Published:Updated:

கம்யூனிஸ்ட் காடு!

கம்யூனிஸ்ட் காடு!


கம்யூனிஸ்ட் காடு !
கம்யூனிஸ்ட் காடு!
கம்யூனிஸ்ட் காடு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கம்யூனிஸ்ட் காடு!

கம்யூனிஸம் உருவான ரஷ்யாவில் ஒரு காட்டின் நிறமும் சிவப்புதான். வேர்ம்-வுட் ஃபாரஸ்ட் என்றழைக்கப்பட்ட காடு 1986-ம் வருடத்துக்குப் பின் ரெட் ஃபாரஸ்ட் ஆனது. காரணம் அணுக் கதிர்கள். சோவியத் ரஷ்யாவின் உக்ரைன் மாகாணத்தில் இருக்கிறது

கம்யூனிஸ்ட் காடு!

செர்னோபில் அணு மின் நிலையம். 1986-ம் வருடம் ஏப்ரல் மாதம் அங்கு ஒரு அணு உலை வெடித்துச் சிதறியது. கதிர்வீச்சு பாதிப்பால் 56 பேர் உடனடியாக இறந்தார்கள். எட்டு லட்சம் பேர் கடுமையான கதிர்வீச்சுப் பாதிப்புக்கு உள்ளானார்கள். ரஷ்ய அரசு மக்களை உடனடியாக வெளியேற்றியது. ஆனால், மரங்களை என்ன செய்ய முடியும்? அணு உலையைச் சுற்றி 10 கி.மீ. தொலைவுக்குச் செழித்து வளர்ந்து இருந்த பனை மரங்கள் அத்தனையும் கதிர்வீச்சுத் தாக்கத்தால், பட்டுப்போய் சிவந்துவிட்டன. இப்போது அந்தக் காட்டில் வழக்கத்தைவிட பெரிய மரங்களும், வளைந்த கிளைகளை உடைய மரங்களும் முளைக்கின்றன. விலங்குகள் ஊனமாகப் பிறக்கின்றன. குருவிகளின் இறகில் வண்ணங்களே இல்லை. மனிதர்கள் செய்த தவறுக்காக, காட் டில் ஊனமாக அலைந்துகொண்டு இருக்கின்றன அப்பாவி விலங்குகள்!

கார்த்திகா

 
கம்யூனிஸ்ட் காடு!
-
கம்யூனிஸ்ட் காடு!