டீன் கொஸ்டீன்

நான் வளருவேனா மம்மி?

ஸ்வேதா, சென்னை.

''பி.இ., படிக்கும்போதே எனக்கு கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்தது. வேலையில் சேரும்போது, கண்டிப்பாக இரண்டு ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும் என்று பாண்ட் எழுதி வாங்கிக்கொண்டனர். மிக அதிக வேலைப் பளு. வேலைக்கேற்ற சம்பளமும் இல்லை. ஆறு மாதங்களிலேயே வேலையைவிட்டு விலக வேண்டும் என்றால், சில லட்ச ரூபாய்களை நான் அபராதமாகக் கொடுக்க வேண்டும் என்கிறார்கள். இதைச் சட்டரீதியாக எதிர்கொள்ள முடியுமா?''

அஜிதா,
வழக்கறிஞர்.

''இரு தரப்பிலும் ஒப்புக்கொண்டு கையெழுத்துப் போடும் ஒப்பந்த ஷரத்துதான் பாண்ட் எனப்படுவது. எனவே, அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் விதிகளை இரு தரப்பும் மீறக் கூடாது. குறிப்பிட்ட சம்பளத்தில், குறிப்பிட்ட காலம் வரை அந்த வேலையில் பணியாற்றுகிறேன் என்று ஏற்றுக்கொண்டுதான் பணியில் சேர்ந்திருக்கிறீர்கள். குறிப்பிட்ட காலத்துக்கு முன் நீங்களே ராஜினாமா செய்தால், அந்த நிறுவனம் உங்களுக்கு ரிலீவிங் லெட்டர் தருவதில் சிக்கல் செய்யும். அந்த ரிலீவிங் லெட்டரின் உள்ளடக்கம்தான் வேறு நிறுவனத்தில் உங்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்யும்.

பாண்டில் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னரே நீங்கள் வேலையைவிட்டு விலகினால், அந்த நிறுவனத்துக்கு இழப்பீடாக நீங்கள் ஏதேனும் செலுத்த வேண்டியிருக்கும். சட்டரீதியான நடவடிக்கைகளுக்குக்கூட வாய்ப்பு இருக்கிறது. இனி, எதிர்காலத்தில் பாண்ட் பத்திரங்களில் கையெழுத்திடும்போது மிகவும் கவனமாக அதன் விதிமுறைகளைப் படித்துப் பார்த்துக் கையெழுத் திடுங்கள்!''

கண்ணன், கோவை.
''18 வயதில் நான் 5.1 அடி உயரம் இருக்கிறேன். இதற்கு மேல் என்னால் உயரமாக வளர முடியுமா? முடியும் என்றால் அது எப்படி?''

உஷா ஸ்ரீராம்,
எண்டோகிரைனாலஜிஸ்ட்.

''உங்கள் பெற்றோரின் உயரம், டி.என்.ஏ. மூலக்கூறுகள், உங்கள் உடல் நிலை, ஹார்மோன் உற்பத்தி எனப் பல காரணங்கள் உங்கள் உயரத்தைத் தீர்மானிக்கின்றன. பொதுவாக, ஆண் கள் தங்கள் முழு வளர்ச்சியை 18 வயதுக்குள் எட்டிவிடுவார்கள் அரிதாகச் சிலருக்கு பிட்யூட்டரி, தைராய்ட் மற்றும் சில ஹார்மோன் குறைபாடு காரணமாக வளர்ச்சி குறையலாம் அல்லது தாமதமாகலாம். தற்போதுதான் 18 வயதை எட்டியிருக்கிறீர்கள் என்பதால்,

நீங்கள் தக்க எண்டோகிரைனாலஜிஸ்ட் நிபுணரை அணுகி ஆலோசனை பெறுங்கள். அவர் உங்கள் கையை எக்ஸ்-ரே எடுப்பார். அது உங்கள் கை எலும்புகளின் வளர்ச்சியைக் கணிக்க உதவும். அதன் மூலம் உங்கள் உடல் எலும்புகளின் வளர்ச்சி முழுமை அடைந்துவிட்டதா, அல்லது இன்னும் சில காலம் வளருமா என்பதைக் கண்டுபிடிக்கலாம். வளர்ச்சி தாமதமாகும் காரணத்தைக் கண்டுபிடித்தால், அதற்கெனச் சிகிச்சையளித்து உங்கள் வளர்ச்சியைத் தூண்டுவார்கள்!''

நித்யா, கோயம்புத்தூர்.
''எனக்குத் திருணம் நிச்சயமாகியுள்ளது. பெற்றோர் பார்த்த மாப்பிள்ளைதான். ஆனால், நிச்சயதார்த்தம் முடிந்த சில நாட்களில் அவருடைய நடத்தை எனக்குப் பிடிக்கவில்லை. நான் எதிர்பார்க்கும் சின்னச் சின்ன குணங்கள்கூட அவரிடம் இல்லை. வாழ்க்கை முழுக்க அவருடன் வாழ முடியுமா என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. இதை வெளிப்படையாக என் பெற்றோரிடம் சொல்லி திருமணத்தை நிறுத்தவா? அல்லது நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதே என்று அவரையே கல்யாணம் செய்துகொள்ளவா?''

ஷாலினி,
மனநல மருத்துவர்.

