என்று எவ்வளவு ஒதுக்க முடியும், உங்கள் லைஃப்ஸ்டைல் எப்படிப்பட்டது போன்ற விவரங்கள் இல்லை. நீண்ட காலத்துக்குச் சேமிக்க வேண்டுமா, குறுகிய காலத்துக்கா, எதற்காக சேமிப்பு என்பதை எல்லாம் உறுதி செய்ய வேண்டும். குறுகிய காலச் சேமிப்புக்கு ரெக்கரிங் டெபாசிட் போன்றவற்றில் சேரலாம். நீண்ட காலத் திட்டமாக இருந்தால் மியூச்சுவல் ஃபண்ட் சிஸ்டமாட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானில் சேமிக்கலாம். உங்கள் வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்க வேண்டும். முதலில் தக்க முதலீட்டு ஆலோசகரைத் தொடர்புகொள்ளுங்கள். அவர் உங்கள் வருவாய், செலவு போன்றவற்றை முழுவது மாக ஆராய்ந்து நல்ல பரிந்துரை வழங்குவார்!''


மா.வெங்கட், தஞ்சாவூர்.

''நான் ஏழை மாணவன். கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கிறேன். ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்பது லட்சியம். இலவசப் பயிற்சி வகுப்புகள் நிறைய உள்ளதாகக் கூறுகிறார்கள். உண்மையா?''

டீன் கொஸ்டீன் : காதல் ஜோடிகளுக்கு ரேஷன் கார்டு!

சைதை துரைசாமி,
மனிதநேயம் ஐ.ஏ.எஸ் அகாடமி, சென்னை.

''ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான பயிற்சிகளை எங்கள் மனிதநேய அறக்கட்டளை இலவச மாகவே அளிக்கிறது. இந்தப் பயிற்சியில் சேர, குறைந்தது ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். சேர்க்கைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு முதல் கட்டமாக இரண்டு தேர்வுகள் நடத்துவோம். அதில் தேர்ச்சி பெறுபவர்களை சேர்த்துக்கொண்டு இலவசமாகவே பயிற்சிகளை வழங்குவோம். தமிழக அரசு 'அண்ணா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட்' என்ற நிறுவனம் மூலமாகவும் இலவசப் பயிற்சியினை வழங்குகிறது. அங்கும் நுழைவுத் தேர்வு நடத்தி, மெரிட் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்களைத் தேர்வு செய்து பயிற்சி வழங்குகிறார் கள்!''

இளைஞர்களே...

உங்கள் சந்தேகம், குழப்பம், மயக்கம் எதுவாக இருந்தாலும், 'டீன் கொஸ்டீன்' பகுதிக்கு அஞ்சலில் எழுதி அனுப்பலாம். அல்லது 044-42890004 என்ற தொலைபேசி எண்ணிலும் உங்கள் குரலிலேயே பதிவு செய்யலாம். நாங்கள் உதவக் காத்திருக்கிறோம்!

 
டீன் கொஸ்டீன் : காதல் ஜோடிகளுக்கு ரேஷன் கார்டு!
டீன் கொஸ்டீன் : காதல் ஜோடிகளுக்கு ரேஷன் கார்டு!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு