பெட்ரிஃபைட் காடுகள் தெரியுமா? கல்லாக மாறிவிட்ட மரப் படிமங்கள்தான் இவை. சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு முன் சுனாமியால் வீழ்த்தப் பட்ட மரங்கள்இவை. மணல், சகதி, எரிமலைக் குழம்பு என பலவற்றா லும் மூடப்பட்டு மரம் மக்கிப் போக ஆரம்பித்தன. ஆனாலும் கொஞ்சம் கொஞ்சமாக மரத் துண்டுகளுக்குள் தாதுக்கள் நிறைந்த நீர் நுழைந்ததால் அதன் வடிவம் மட்டும் அப்படியே அச்சுபோல இப்போதும் இருக்கிறது. மரத்தின் வயதைக் கண்டுபிடிக்க உதவும் வளையங்கள் கூட மாறவில்லை. கிரேக்கத்தில் உள்ள லெஸ் வாஸ் தீவில் உள்ள கல் காடுதான் உலகின் மிகப் பெரிய கல் காடு. கிட்டத்தட்ட 150 சதுர கி.மீ. பரப்பளவு உள்ள காட்டுப் பகுதி இங்கு கல் காடாக மாறியிருக்கிறது. வருடா வருடம் 12 டன் அளவு ஒரிஜினல் கல் மரத் துண்டுகளை ஆட்டையைப் போடுகிறார்களாம் சுற்றுலாவாசிகள்.
இவனுங்க எப்பவுமே இப்படித்தான் பாஸ்!
தீபக், மன்னர்,
எம்.ஜி.பாஸ்கரராஜன்
|