Published:Updated:

என்ன சத்தம் இந்த நேரம் ?

என்ன சத்தம் இந்த நேரம் ?


என்ன சத்தம் இந்த நேரம் ?
என்ன சத்தம் இந்த நேரம் ?
 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
என்ன சத்தம் இந்த நேரம் ?
என்ன சத்தம் இந்த நேரம் ?

இரவுகளில் காடு எப்படி இருக்கும்? பூமியின் நிலப்பரப்பில் வெறும் ஆறு சதவிகிதமே காடுகள் இருக்கின்றன. இந்த ஆறு சதவிகித இடத்தில்தான் உலகின் பெரும்பாலான ஜீவராசி கள் உயிர் வாழ்கின்றன. இவை நள்ளிரவில் 'குட் நைட்' சொல்லிப் படுத்துவிடும் என்றுநினைத்தால், அது தவறு. பூச்சிகள், மிருகங்கள், பறவைகள் இரவு நேரத்தில்தான் பெரும்பாலும் பேசிக்கொள் ளும். பேசுவது என்றால் பக்கத்தில் இருக்கும் விலங்கிடம் ரகசியம் பேசுவது அல்ல. இருட்டில் இணை எங்கே இருக்கிறது என்றே தெரியாது. அதனால், 'செல்லம் எங்கேடா இருக்க?' என்ற கேள்வியை இரவு முழுக்க ஒலிபரப்பிக்கொண்டே இருக்கும். தென் அமெரிக்காவில்

காணப்படும் ஒரு வகை குரங்குகள் எழுப்பும் காதல் ஒலி ஐந்து கி.மீ. தூரத்துக்கு கேட்கும். காங்கோ காடுகளில் காணப்படும் ஒரு வகை வெளவால்களின் தொண்டையே பரிணாம வளர்ச்சியால் மார்புவரை நீண்டுவிட்டது. அந்தளவுக்கு அந்த வெளவால்கள் பரம்பரை சவுண்ட் பார்ட்டிகளாக உள்ளன. சிங்கம், புலி, சிறுத்தை போன்றவற்றின் இணைகள் தொலைதூரத்தில் எங்கேயோ இருக்கும். இணையை அழைக்க அவைகள் காடே அதிர்கிற மாதிரி கர்ஜிக்கும். சிங்கம் கூப்பிட, பெண் சிங்கம் பதில் சொல்ல... நடுவில் எங்காவது நீங்கள் இருந்தால் குலைநடுங்கி விடும்.

ஆப்பிரிக்க யானைகள் எழுப்பும் ஒலி, அடர்ந்த காடுகளைக் கிழித்துக்கொண்டு பல கி.மீ. தூரம் தாண்டியும் கேட்கும். தன் இணை நடந்து வருகிற அதிர்வைவைத்து, எவ்வளவு தூரத்தில்இணை உள்ளது என்பதைக் கண்டுபிடித்துவிடும் அளவுக்கு யானைகள் கில்லாடிகள். சிம்பன்சி குரங்குகள் கால்களால் பூமியைத் தட்டி காதலிகளுக்கு மெசேஜ் அனுப்பும்.

என்ன சத்தம் இந்த நேரம் ?

ஒரே நேரத்தில் இப்படி ஓராயிரம் ஒலிபரப்புகள் நடக்கும்போது, அமைதியான உயிரினங்கள் எப்படி தகவல் அனுப்பமுடியும்? ஒரு சில விலங்குகள் தங்கள் உடலின் வாசனையையே தூது அனுப்பும். புனுகுப் பூனை, கஸ்தூரி மான் துவங்கி பட்டாம்பூச்சிகள் வரை சில உயிரினங்கள் வாசனையை வைத்துத்தான் வம்சத்தைவளர்க்கின்றன. சிப்பாய் எறும்புகள் என்று சொல்லப்படும் கண் பார்வை இல்லாத எறும்புகள் நூல் பிடித்த மாதிரி ஒன்றையன்று பின்பற்றி, வரிசையாகச் செல்லும். வழிநடத்துவது வாசனைதான். இரவுகளை இரைச்சல் ஆக்குவதில் முக்கியப் பங்கு தவளைகளுக்கு உண்டு. தவளைகளின் குரலைவைத்தே அந்தத் தவளையின் வயது, அளவு எல்லாவற்றையும் இணை தவளைகள் கண்டுபிடித்துவிடும். பிடித்திருந்தால் விரும்பிப்போகும். இல்லை என்றால் விலகிப்போகும்!

பி.ஆரோக்கியவேல்

 
என்ன சத்தம் இந்த நேரம் ?
என்ன சத்தம் இந்த நேரம் ?