''அவருடைய எந்த மாதிரியான நடவடிக்கைகள் பிடிக்கவில்லை என்று நீங்கள் தெளிவாகக் குறிப்பிடவில்லை. உங்கள் எதிர்பார்ப்புகள் நியாயமானது, அத்தியாவசியமானது என்றால், அவருடனான திருமண முடிவு குறித்து மறுபரிசீலனை செய்யலாம்.

ஆனால், சமயங்களில் உங்கள் எதிர்பார்ப்பே அளவுக்கு அதிகமான, இயல்பான ஒன்றாக இல்லாவிட்டால், குறை நிவர்த்தியை உங்களிடம் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டியிருக்கும். சரி பண்ணக்கூடிய சின்னச் சின்னக் குறைகள்தான் என்று நீங்கள் நினைத்தால், மறுயோசனை இல்லாமல் திருமணம் செய்துகொள்ளுங்கள். ஏனெனில், திருமணத்துக்குப் பின் பரஸ்பரம் ஒருவரையருவர் புரிந்துகொண்டு, அன்பு செலுத்தும்போது, சகிப்புத்தன்மை அதிகரிக்கும். எனவே, அவசரப்படாமல், உங்கள் வீட்டுப் பெரியவர்களிடம் மனம்விட்டுப் பேசுங்கள். அவர்களுடைய ஆலோசனையின் பேரில் இறுதி முடிவெடுக்கலாம்!''

லலிதா, காஞ்சிபுரம்.
''என் மகன் சி.பி.எஸ்.இ. சிலபஸில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். புரிந்துகொண்டு படிக்கத் திணறுகிறான். ஆவரேஜ் மார்க்ஸ்தான் வாங்குகிறான். 'மெட்ரிகுலேஷன் பாடத் திட்டம் சுலபமாக இருக்கும். அவனை அதற்கு மாற்றிவிடு!' என்கிறார்கள் உறவினர்கள். அப்படிச் செய்யலாமா?''

ஜெய்பிரகாஷ் காந்தி,
கல்வியாளர்.

''உங்களுக்கு ஒரு வருத்தமான செய்தி. இன்னும் இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் மெட்ரிகுலேஷன் சிலபஸ் என்பதே இருக்காது. சமச்சீர் கல்வியினை அமல்படுத்துவதால் ஸ்டேட் போர்டு, மெட்ரிகுலேஷன் பாடத் திட்டங்கள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் இணைகின்றன. இந்த ஆண்டு ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு களுக்கு மட்டும் சமச்சீர் கல்வி பாடத் திட்டம் அமலாகிறது. அடுத்த ஆண்டு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி பாடத்திட்டம்தான். அதனால் எந்தக் குழப்பமும் வேண்டாம். வரும் நாட்களில் புரிந்துகொண்டு கிரகித்துக் கொள்வான் என்றால், உங்கள் மகனை சி.பி.எஸ்.இ. பள்ளியிலேயே படிக்க வையுங்கள். ரொம்பவும் சிரமப்படுகிறான் என்றால், யோசிக்காமல் சமச்சீர் கல்வி முறைக்கு மாற்றிவிடுங்கள். ஆனால், எந்தப் பாடத் திட்டமாக இருந்தாலும், பள்ளி இறுதி ஆண்டில்தான் மதிப்பெண்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கும். எந்த மாணவனுக்கும் படிக்கும் ஆசையை வளர்க்க வேண்டும். அதுதான் முக்கியம்!''

பத்மபிரியா, பெங்களூரு.
''இப்போதுதான் ஒரு வேலையில் சேர்ந்துள்ளேன். இதுவரை நான் எதுவும் சேமித்தது இல்லை. 'யூலிப்', 'மியூச்சுவல் பண்ட்' என்றெல்லாம் சேமிக்க நிறைய திட்டங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், எனக்குக் குழப்பமாக இருக்கிறது. நான் எதில் முதலீடு செய்வது?''

சொக்கலிங்கம் பழனியப்பன்,
நிதி ஆலோசகர்.

''யூலிப் என்பது முதலீடு (சேமிப்பு) மற்றும் காப்பீடு ஆகிய இரண்டும் கலந்த ஒன்று. நீண்ட கால முதலீடுதான் உங்கள் விருப்பம் என்றால், மியூச்சுவல் பண்ட்தான் சிறந்தது. அதிலும் மாதாந்திரப் பணம் செலுத்தும் முறையான சிஸ்டமாட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) உகந்ததாக இருக்கும். ஆனால், இந்தத் திட்டத்தில் குறைந்தது மூன்று வருடங்களாவது அந்தப் பணம் நமக்குத் தேவைப்படாததாக இருக்க வேண்டும். குறுகிய காலத்துக்கு நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால், வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் உள்ள ஆர்.டி. எனப்படும் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் சேமிக்கலாம்!''

இளைஞர்களே...

உங்கள் சந்தேகம், குழப்பம், மயக்கம் எதுவாக இருந்தாலும், 'டீன் கொஸ்டீன்' பகுதிக்கு அஞ்சலில் எழுதி அனுப்பலாம். அல்லது 044-42890004 என்ற தொலைபேசி எண்ணிலும் உங்கள் குரலிலேயே பதிவு செய்யலாம். நாங்கள் உதவக் காத்திருக்கிறோம்!