Published:Updated:

ரியல் 'அவதார்'கள் !

ரியல் 'அவதார்'கள் !


ரியல் 'அவதார்'கள் !
ரியல் 'அவதார்'கள் !
ரியல் 'அவதார்'கள் !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ரியல் 'அவதார்'கள் !

ஒருநாள் செல்போன் இல்லாமல் இருக்க முடியுமா நம்மால்? ஆனால், எந்த வசதிகளும் இல்லாமல், உலகெங்கும் உள்ள அடர் காடுகளில் இயற்கையுடன் இயைந்து வாழ்கிறார்கள் நூற்றுக் கணக்கான பழங்குடி இன மக்கள்.

குகைகளில் வசித்து விலங்குகளை வேட்டையாடும் பழங்குடி மக்கள் பலர், இன்னமும் சமைக்கக் கற்றுக்கொள்ளவில்லை. நெருப்பைப்பற்றித் தெரியும் என்றாலும், அதை வைத்து சமைக்கத் தெரியாது. அதேபோல் அவர்கள் உலகத்தோடு ஒட்டி உறவாடவும் விரும்புவது இல்லை. அந்தமான் நிக்கோபார் தீவுகளின் சென்டினல் தீவில் வசிக்கும் சென்டினலீஸ் பழங்குடி மக்கள் இதுவரைக்கும் தங்கள் அருகில் யாரையும்நெருங்கவிட்டதே இல்லை. 'நாகரிகம் கற்றுக்கொடுக்கிறோம்' என வெளியில் இருந்து சிலர் சென்றாலும், அவர்களாலும் காட்டு மனிதர்களுக்கு ஆபத்தே. காட்டில் ஏற்படும் வியாதிகளை எதிர்க்க முடிந்த இவர்களின் உடல், நாகரிக மனிதர்களின் சாதாரண நோய்களுக்குக்கூட தடுமாறுகின்றன. சின்ன ஜலதோஷம்கூட காட்டு மனிதர்களின் உயிரைப் பறிக்கிறது.

பிரேசிலில் அமேசான் நதிக்கு அருகே வசிக்கும் பழங்குடியின மக்களை புகைப்படம் எடுக்க ஹெலிகாப்டரில் சென்றார் ஃபுனாய் என்ற புகைப்படக்காரர். அந்த மக்களின் வசிப்பிடத்தை ஹெலிகாப்டர் கிராஸ் செய்தபோது அதை ஏதோ பெரிய ஆபத்தான பறவை என்று நினைத்தார்களோ என்னவோ, அதை நோக்கி சரசரவென அம்புகளை விட ஆரம்பித்தனர். ('அவதார்' பட காட்சிகள் நினைவுக்கு வருகின்றனவா?) அதை போட்டோ எடுத்து ஃபுனாய் பத்திரிகைகளில் வெளியிட, இப்போது இந்தப் பகுதிகளை நோக்கி படையெடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் பத்திரிகையாளர்கள். காட்டு விலங்கு களிடம் இருந்து தப்பிக்கக் கற்றுக்கொண்ட இவர்களுக்கு, மனிதர்களிடம் இருந்து தப்பிக்கத்தான் வழி தெரியவில்லை.

ரியல் 'அவதார்'கள் !

காங்கோ காடுகளின் குகைகளில் வசிக்கும் 'பிக்மி' பழங்குடியினருக்கு வேட்டைதான் பிரதானம். வேட்டையைத் தவிர வேறு எதுவும் இவர்களுக்குத் தெரியாது. ஆனால், மற்ற ஆதிவாசிக் குழுக்களுக்கும் இவர்களுக்கும் இடையே ஏதாவது சண்டை வந்தால், உடனடியாக வெள்ளைக்கொடி காட்டி சாமாதானமாகிவிடுவார்கள். இந்த மத்திய ஆப்பிரிக்க நாட்டுக்கு போய்வர பிரான்ஸிலிருந்து ஒரே ஒரு விமானம்தான் இருக்கிறது. அதுவும் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை. ஏனெனில் இந்த நாடு பிரான்ஸைத் தவிர உலகத்தில் வேறு எந்த நாட்டுடனும் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை. இப்படி இருந்தும்கூட இந்த அப்பாவி 'பிக்மி' மக்களை காங்கோ வீரர்கள் வேட்டையாடி உண்பார்களாம். அவர்களின் மிருகங்கள் லிஸ்டில் 'பிக்மி' இனமும் இடம்பெற்றிருக்கிறது!

கார்த்திகா, இர.ப்ரீத்தி


 
ரியல் 'அவதார்'கள் !
-
ரியல் 'அவதார்'கள் !