Published:Updated:

புலிகளை கொல்லாதீங்க!

புலிகளை கொல்லாதீங்க!
புலிகளை கொல்லாதீங்க!

புலிகளை கொல்லாதீங்க!

புலிகளை கொல்லாதீங்க!

                                               வாசகர் பக்க கட்டுரை

”காவல் துறையின் நடவடிக்கை தற்போதைய சூழலை பாதுக்காப்பாக வைப்பது. வனத்துறையின் நடவடிக்கைகள் எதிர்காலத்தை வளமாக வைப்பது. அத்தகைய வனத்துறையின் செயல்பாடுகள் வெளியில் தெரிய வேண்டும்.

அதோடு காடுகளை பாதுக்காக்கும் பணியினை மக்களும் சேர்ந்து செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தேனி நலம் மருத்துவமனையின் மருத்துவர் ராஜ்குமார் மற்றும் தேனி வனத்துறையின் வார்டன் சொர்ணப்பன் ஆகியோர் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக உள்ள கம்பம் வென்னியார் மலைப்பகுதிக்கு ட்ரெக்கிங் ஏற்பாடு செய்தனர்.

இது குறித்து மருத்துவர் ராஜ்குமார் கூறுகையில், ''தரைக்காடுகள் குறைவாக உள்ள தென்மாநிலங்களில் இந்த வென்னியார்-மேகமலை காடுகள் சற்று வனப்புடன் அடர்த்தியாக இருக்கின்றன. இந்த பகுதியில் அரியவகை உயிரினங்களும், கிரேட் இண்டியன் கம்பிள் எனப்படும் இருவாச்சி பறவைகளும் இருக்கின்றன" என்றார்.

புலிகளை கொல்லாதீங்க!

வார்டன் சொர்ணப்பன் கூறும்போது, ''முல்லை பெரியாறு கட்டி முடிப்பதற்கு முன் உத்தமபாளையம் மக்கள், எத்தியோபியா நாடு போல் வறுமையில தான் இருந்தார்கள். அவர்களை காப்பாற்றி இந்த நிலைக்கு கொண்டு வந்தது முல்லை பெரியாறு. இது பெரியாறு–முல்லை, கொடியாறு என இரு ஆறுகளின் தொகுப்பு. முல்லை கொடியாறு, திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் சிவகிரி மலையில இருந்து 33 கி.மீ. மலையில பாய்ந்து தாணிக்குடி என்ற இடத்தில் பெரியாறு அணையுடன் இணைகிறது.

புலிகளை கொல்லாதீங்க!

முல்லையாறு, மேகமலையில் ஆரம்பித்து 15 கி.மீ. பாய்ந்து அணையில் கலக்கிறது. இப்படி உருவாகி அரபிக்கடலில் கலந்த ஆற்றை திருப்பி நம்மை செழிக்க வைத்தனர். தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் மட்டும் தான் 33 சதவிகிதத்துக்கும் அதிகமான காடுகள் இருக்கின்றன. அதில் தேனியும் ஒன்று.

புலிகளை கொல்லாதீங்க!

இந்த மலைப்பகுதிகளில்தான் ஆங்கிலேயர்கள் முதலில் சொந்தமாக தேயிலை பயிரிட்டார்கள் (அரசாங்கம் சார்பில் பயிரிடாமல் தனியாக). இந்தப் பகுதிகளில் இருந்துதான் ஏலக்காய் பெருமளவு ஏற்றுமதி செய்யப்பட்டது. அதனை ஒட்டியுள்ள காடுகளில் விளைவித்த பருத்தியினால் இன்று நெசவுத்தொழில் வளர்ச்சியில் உள்ளது. கண்ணகி விண்ணோக்கி மேல சென்ற இடமான ''விண்ணோந்தி பாறை"யும் இந்தப் பகுதியில தான் உள்ளது.

புலிகளை கொல்லாதீங்க!

