Published:Updated:

மரங்கள் பலவிதம்...ஒவ்வொன்றும் ஒருவிதம்!

மரங்கள் பலவிதம்...ஒவ்வொன்றும் ஒருவிதம்!


மரங்கள் பலவிதம் ...ஒவ்வொன்றும் ஒருவிதம் !
மரங்கள் பலவிதம்...ஒவ்வொன்றும் ஒருவிதம்!
மரங்கள் பலவிதம்...ஒவ்வொன்றும் ஒருவிதம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மரங்கள் பலவிதம்...ஒவ்வொன்றும் ஒருவிதம்!

ஒவ்வொரு மரங்களுமே வித்தியாசமானவைதான். அதில் இவைகள் ரொம்பவே வித்தியாசமானவை...

'செகோயா': உலகின் உயரமான மரங்கள் அனைத்துமே இதன் இனம்தான். சரேலென 380 அடி உயரத்துக்கு வளரும். அகலம் 26 அடி இருக்கும். இதன் ஆயுட் காலம் 2,200 வருடங்கள். இவற்றின் விதைகள் மட்டுமல்ல; கிளை ஒடிந்து விழுந்தால்கூட அது இன்னொரு மரமாக முளைக்கும். ஒரு மரம் கீழே விழுந்தால், அதில் இருந்து ஒரு காடே முளைக்கும்!

பாவோ பாப் மரம்: குண்டு கத்திரிக்காய் வகை மரம். இதன் சுற்றளவு 47 மீட்டர் வரை இருக்கும். உயரம் 98 அடிதான். தண்டுப் பகுதியில் சுமார் ஒரு லட்சம் லிட்டர் நீரைச் சேமித்து, வறட்சி காலத்தில் பயன்படுத்தும். இதன் ஆயுட் காலம் உறுதியாகத் தெரியவில்லை. தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு மரத்துக்கு இப்போது வயசு 6 ஆயிரம். இந்த மரத்தின் தண்டுப் பகுதியை குடைந்து பார் ஒன்றை நடத்தி வருகிறார்கள். 60 பேர் அமர்ந்து குடிக்கலாம்.

மரங்கள் பலவிதம்...ஒவ்வொன்றும் ஒருவிதம்!

ஸ்ட்ராங்க்ளர் அத்திகள்: இது அண்டிக் கொல்லும் தாவரம். பறவை மூலம் மரத்தின் மேல் விதையாக விழுந்தாலும் துளிர்த்துவிடும். தன் வேர்களை மண்ணைத் தொடுவதற்காக சகல திசைகளிலும் அனுப்பிவைக்கும். இதனால் மரத்தைச் சுற்றி இதன் வேர்கள் படர்ந்து மரத்தையே மூடிவிடும். நீரோ, உணவோ வெளிச்சமோ கிடைக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக அந்த மரம் செத்துவிடும். இந்தச் செடி பிழைத்துவிடும்!

வெல்வெட்ஷியா மிராப்ளிஸ்: இரண்டே இரண்டு இலைகளைக்கொண்ட தாவரம் இது. வறட்சியானப் பகுதிகளில் மட்டுமே வளரும். அதிக வறட்சியில் இந்த இலைகள் நார் நாராகக் கிழிந்து போய், குப்பைபோல குவிந்துகிடக்கும். செடி என்பதைக் கண்டுபிடிக்கவே முடியாது. வாடி வதங்கினாலும் ஆயுசு கெட்டி. இரண்டாயிரம் வருடங்கள் வரைக்கும் தாக்குப் பிடிக்கும்!

கார்த்திகா

 
மரங்கள் பலவிதம்...ஒவ்வொன்றும் ஒருவிதம்!
மரங்கள் பலவிதம்...ஒவ்வொன்றும் ஒருவிதம்!