அண்டன் பிரகாஷ்

வருங்காலத் தொழில்நுட்பம்

வலைதளம் ஒன்றின் பயன் எப்படி இருந்தாலும் சரி, அதன் மதிப்பு அதற்கு எத்தனை பேர் வருகிறார்கள் என்பதில்தான் இருக்கிறது. டிராஃபிக் என்று பரவலாக அறியப்படுகிற இந்த வரவுப் போக்குவரத்தை அதிகரிக்க வலைதள நிறுவனங்கள் கையாளும் பல்வேறு டெக்னிக்குகள், ஸ்டன்ட்டுகள் மிக சுவாரஸ்யமானவை. new.half.com என்ற வலைதள நிறுவனம் தொடங்கப்பட்டு, மார்க்கெட்டிங் செய்ய அத்தனை பணம் இல்லாததால், செலவு குறைவாக எப்படித் தங்களது வலைதளத்துக்கு டிராஃபிக் கொண்டுவரலாம் என்று யோசித்து, அசத்தலான ஐடியா ஒன்றைச் செயல்படுத்தியது. சில நூறு பேரே இருக்கக்கூடிய சின்ன நகர் ஒன்றின் நகர சபையிடம் அவர்கள் தங்கள் ஊரின் பெயரை மாற்றிக்கொண்டால் அவர்களுக்குப் பணம் கொடுப்பதாகக் கூற, ஓரேகான் மாநிலத்தின் ஓர் ஊர் ஓ.கே. சொல்ல அதன் பெயர் Half.com என்று மாற்றப்பட்டது. 'இது என்ன நூதனம்?' என்ற ஆவலில் டி.வி, பத்திரிகை மீடியாக்கள் இதற்கு கவரேஜ் கொடுக்க, சில மாதங்களிலேயே அந்த வலைதளத்தின் டிராஃபிக் பல நூறு மடங்கு அதிகரிக்க, ஈபே நிறுவனம் அதனை வாங்கிக்கொண்டது. இதுபோல பல உதாரணங்கள். இணையம் எதையும் சாத்தியமாக்குகிற ஒரு விசாலமான விளையாட்டு அரங்கு என்பதைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறது.

இணையத்தை மிகச் சொற்பமாகப் பயன்படுத்துபவர்கள்கூட யுடியூப் (new.youtube.com) பற்றித் தெரியாமல் இருக்க முடியாது. பயனீட்டாளர்கள் தாம் எடுத்த வீடியோக்களைப் பதிவேற்றி, மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள யு டியூப் போன்ற எளிதான வலைதளம் வேறு இல்லை. சிறிய அளவில் 2005-ல் தொடங்கப்பட்ட இந்தத் தளம், கிடுகிடுவென பிரபலமாக, ஒரு வருடத்துக்குள் கூகுள் 1.65 பில்லியனுக்கு வாங்கிக்கொண்டது. பேபால் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த மூன்று இளைஞர்களால் தொடங்கப்பட்ட யுடியூப் கூகுளுக்கு மிக முக்கியம். காரணம், இந்தத் தளத்தின் டிராஃபிக். அதன் உதவியால் காட்டப்பட முடிகிற விளம்பரங்களில் இருந்து வரும் மில்லியன் டாலர்கள். 'என் பூனை செய்யும் சேட்டைகள்', 'என் நண்பனின் மோட்டார் சைக்கிள் வித்தைகள்' என்றெல்லாம் மானாவாரியாகப் பயனீட்டாளர்கள் பதிவேற்றம் செய்யும் வீடியோக்களின் மூலமாகத்தான் இந்த டிராஃபிக் உருவாகிறது என்றாலும், யு டியூபின் தொடக்க நாட்களில் திருட்டு வீடியோக்களைப் பகிர்ந்துகொள்ளும் தளமாகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டதாக வயாகாம் நிறுவனம் (new.viacom.com) தொடுத்த வழக்கு விசாரணைக்குச் சென்ற வாரம் வந்தது. காப்பிரைட் செய்யப்பட்ட திரைப்படங்களையும், சின்னத் திரை நிகழ்ச்சிகளையும் திட்டமிட்டுத் திருடியதன் அத்தாட்சியாக யு டியூப் நிறுவனர் ஒருவரின் இ-மெயிலை கோர்ட்டில் வயாகாம் சமர்ப்பிக்க; கூகுளோ, வயாகாம் தனது நிறுவன ஊழியர்களை நூலகங்கள் போன்ற பொது இடங்களில் இருந்து வீடியோக்களைப் பதிவேற்றம் செய்து, வேண்டுமென்றே யு டியூபைச் சிக்கலில் மாட்டிவைக்கச் சதி செய்தது என்பதைத் தங்களால் நிரூபிக்க முடியும் என்று பதிலடி கொடுத்துள்ளது. வயாகாம் சமர்ப்பித்த, 'Steal it' என்ற தலைப்பிட்ட இ-மெயிலைப் படித்துப்பார்த்தால், யு டியூபின் நிறுவனர் சீரியஸாகச் சொன்னதுபோல் தெரியவில்லை என்றாலும், கோர்ட் இதை எப்படி எடுத்துக்கொள்ளும் என்பது வலையுலகில் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது.

