Published:Updated:

''அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்!''

விஜயலட்சுமியின் வியூகம்

''அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்!''

விஜயலட்சுமியின் வியூகம்

Published:Updated:
##~##

''அடுத்த படத்துக்காக இப்போ கொஞ்சம் வெயிட் போட்டிருக்கேன்!'' - பொய் சொல்கிறார் விஜயலட்சுமி. ''ஐயோ, சத்தியமா இப்போ வெயிட் போட்டிருக்கேன். இயல்பாவே நான் ரொம்ப ஸ்லிம். கொஞ்சமா வெயிட் போட்டா நல்லா இருக்கும்னு சொன்னாங்க. சும்மாவே பிரியாணின்னா, நான் வெளுத்துக் கட்டுவேன். வெயிட் போடணும்னு சொன்னதும் கேட்கவா வேணும்? தினமும் பிரியாணியா பிரிச்சு மேயுறேன். ஐஸ்க்ரீம், மில்க் சாக்லேட்னு ஆசைப் பட்டதை எல்லாம் வெளுத்துக் கட்டுறேன். ஆனாலும், வெறும் மூணு கிலோதான் ஏறி இருக்கு!'' - அளவெடுத்த அழகு, தெற்றுப் பல் சிரிப்பில் இரட்டிப்பாகிறது.

''அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''என்னைப்போன்ற ஸ்லிம் உடல்வாகுக்குப் பெரிய அளவில் பயிற்சிகள் தேவை இல்லைன்னு சொல்வாங்க. ஆனாலும், நான் வாரத்துக்கு மூணு நாள் ஜிம்முக்குப் போயிடுவேன். ஒருநாள் உடலின் மேற்பகுதிகளுக்காகப் பயிற்சி எடுத்தால், மறுநாள் இடுப்புக்குக் கீழே உள்ள பகுதிகளுக்குப் பயிற்சி எடுப்பேன். இதனால் உடலுக்குப் பெரிய அசதி இருக்காது. அதே நேரம் ஃபிட்னெஸுக்கும் பிரச்னை இருக்காது. ஜிம்முக்குச் செல்லும் நாட்களில் டயட்ல இருக்க மாட்டேன். ஜிம்முக்குப் போகாத நாட்களில் ரொம்ப கச்சிதமா டயட்ல இருப்பேன். கை, கால்களை உறுதி ஆக்குற மாதிரி ரொம்ப நேரம் பயிற்சி எடுப்பேன். உடலை வருத்திச் செய்கிற பயிற்சிகளைவிட, மனசு லயிச்சு செய்ற பயிற்சிகள்தான் நம்மை உற்சாகமா வெச்சிருக்கும். நேரம் கிடைக்கிறபோது எல்லாம் சைக்கிள்ல ரவுண்ட் அடிப்பேன். நான் சைக்ளிங் பண்ற ஏரியா முழுக்க மரங்கள்தான். அதனால செம ஃப்ரெஷ் காத்து போனஸ் பலன்.

அதே மாதிரி, எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம் யோகா. ஆனா, இப்போ வரை என்னால முழுமையா யோகா கத்துக்க முடியலை. எந்தப் பயிற்சிகளிலும் கிடைக்காத மன நிம்மதி யோகாவில் கிடைக்குமாம். அதனால சீக்கிரமே முழுமையா யோகா கத்துக்குவேன்!'' நம்பினால் நம்புங்கள்... 'களுக்’ என்று சத்தம் வருமாறே சிரிக்கிறார் விஜயலட்சுமி.

அழகின் ரகசியம் கேட்டால், ''ஆயில் புல்லிங்!'' என்கிறார் அசத்தல் புன்னகையோடு.

''அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்!''

''ஒவ்வொரு நாளும் ஆயில் புல்லிங் பண்ணாமத் தொடங்காது எனக்கு. நம்ம வாய்தான் எல்லா நோய்க் கிருமிகளுக்கும் வாசல்னு சொல்வாங்க. அதனால், தினமும் ஆயில் புல்லிங் பண்ணுவேன். தூய்மையான நல்லெண்ணெய் இரண்டு ஸ்பூன் வாயில் ஊற்றி, கொஞ்ச நேரம் வெச்சிருந்து, பற்களின் இடுக்குகளில் எல்லாம் படியுற மாதிரி கொப்பளிக்கணும். வாயில் இருந்து வெளியேறும் எண்ணெய் வெள்ளையா இருந்தால், அதற்கு மேல கொப்பளிக்க வேண்டியது இல்லை. மஞ்சள் நிறமா இருந்தா... இன்னும் கூடுதலாக் கொப்பளிக் கணும். கொஞ்ச நேரம் வாய் முழுக்க எண்ணெய்ப் பசையா இருக்கும். ஆனா, போகப் போகப் பழகிடும். ரொம்ப சிம்பிளான பயிற்சி இது. உடம்புக்கு ஏகப்பட்ட நன்மை அளிக்கும் பயிற்சி இது! ரத்த அழுத்தம் தொடங்கி, முகப்பரு வரை அத்தனை வித சிக்கல்களுக் கும் ஆயில் புல்லிங் தீர்வு கொடுக்கும். இது நம்ம முன்னோர்கள் 'எண்ணெய் வைத்தியம்’னு ஏற்கெனவே கையாண்ட மருத்துவ முறைதான். இடையில நாமதான் மறந்துட்டோம். அதனால், என் நண்பர்கள் எல்லா ருக்கும் ஆயில் புல்லிங்கை அக்கறையா வலியுறுத்துறேன்.

''அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்!''

ஆயில் புல்லிங் முடிச்சுட்டு, பாதாம் உள்ளிட்ட சத்துப் பொருட்கள் அடங்கிய மிக்ஸ்டு சூப் குடிப்பேன். எப்பவுமே அதிகமா சாப்பிட மாட்டேன். அதே நேரம், எதையுமே தவிர்க்கவும் மாட்டேன். ஸ்வீட் சாப்பிடுறதுன் னாகூட சின்னதா ஒரு பீஸ் எடுத்துச் சாப்பிடுவேன். எதையுமே அதிகமா சாப்பிடுறப்ப தான் சிக்கலே ஆரம்பிக்குது!'' - ஆரோக்கிய ஃபார்முலாக்களை அள்ளிவைக்கும் விஜயலட்சுமி, தினமும் இளநீர் குடிப்பாராம்.

''உடலை எப்பவுமே குளிர்ச்சியா வெச்சுக்குறதுதான் அழகின் அடிப்படை. அதுக்கு இளநீர்தான் பெஸ்ட் சாய்ஸ்!''

- இரா.சரவணன்
படங்கள்: வீ.நாகமணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism