Published:Updated:

'தமிழக காடு வளர்ப்பு: ஜப்பானுக்கு இருக்கும் அக்கறை நமது அரசுக்கு இல்லையே...! '

'தமிழக காடு வளர்ப்பு: ஜப்பானுக்கு இருக்கும் அக்கறை நமது அரசுக்கு இல்லையே...! '
'தமிழக காடு வளர்ப்பு: ஜப்பானுக்கு இருக்கும் அக்கறை நமது அரசுக்கு இல்லையே...! '

                                                                        வாசகர் பக்க கட்டுரை

மிழ் நாட்டின் பெரிய அரசியல் கட்சிகள் கூட செய்யத் துணியும் ஒன்றை கோவை மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி மாணவ, மாணவியர் செய்து வருகின்றனர். தங்களின் கல்வி மூலம், அரசு வேலைவாய்ப்புப்  பெறுவதை உறுதி செய்ய கோரிக்கை வைத்து கடந்த  25 நாட்களாக தொடர் போராட்டம்  நடத்தி வருகிறார்கள்.

'தமிழக காடு வளர்ப்பு: ஜப்பானுக்கு இருக்கும் அக்கறை நமது அரசுக்கு இல்லையே...! '

கோரிக்கைகளை வலியுறுத்தி செடிகளுக்கு தங்களின் ரத்தம் வார்த்தும்,உள்ளிருப்பு போராட்டம் நடத்தியும்  அரசின் கவனத்தை ஈர்த்து தங்களின் எதிர்காலத்தை பாதுகாக்க இளம் மாணவ மாணவியர் நடத்திய போராட்டம் மூலம் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தால், தற்போது காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கியுள்ளனர். கடந்த 17 ஆம் தேதி தொடங்கிய இந்த காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மூலம் மக்களின் கவனத்தைப் பெற்றுள்ளனர்.

நேற்று போராட்டத்தின் போது ஒரு மாணவி மயக்கம் போட்டு விழுந்து கடும் மூச்சுத் திணறலுக்கு ஆளாகியுள்ளார்.மருத்துவ சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 22 மாணவ மாணவியர் உண்ணாவிரதப் போராட்டத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

வேலைவாய்ப்பு கேட்டு கடந்த சில வருடங்களாக அவ்வப்போது வனக் கல்லூரி மாணவ மாணவியர்

'தமிழக காடு வளர்ப்பு: ஜப்பானுக்கு இருக்கும் அக்கறை நமது அரசுக்கு இல்லையே...! '

போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.அரசும் மாணவர்களின் போராட்டம் உச்சக் கட்டத்தை தொடும்போது கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம் என்று கூறி சமாதனம் செய்கிறது. ஆனால் மாணவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப் படுகிறது. அதனால் ஏமாற்றப்பட்டவர்கள் மீண்டும் போரட்டத்தைக் கையில் எடுக்கிறார்கள்.உயிரைப் பற்றியும் கவலைப் படாமல் உண்ணாவிரதப் போரட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டு உரிமைக் கோரிக்கைகளை உயரே பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.

என்னவொரு கொடுமை? ஆசியர் பயிற்சி முடித்தால் பள்ளிகளில் ஆசிரியர் வேலை வழங்கும் அரசு,ஓட்டுநர் பயிற்சி முடித்தால் ஓட்டுநர் பணி வழங்கும் அரசு வனத்தைப் பற்றி,தாவரங்களின் ஆதி அந்தங்களை அலசி ஆராய்ந்து பயிலும் மாணவர்களுக்கு மட்டும் தமிழக அரசு வேலை வாய்ப்பை வழங்குவதில்லை என்பது வினோதமாக இருக்கிறது.

காடுகளின் பரப்பு வெகுவாகக் குறைந்துவிட்ட தமிழகத்தில் மழைவளமும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது.இதனால் வேளாண்மை செய்யும் நிலப்பரப்பு குறைந்து உணவுப் பொருட்களுக்கு அண்டை மாநிலங்களை நம்பி இருக்கும் சூழல் வந்துவிட்டது. அரிசிக்கும் காய்கறிகளுக்கும்,இறைச்சிக்கும் கர்நாடகத்தையும்,ஆந்திரத்தையும் எதிர்பார்த்து தினமும் கையேந்தி நிற்கும் அவலம் நம் கண்முன்னே நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.இருக்கும் கொஞ்சநஞ்ச விலை நிலங்களையும் அந்நிய கம்பெனிகளுக்கும், ரியல் எஸ்டேட் மாபியாகளுக்கும் தாரை வார்த்து விட்டு, வாழ்வாதாரம் முற்றிலும் அற்றுப் போன நிலையில் தமிழன் நலிந்து கிடக்கிறான்.

