Published:Updated:

கிரஹப்பிரவேசம்-II : பாரதி தம்பி

கிரஹப்பிரவேசம்-II : பாரதி தம்பி

பிரீமியம் ஸ்டோரி
பாரதி தம்பி ,படங்கள்: பொன்.காசிராஜன்
கிரஹப்பிரவேசம்-II : பாரதி தம்பி
கிரஹப்பிரவேசம்-II : பாரதி தம்பி
கிரஹப்பிரவேசம்-II
கிரஹப்பிரவேசம்-II : பாரதி தம்பி
கிரஹப்பிரவேசம்-II : பாரதி தம்பி
கிரஹப்பிரவேசம்-II : பாரதி தம்பி
கிரஹப்பிரவேசம்-II : பாரதி தம்பி

'எந்திரன்' வரை டாப் கியரில் எகிறி அடிக்கும் கலை இயக்குநர் சாபுசிரிலின் கோடம்பாக்கம் இல்லம். சின்னச் சின்ன கலை நுணுக்க வேலைப்பாடுகளால் நிறைந்த வீடு. ''எத்தனையோ வாடகை வீடுகளில் இருந்திருக்கேன். அப்போ ஒருநாள் பாண்டிச்சேரி வீடுகளின் ஸ்டைலில் ஒரு கதவு பார்த்தேன். என்னிக்கு வீடு கட்டினாலும் இதுதான் கதவுன்னு மனசு சொல்லுச்சு. உடனே, ஐந்து ஆயிரம் ரூபாய் கொடுத்து அந்தக் கதவை வாங்கி வெச்சுக்கிட்டேன். பல வருஷங்கள் கழிச்சு இந்த வீட்டை வாங்கியதும் அந்தக் கதவைத்தான் போட்டேன்'' - நெஞ்சம் நிறைந்து பேசுகிறார் சாபுசிரில்.

''வால்பாறையில் இருந்து 17 கி.மீ. தூரத்தில் முருகாலி டீ எஸ்டேட் இருக்குது. அங்கே அப்பா டீ மேக்கரா வேலை பார்த்தார். நான் பிறந்து வளர்ந்தது அங்கதான். சுற்றிலும் தேயிலைத் தோட்டங்கள், பச்சை மரங்கள், குளிர்க் காற்று. எங்களுக்குன்னு ஒரு வீடு கொடுத்திருந்தாங்க. டீ எஸ்டேட்கள் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததால், வீடுகள் எல்லாம் வெளிநாட்டு ஸ்டைல்ல இருக்கும். நிறைய மரங்களை வெச்சுக் கட்டியிருப்பாங்க. தரையில் கார்பெட் விரிச்சிருப்பாங்க. விதவிதமான பழங்காலப் பொருட்கள் எங்க வீட்டில் இருந்துச்சு. நினைச்சுப் பார்த்தா, அந்த வீடே ஒரு ரசனையான செட்போலத்தான் இருக்கும்.

ஏழாம் வகுப்பு வரைக்கும் வால்பாறையில் படிச்சேன். அதுக்குப் பிறகு என்னை கோயம்புத்தூரில் ஒரு ஹாஸ்டலில் சேர்த்தாங்க. ஹாஸ்டலில் நான் சிரமப்படுறதைப் பார்த்துட்டு, நான் 11-ம் வகுப்பு படிக்கும்போது அம்மா கோவை சாய்பாபா காலனியில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து வந்து என்னைப் பார்த்துக்கிட்டாங்க. நாங்க குடியிருந்த முதல் வாடகை வீடு அதுதான். அதுக்குப் பிறகு சென்னைக்கு வந்துட்டேன். எக்மோர் ஃபைன் ஆர்ட்ஸ் கல்லூரியில் விஸ்காம் படிச்சேன். கல்லூரி முடிக்கிறதுக்குள்ள ரெங்கராஜபுரம், கே.கே.நகர், சாலிகிராமம், அசோக் நகர்னு பல இடங்களுக்கு வாடகை வீடு மாறினோம். இதுக்கு இடையில் நான் பகுதி நேரமா தாஜ் ஹோட்டல், டி.வி.எஸ். இப்படிப் பெரிய நிறுவனங்களுக்கு கிராஃபிக் டிஸைனரா வேலை பார்த்தேன். நிறைய கார்பரேட் நிறுவனங்களுக்கான விளம்பரப் படங் கள் பண்ணிக்கொடுத்தேன். நான் சென்னையில் ஐந்தாவது வீடு மாறும்போது,

கிரஹப்பிரவேசம்-II : பாரதி தம்பி

சினிமாவில் வேலை பார்க்க ஆரம்பிச்சேன். ஒரு சில படங்கள் பண்ணி அப்போதான் வளர்ந்து வர்ற நேரத்துல, கோடம்பாக்கத்தில் இந்த வீடு விற்பனைக்கு வர்றதைக் கேள்விப்பட்டேன். ஆனா, அட்வான்ஸ் தர்றதுக்குக்கூட கையில காசு இல்லை. ப்ரியதர்ஷன் சார்தான், 'முதல்ல வீட்டை வாங்கு. எல்லாரும் கையில பணத்தை வெச்சுக்கிட்டா வீடு வாங்குறாங்க'ன்னு சொல்லி, ஒரு லட்ச ரூபாய் தந்தார். அப்புறம் சந்தோஷ்சிவன், ரவி.கே.சந்திரன் எல்லாரும் ஆளுக்குக் கொஞ்சம் பணம் கொடுத்தாங்க. எல்லாத்தையும் சேர்த்துப் போட்டுதான் இந்த வீட்டுக்கு ஐந்து லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தேன்.

வீட்டுக்கு குடிவர்றதுக்கு முன்னாடி ப்ரியதர்ஷன், சந்தோஷ்சிவன் எல்லோரும் வந்திருந்தோம். வீட்டைச் சுத்திப் பார்த்துட்டு, உக்கார்ந்து பியர் சாப்பிட்டுச் சந்தோஷமா இருந்த நாளை இப்பவும் மறக்க முடியாது. இந்த வீடு எனக்குப் பல நல்ல விஷயங்களைத் தந்திருக்கு. என்னோட மாமா பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். கல்யாணம் பண்ணும்போது நான் ஜெயிச்சவன் கிடையாது. அப்போ என்கிட்ட பணம் இல்லை. ஆனால், என்னை நம்பி தன் பொண்ணைத் தந்தார் மாமா. இந்த வீட்டை வாங்கின பிறகு அவரை அழைச்சுட்டு வந்து காட்டினேன். தன் பொண்ணு பாதுகாப்பா இருக்காள்னு அவர் மனசு நிறைவாப் போனார். இந்த வீட்டுக்கு வந்த பிறகுதான் சினிமா வில் எனக்கு ஒரு பிரேக் கிடைச்சது. மணிரத்னம் ஆரம்பிச்சு ஷங்கர் வரைக்கும் எத்தனையோ இயக்குநர்கள் இங்கே வந்திருக்காங்க. நான் முழுக்க மும்பையில் இருப்பதால், குடும்பத்தை மும்பைக்கு மாற்றலாம்னு இருக்கேன். ஆனாலும், இந்த வீட்டை விக்குறதா இல்லை. ஏன்னா, இந்த வீடு என் சென்டிமென்ட்!''

கிரஹப்பிரவேசம்-II : பாரதி தம்பி

 
கிரஹப்பிரவேசம்-II : பாரதி தம்பி
- இன்னும் பிரவேசிக்கலாம்...
கிரஹப்பிரவேசம்-II : பாரதி தம்பி
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு