Published:Updated:

பூமியின் நுரையீரல் !

பூமியின் நுரையீரல் !


பூமியின் நுரையீரல் !
பூமியின் நுரையீரல் !
 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பூமியின் நுரையீரல் !
பூமியின் நுரையீரல் !

உலகில் உள்ள காடுகளிலேயே மிகப்பெரியது அமேசான் காடுகள்தான். அடர்த்தி யானதும் இவைதான். அமேசான் என்றவார்த் தைக்கு, 'திடகாத்திரமான, உயரமான பெண்' என்று ஓர் அர்த்தம் இருப்பதால், அமேசான் நதியை 'நதிகளின் ராணி' (4,000 மைல்கள் நீளம்) என்று அழைக்கிறார்கள். நதியைச் சூழ்ந்திருக்கும் காடு, சந்தேகமே இல்லாமல் ராஜாதானே?

பிரேசில், கொலம்பியா, வெனிசுலா உள்ளிட்ட எட்டு நாடுகளை எல்லைகளாகக் கொண்ட அமேசான் காடு, 25 லட்சம் சதுர மைல்கள் பரப்பளவுகொண்டது. பூமிப் பந்தின் மொத்த பிராண வாயுவில் 20 சதவிகிதம் இங்குதான் உற்பத்தியாகிறது. உலகப் பறவை இனங்களில் மூன்றில் ஒரு பங்கு இங்குதான் இருக்கின்றன. உலகில் உள்ள ஒரு கோடிக்கும் மேலான உயிரினங்களில் (தாவரம், விலங்கு, பூச்சி) அமேசான் காடுகளில் மட்டுமே 50 லட்சத்துக்கும் மேல் உண்டு. 2,500 வகை மீன்கள், 1,500 வகைப் பறவைகள், 1,800 வகை வண்ணத்துப்பூச்சிகள், 200 விதமான கொசுக் கள் இந்த காடுகளில் உள்ளன.

பூமியின் நுரையீரல் !

இங்கு 20 ஆயிரம் ஆண்டுகளாக பழங் குடியினர் வாழ்ந்து வருவதாக ஆய்வுகள் சொல்கின்றன. கி.பி.1500-ல் 6,090 லட்சம் பழங்குடியினர் வாழ்ந்தனர். ஆனால், இப்போதோ வெறும் 2.5 லட்சம் பேர்தான். இங்கு வாழும் 215 பழங்குடி குழுக்களைச் சேர்ந்த மக்கள் 170 வகையான மொழிகள் பேசுகின்றனர். அமேசான் காடுகளை நான்கு தளங்களாகப் பிரிக்கலாம். மேல் தளத்தில் கழுகு, பருந்து போன்ற பறவைகளும், அடுத்தத் தளத்தில் குரங்கு போன்ற உயிரி னங்களும், மூன்றாவது தளத்தில் பூச்சிகள், ஊர்வன போன்ற விலங்குகளும் வாழ்கின்றன. தரைப் பகுதி பயங்கர காட்டு விலங்குகளுக்கானது. (அனகோண்டா இருப்பது இந்தக் காடுகளில்தான்).

இந்தக் காடு மற்றும் நதியின் ஆயுள் கிட்டத்தட்ட 5.5 கோடி வருடங்கள். அமேசான் நதி 1,100 துணை ஆறுகளை தன்னோடு இணைத்துக்கொண்டு, பிறக்கும் இடத்தில் இருந்து சுமார் 6,712 கி.மீ. கடந்து வந்து கடலில் கலக்கிறது. இங்கு இருக்கும் 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட தாவரங்களை இன்னமும் உலகத் தாவரவியல் வல்லுநர்களே படித்தது இல்லை என்பது ஒன்றே அமேசானின் பிரமாண்டத்தை உணர்த்தும்!

பா.முருகானந்தம், தீபக்,
அ.ஆதித்தியன்

 
பூமியின் நுரையீரல் !
பூமியின் நுரையீரல் !