'தமிழக காடு வளர்ப்பு: ஜப்பானுக்கு இருக்கும் அக்கறை நமது அரசுக்கு இல்லையே...! '

இப்படிப்பட்ட சூழலில் வனவளம் வளர்க்க படிக்கும் தலைமுறையை போராட்டத்தால் முடக்கிடும் மனம் தமிழக அரசுக்கு எப்படித்தான் வருகிறதோ தெரியவில்லை. காவல்துறையை மட்டுமே நவீனப் படுத்தும் பணிக்காக கோடிக்கணக்கில் வாரி வழங்கும் தமிழக அரசு, நாட்டின் உயிர் ஆதாரப் பிரச்சனைக்கு கிள்ளியும் கொடுக்க மறுப்பது ஏன் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

தமிழகத்தில் காடு வளமாக இருந்தால்தான் தங்களுக்கு மழை பொழியும், குடிநீரும் உணவும் கிடைக்கும் என்பதற்காக ஆண்டு தோறும் காடுகள் பெருக கோடிகளை ஜப்பான் அரசு இங்கு கொட்டுகிறது. எங்கோ உள்ள ஜப்பான் நாட்டிற்கு இருக்கும் அக்கறை, சொந்த நாட்டு அரசுக்கு  ஏன் இருப்பதில்லை?

படித்தவர்கள் காடுகளை வளர்க்கமாட்டர்கள் என்று நம்புகிறதோ? என்றுகூட கேட்க தோன்றுகிறது.காடு செழித்தால் நாடு செழிக்கும் என்று சுவர்களில் மட்டுமே வாசகங்களை எழுதியும் மாட்டியும் வைத்துவிட்டால் போதுமா? அதற்கான பணிகளை மேற்கொள்ளமால் இருந்தால் மந்திரம் போட்டா மரங்களை வளர்க்க முடியும்.ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும். விரைந்து செயல்படவும் வேண்டும்.
''வனச்சரகர், வனவர் ஆகிய பணியிடங்களில் 100 விழுக்காடு இட ஒதுக்கீடு கோரி 25 நாட்களாக போராட்டம் நடத்திவரும் மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி மாணவர்களின் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப் படவேண்டும்.

வனக் கல்லூரி மாணவர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவையே.தங்களிடம் இருந்து 

'தமிழக காடு வளர்ப்பு: ஜப்பானுக்கு இருக்கும் அக்கறை நமது அரசுக்கு இல்லையே...! '

பறிக்கப்பட்ட உரிமைகளைத்  திரும்ப வழங்க வேண்டும் என்று வலியுறுத்திதான் அவர்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு அவர்களின் வேலைவாய்ப்பு உரிமை பறிக்கப்பட்டது. இதை எதிர்த்து கடந்த ஆண்டே மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த விஷயத்தில் மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வனக்கல்லூரி மாணவர்கள் பிரச்சினையில் தமிழக அரசு பொறுப்பான முறையில் செயல்பட்டிருந்தால் இந்தப் போராட்டத்தை எப்போதோ முடிவுக்கு கொண்டு வந்திருக்க முடியும். ஆனால், மாணவர்களின் வாழ்வாதாரப் பிரச்னையை விட ஜெயலலிதா பெற்ற தண்டனையால் வந்த ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில்தான் முதல்வரும், அமைச்சர்களும் மக்களின் பிரதிநிதிகளும் முனைப்போடு இருந்தனர்.

காசுகொடுத்தும், பரிசுப் பொருட்கள் கொடுத்தும், மணக்க மணக்க விருந்து நடத்தியும் வாக்களர்களைக் கவர்ந்து வாக்குகளைப் பெற்று அவர்களின் `முதல்வர்` ஜெயலலிதா விடம் நல்ல பேரெடுக்க செயல்பட்டவர்கள் நாட்டு நலனில் அக்கறையில்லாமல் இருப்பதுதான் ஜனநாயகம் போலும்.

'தமிழக காடு வளர்ப்பு: ஜப்பானுக்கு இருக்கும் அக்கறை நமது அரசுக்கு இல்லையே...! '

சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டுள்ள மாணவர்களின் உடல்நிலை மோசமடைந்து வரும் நிலையில், அரசு உடனடியாக தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.

வனவியல் பட்டப்படிப்பு படித்த மாணவர்கள் மற்ற பணிகளுக்கு செல்வது சாத்தியமல்ல. இதை கருத்தில் கொண்டு வனத்துறை சார்ந்த வனச்சரகர், வனவர் ஆகிய பணிகளில் வனக் கல்லூரி மாணவர்களுக்கு 100 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.


  பாரி ( மேட்டுப்பாளையம்)

   

  டாபிக் எதுவானாலும் நீங்களும் வாசகர் பக்கத்திற்கான உங்களது கட்டுரையை   vasagarpakkam@vikatan.com    என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.