Published:Updated:

காடு ஏன் அழிக்கப்படுகிறது?

காடு ஏன் அழிக்கப்படுகிறது?


.காடு ஏன் அழிக்கப்படுகிறது ?
காடு ஏன் அழிக்கப்படுகிறது?
காடு ஏன் அழிக்கப்படுகிறது?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
காடு ஏன் அழிக்கப்படுகிறது?

அழிக்கப்படும் வனங்களுக்குப் பின் ஓர் அரசியல் இருக்கிறது. முன்னொரு காலத்தில் இந்தியப் புவியியல் பரப்பு சுமார் 20 சதவிகிதம் காடுகளால் நிறைந்துஇருந்தன. தேசிய வனத் திட்டத்தின்படி மூன்றில் ஒரு பங்கு நிலம் மரங்களால்சூழப் பட்டு இருக்க வேண்டும். 45 ஆயிரம் தாவரங்கள், 81 ஆயிரம் உயிரினங்கள் மட்டுமே அறிமுகமாகியிருக்கும் நம் காடுகளில், 5,150-க்கும் அதிகமான தாவரங்களும் 1,837-க்கும் அதிகமான உயிரினங்களும்மிக வேகமாக அழிந்துவரும் பட்டியலில்இடம் பெற்றிருக்கின்றன. 95 தேசியப் பூங்காக்கள், 500 வன விலங்கு சரணாலயங்கள், இரண்டு பல்லுயிர் பாதுகாப்புமையங்கள்... போன்றவைகளுக்காக சுமார் ஐந்து சதவிகித காடு கள் ஒதுக்கப்பட்டாலும்கூட, நம் காடுகளில்தான் மிக வேகமாக அழிந்துவரும் உயிரினங்களும் இருக் கின்றன. இதைப் புரிந்துகொள்வதே சூழலியல் அரசி யலின் முதல் நிலை.

தமது நாட்டுக் காடுகளை முடிந்த வரையில் பாதுகாக்கும் வல்லரசு தேசங்கள், இந்தியா போன்ற வளரும் நாடுகள் தங்களின் காட்டு வளங்களைஏற்று மதி செய்வதை ஊக்குவிக்கின்றன. இந்த சூழ்ச்சியின் அரசியலைப் புரிந்துகொள்வது சூழலியல் அரசிய லின் இரண்டாம் நிலை. பெருகிவரும் மக்கள் தொகையால் சுற்றுச்சூழல் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்ற விழிப்பு உணர்வு இன்னும் மக்களி டம் ஏற்படவில்லை. பொருளாதார நிலைப்பாட்டில் இருந்தே மக்கள் தொகைப்

காடு ஏன் அழிக்கப்படுகிறது?

பெருக்கம் பார்க்கப்படுகிறதே தவிர, வாழ்வாதார நிலையில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காடுகள் அழிக்கப் படுவது மக்களின் குடியேற்றத்துக்காகவா, அல்லது முதலாளிகளின்லாபத் துக்காகவா என்ற கேள்வியை எழுப் பினால், சூழலியல் அரசியலின் மூன்றாம் நிலை புரியும்.

இரண்டாம் உலகப் போரின்போது தூவப்பட்ட பார்த்தீனிய விதைகள் முதல் பசுமைப் புரட்சி, பி.டி.ரக விதைகள்வரை மேலை நாடுகளின் சதி விருட்சமாகி வளர்ந்து நிற்கின்றன. ரசாயன உரங்களால் நம் நிலங்கள் பாழ்பட்டு இருப்பதை உணரும் முன்பே 'மரபணு மாற்றப்பட்ட காய்கறி' என்று அடுத்த ஆயுதத்து டன் பாய்கின்றன வல்லாண்மைகள். இப்படி நம் வாழ்க்கை இயற் கைக்கு எதிராகத் திருப்பப்பட்டு இருப்பதை உணர்ந்தால், அது சூழலியல் அரசியலின் நான்காம் நிலை.

செல்வக் கிடங்காக இருந்த இந்தியா இப்போது குப்பைக் கிடங் காக இருக்கிறது. யாரும் வனங்களை அரவணைக்கத் தயாராக இல்லை. வனத்தின் வளங்களைச் சுரண்டுவதே அவர்களின் குறி. சம்போ சிவ சம்போ!

ந.வினோத்குமார்

 
காடு ஏன் அழிக்கப்படுகிறது?
காடு ஏன் அழிக்கப்படுகிறது?