Published:Updated:

அடியாத்தீ காடுகள் !

அடியாத்தீ காடுகள் !


அடியாத்தீ காடுகள் !
அடியாத்தீ காடுகள் !
.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அடியாத்தீ காடுகள் !
அடியாத்தீ காடுகள் !

காடுகள்தான் நீரின் ஆதாரம். ஆனால், ஆச்சர்யமாக நீருக்கு அடியிலும் காடுகள் இருக்கின்றன. இரண்டு வகை நீர்க் காடுகள் இருக்கின்றன. முதல் வகை அலை யாத்தி காடுகள். இது பெரும்பாலும் கடல் நீருக்கு அருகில் மட்டுமே வளரும். இந்தத் தாவரங்கள் தண்டுகளிலும் கிளைகளிலும் உள்ள துவாரங்களின் மூலம் ஆக்ஸிஜனை உள் இழுத்துக்கொள்ளும். நீர்மட்டம் அதி கரிக்கும்போது சிறிய குழல்களை வெளியே நீட்டி சுவாசிக்கும். கடலுக்கு அருகில் இருந் தாலும் உப்புச்சத்தை வடிகட்டியே நீரை எடுத்துக்கொள்ளும். இதன் இலைகளின் மூலமாக நீர் ஆவியாகுதல் மிக மெதுவாகவே நடக்கும். அதனால், மழை சுழற்சிக்கும் இந்தக் காடுகளுக்கும்

சம்மந்தம் இல்லை. ஆனால், சுனாமி அலைகளைத் தடுத்து, அதன் வேகத்தை மட்டுப்படுத்த உதவுவது இந்த அலையாத்தி காடுகள்தான். உலகின் மிகப் பெரிய அலையாத்தி காடுகள் பிரேசிலில் (26 ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவு) இருக்கிறது. இரண்டாவது இடம் நமது பிச்சாவரம் காடு களுக்கு. கடந்த சில வருடங்களாக பிச்சாவரத் தில் அலையாத்தி காடுகளின் அடர்த்தி அதிகரித்து வருவது மனதுக்கு ஆறுதலான விஷயம்.

இரண்டாவது வகை கெல்ப் காடுகள். கடலுக்கு அடியில் வளர்ந்திருக்கும் பூஞ்சை வகைச் செடிகள் இவை. செடிகள் என்றால் தொட்டிச் செடிகள் போன்றவை அல்ல;

அடியாத்தீ காடுகள் !

சுமார் 20 அல்லது 30 அடி உயரத்துக்கு வளர்ந்து மிரட்டும். உலகின் மிக முக்கியமான, பெரிய காடுகளின் பட்டியலில் இந்த கெல்ப் காடுகளும் உண்டு. இந்தக் காடுகள் கடலுக்கு அடி யில் எந்த தட்பவெப்ப சூழலி லும் வளரும்.

இந்தத் தாவரங்கள் நீருக்கு அடியில் கிடைக்கும் வெளிச் சம், நீரில் கலந்திருக்கும் ஆக்ஸிஜன், பாறைகளில் இருக்கும் தாதுக்களை உட்கொண்டு வளருபவை. மெல்லிய நாணல்போல இருக்கும் ஆயிரக்கணக்கான தாவரங் கள் ஒன்று சேர்ந்து நிற்பதுதான் இந்த கெல்ப் காட்டின் பலம். கடலுக்கு அடியில் அடிக்கடி ஏற்படும் சுழல்களை யும் சுனாமிகளையும் இந்தத் தாவரங்கள்தான் தடுக்கின்றன. சுற்றுச்சூழல் மாசு ஒன்றுதான் இவற்றின் முக்கிய மான வில்லன்!

கார்த்திகா

 
அடியாத்தீ காடுகள் !
-
அடியாத்தீ காடுகள் !