காப்பிரைட் பிரச்னைகளைப் புது ஐடியா கம்பெனிகள் எப்படி எதிர்கொள்ள முடியும் என்பதோடு, பிசினஸ் சம்பந்தமான இ-மெயில் களை எழுதும்போது எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்தச் சச்சரவு ஓர் உதாரணம்.

இணையத்தில் உங்கள் பிரைவஸியைக் காத்துக்கொள்வது உங்கள் பொறுப்பு என்பதைத் தொடர்ந்து இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம். பென்சில்வேனியா மாநிலத்தில் சென்ற மாதம் நடந்திருக்கும் சம்பவம், யாரால்எல்லாம் நம் பிரைவஸி எல்லைகள் மீறப்படும் என்பதை வரையறுக்க முடியாத அளவில் இருப்பதைக் காட்டுகிறது.

நடந்தது இதுதான்... 10-ம் வகுப்பு மாணவனான 15 வயது ப்ளேக் ராபின்ஸ், பள்ளியின் ஆப்பிள் மடிக்கணினியை ஹோம்வொர்க் செய்வதற்காக வீட்டுக்கு எடுத்துச் சென்ற சில நாட்களில், ப்ளேக் போதைப் பொருள் ஏதோ விற்பதாகப் பள்ளியின் நிர்வாக அதிகாரி கூற, அதிர்ந்துவிட்டனர் ப்ளேக்கின் பெற்றோர். அதை எப்படி அந்த அதிகாரி கண்டுபிடித்தார் என்று இவர்கள் கேட்க, ப்ளேக் வேறு மாணவர் ஒருவருக்கு எதையோ கொடுக்கும் புகைப்படம் ஒன்றைக் காண்பிக்க, மேலும் அதிர்ச்சி. இந்த அதிர்ச்சிக்குக் காரணம் ப்ளேக் போதைப் பொருள் பயன்படுத்தியதைக் கண்டுபிடித்ததால் அல்ல... புகைப்படம் எடுக்கப்பட்ட நேரத்தில் ப்ளேக்கின் பெற்றோரும் அதே அறையில் இருந்ததுதான். ப்ளேக் தனது நண்பருக்குக் கொடுத்தது போதைப் பொருள் அல்ல என்பதைத் தெரிவிக்க, பள்ளி நிர்வாகம் அதை அப்படியே விட்டுவிடுவதாகக் கூறிவிட்டது. ஆனால், பிரச்னை அதுவல்ல. இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது கணினியில் பொருத்தப்பட்டிருந்த கேமராவால். எடுக்கப்பட்ட இடம் படுக்கையறை. இணையம் மூலமாக ரகசியமாக கேமராவை இயக்கி, புகைப்படத்தைப் பள்ளி நிர்வாகம் எடுத்திருப்பது தங்களது பிரைவஸியைப் பாதிக்கும் சட்ட விரோதச் செயல் என்று புகார் கொடுத்திருக்கிறார்கள் ப்ளேக்கின் பெற்றோர். FBI விசாரணையில் இருக்கும் இந்த வழக்கில் ப்ளேக்குக்குச் சாதகமான தீர்ப்பு வரும் என்றே நினைக்கிறேன். ஒன்று மட்டும் நிச்சயம், கவனமாக இல்லாவிட்டால், இணையத்தில் பிரைவஸி என்பதை மறந்துவிட வேண்டியதுதான். அதுவும் விமான நிலையம் போன்ற பொதுவான இடங்களில் இருக்கும் கணினிகளைப் பயன்படுத்தும் வழக்கம் இருந்தால், நீங்கள் டைப் செய்யும் ஒவ்வொரு வார்த்தை யையும் பதிந்துவைத்துக்கொள்ளும் keystroke recorder மென்பொருட்கள் உங்களது இ-மெயில் கடவுச்சொல்லில் இருந்து, வங்கிக் கணக்கு வரையான தகவல்களை சைபர் (Cyber) திருடர்களுக்கு எளிதாக அனுப்பும் சாத்தியக்கூறுகள் உண்டு என்பதை நினைவில்வைத்துக் கொள்ளுங்கள். குறைந்தபட்சம் மாதம் ஒருமுறை உங்கள் அக்கவுன்ட்டுகளின் கடவுச்சொற்களை மாற்றுவது சிறந்தது!

-log off