ஆர்கிட் எனப்படும் பூக்கள் இந்த பகுதியில் 148 வகைகள் இருக்கின்றன. இயற்கையான பூக்களை போல இல்லாமல் வெவ்வேறு வகையான உருவத்தில், வெவ்வேறு வகையான வண்ணங்களில் இருக்கும் இந்த மலர்கள் பறிக்கப்பட்டு ஆறு மாதங்கள் வரை கெடாத தன்மையுடைவை. அத்தோடு, இந்த ஒவ்வொரு ஆர்கிட்டிற்கும் அதனை வடிவையொத்த வண்ணத்தில் பூச்சிகளும் இருக்கும். இவை, தனக்கு ஆபத்து வரும்போது பூக்களைப்போல மாறிக்கொள்ளும். அத்தகைய 148 வகையான ஆர்கிட்களுக்கு, 148 வகையான பூச்சிகளும்  இருக்கும் வனமாக இந்த மலைப்பகுதிகள் உள்ளன.

புலிகளை கொல்லாதீங்க!

ஹனுமன் மந்தி, கருமந்தி, போனட் மக்காக் எனப்படும் நம்முடைய ஊரில் காணப்படும் சாதாரண வகை குரங்குகள் மற்றும் தேவாங்கு போன்ற குரங்கினங்கள் இங்கே வாழ்கின்றன. இவற்றில், மந்தி எனப்படுபவை சைவம் மட்டுமே உண்ணக்கூடியவை. குரங்குகள் அசைவம், சைவம் இரண்டையும் உண்பவை. இந்த பகுதியில் தான் மலைகள் கிராமப்பகுதிக்குள்ளும் பரவியிருப்பதால் வெவ்வேறான தாவரங்களையும், சீதோஷ்ண நிலையையும் உணர்கிறோம். சீப்புகள் செய்ய பயன்படும், ஈர் கொல்லி மரங்கள் மட்டுமே இங்கு ஒரே தொகுப்பாக இருக்கின்றன.

புலிகளை கொல்லாதீங்க!

வைகை அணையில் தண்ணீர் உற்பத்தி செய்ய வேண்டுமென்றால் இந்த பகுதியில் உள்ள காட்டு மாடு, புலி, சிறுத்தைகளை பாதுகாத்து வனபகுதியை பசப்பாக வைக்க வேண்டும். களக்காடு-முண்டந்துறை, ஹிமாலயா பகுதிகளில் காணப்படும் இருவாச்சி பறவை இனங்கள் இப்பகுதியில் 28 பறவைகள் இருக்கின்றன. புலியும், இருவாச்சியும் இருப்பதால் இது ஆரோக்கியமான காடு.

புலிகளை கொல்லாதீங்க!

இதனை ஒட்டியுள்ள மேகமலையில் 240 வகையான மரங்களும், 150க்கும் மேற்பட்ட வரையாடுகளும், உலகத்திலேயே 4,200 எண்ணிகையிலேயே இருக்கும் சிங்கவால் குரங்குகள் 200 எண்ணிக்கையிலும், 150க்கும் மேற்பட்ட யானைகளும் உள்ளன. இந்த விலங்கினங்களும், தாவரங்களுமே காட்டின் சீதோஷண நிலையை நிர்ணயம் செய்கின்றன.

இன்று நாம் ஒவ்வொருவரும் ஐந்து கோடி ரூபாய் அளவுள்ள காற்றை பயன்படுத்துகிறோம். இதன் மதிப்பு அதனை விலை கொடுத்து வாங்கும்போதுதான் தெரியும். இத்தகைய சிறப்புகளை உடைய வனப்பகுதிகளை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. அத்தோடு,   புலிகளை பாதுகாத்தால்தான் வனம் வளமாகும். இப்பகுதியிலுள்ள வைகை பெருகும்" என்றார்.

- தமிழரசன் & அன்பரசு

  டாபிக் எதுவானாலும் நீங்களும் வாசகர் பக்கத்திற்கான உங்களது கட்டுரையை   vasagarpakkam@vikatan.com    என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு