Published:Updated:

குளிக்காதே சிரிக்காதே !

குளிக்காதே சிரிக்காதே !


குளிக்காதே சிரிக்காதே !
குளிக்காதே சிரிக்காதே !
குளிக்காதே சிரிக்காதே !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
குளிக்காதே சிரிக்காதே !

'சிங்க ராஜா கொஞ்சம் சிரிங்க!' என்று சொல்ல முடியாதே... அப்புறம் எப்படி டிஸ்கவரி சேனலில் விலங்குகளைப் பக்காவாக படம் பிடிக்கிறார்கள்? உலகின் எல்லா விலங்கு''கள் சார்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி'களுக்கும் ஒரே ரூல்ஸ்தான். அது, 'காத்திரு... கவனமாக இரு!' என்பதுதான். விலங்குகளைப் படம் பிடிக்கக்காட்டுக் குள் கிளம்பு'ப'வர்களுக்கு,'திரும்பி வருவோமா?', 'எப்போது வருவோம்?' என்பதற்குப் பதில் தெரியாது.

டேவிட் அட்டன்பரோ என்கிற கேமராமேன் ஆப்பிரிக்' காவில் ஓர் எருதுவின் வாழ்க்கையைப் பதிவு செய்தார். ஒரு குறிப்பிட்ட இன எருது, இன்'னொரு இடத்துக்கு இடம்பெயர்ந்து திரும்பி வரும்வரைகாத்து இருந்தார். அந்த அசைன்மென்ட்டுக்கு அவர் எடுத்துக்கொண்ட காலம் ஒரு வருடம்!

டேவிட் மெயிட்லாண்ட் என்கிற கேமரா'மேன் ஒரு பாப்புலரான புகைப் படம் ஒன்றை எடுத்தார். ஒரு பாம்பு, தவளை யைப் பிடித்துவிட்டது. தவளையும் விட்டுக் கொடுக்'காமல் பாம்பின் கழுத்தை இறுக்கஆரம் பித்துவிட்டது. இந்த உயிர்ப் போராட்டத்தை படம் எடுக்க டேவிட் ஐந்து மணி நேரம் காத்தி''ருந்தார். காத்திருந்ததன் பலனாக 2008-ம் ஆண்டு நேஷனல் ஜியாக்ரஃபியின் சிறந்த வனவிலங்குப் புகைப்படம் என்கிற பெருமை அந்தப் படத்துக்குக் கிடைத்தது. வன'விலங்கு'''களைப் படம் எடுப்பவர்கள் இரண்டு மூன்று பேர் மட்டுமே உள்ள

குளிக்காதே சிரிக்காதே !

குழுவாகச் செல்வார் கள். குறைவான ஆடைகளையே அணிவார்கள். ஏனெனில், அவர்கள் எடுத்துச் செல்லும் டெக்னிக்கல் பொருட்களின் எடை மிக அதிகம். இரவு காட்டுக்குள் தங்க வேண்டி'இருந்தால் மரங்களில் ரெடிமேட் வீடு அமைப் பார்கள். சில சமயம் மரக் கிளைகளில் தங்களை கயிறால் கட்டிக்கொண்டு காத்திருப்பார்கள். தேவைப்'பட்டால் மட்டும் அடிக்குரலில் பேசுவார்கள். சிரிக்கவே மாட்டார்கள். வாரக் கணக்கில் குளிக்க முடி'யாது. கொசு, அட்டைப் பூச்சி கடிக்கும். தாங்கிக்கொள்'வார்'கள். கொஞ்சம் சாப்பிடுவார்கள். அதைவிட கொஞ்ச'மாகவே தண்ணீர் குடிப்பார்கள். ஒன் பாத்ரூம் போனால், அதுவே வனவிலங்குகளை அழைக்கும் காலிங் பெல் ஆகி விடும். விலங்குகளுக்கு மிக அருகில், அவற்றை தொந்தரவு செய்யாமலேயே வாழ்வார்கள்.

என்ன... ஒரு ட்ரிப் போயிட்டு வர்றீங்களா?

ஸ்ம்ருதி

 
குளிக்காதே சிரிக்காதே !
குளிக்காதே சிரிக்காதே !