Published:Updated:

தீப்பிடிக்க...தீப்பிடிக்க...

தீப்பிடிக்க...தீப்பிடிக்க...


தீப்பிடிக்க...தீப்பிடிக்க...
தீப்பிடிக்க...தீப்பிடிக்க...
 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தீப்பிடிக்க...தீப்பிடிக்க...
தீப்பிடிக்க...தீப்பிடிக்க...

காடுகளின் நம்பர் ஒன் வில்லன் காட்டுத் தீ!

மின்னல், எரிமலை, பாறைச் சரிவால் ஏற்படும் உராய்வுகள், சிறு தீப்பொறிகள் இவைகள் காட்டுத் தீ உருவாக முக்கிய காரணங்களாக இருந்தன. இப்போது மக்கியகுப்பை களின் வாயுக்களும் அணைக்காத சிகரெட் துண்டுகளும் காட்டூத் தீக்கு பொறி சேர்க்கின்றன.

ஏறத்தாழ 42 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்தே காட்டுத் தீ காடுகளை அழித்து வந்திருக்கிறது. எதிரிகளின் ஊடுருவலைத் தடுக்க, அந்தக் காலத்தில் ராணுவத்தினர் காட்டுக்குத் தீ வைப்பதை பழக்க மாகக்கொண்டு இருந்திருக்கிறார்கள். காடுகளின் அருகே உள்ளபகுதி களில் ஆக்ஸிஜனின் அளவு அதிக மாக இருப்பதால் காட்டுத் தீ கொளுந்துவிட்டு எரியும். காட்டுத் தீ அருகில் பரவும்முன்னே அந்தப் பகுதியின் காற்று 800 டிகிரி செல் சியஸ் வரை வெப்பமாகிவிடும். வெப்பமான இடங்களில்

இருக்கும் மரங்களின் நீர் ஆவியாகிவிடுவதால், மரங்கள் மெகா சைஸ் விறகுக் கட்டை போலாகிவிடும். தீ அருகில் வந்ததும் பட்டெனப் பற்றிக்கொள்ளும். காட்டுத் தீயின் வேகம் மணிக்கு 10 கி.மீ. என்றாலும் புல்வெளி களில் 22 கி.மீ வரை சீறும். புயல், பெரும் காற்று சமயங்களில் கேட்கவே வேண்டாம். காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த, அது பரவும் திசைக்கு எதிர்த் திசையில் தீ வைப்பதுதான் தீர்வு. காட்டுத் தீ பரவும் திசைக்கு எதிர்த் திசையில் தீ வைத்துவிட்டால், அந்த இடத்தில் இருக்கும் மரம், மட்டைகள் கருகித் தீய்ந்துவிடும். காற் றின் போக்குக்கு வேகமாகச் சீறி வரும்காட்டுத் தீ, அந்த இடத்தில் பற்றிப் பரவ மரங்கள்மிச்சம் இருக்காது. காட்டுத் தீயின் வேகம் குறைந்து தணிந்து அணைந்துவிடும்.

தீப்பிடிக்க...தீப்பிடிக்க...

ஆனால், காற்றின் திசைக்கு ஏற்ப காட்டுத் தீ திசை மாறிக்கொண்டே இருக்கும் என்பதால் அதுஎந்தத் திசைகளில் எல்லாம் பரவும்என் பதையும் எளிதில் கணிக்க முடியாது. சில நாடுகளில் சில்வர் அயோடைட் பொடிகளை ஹெலி காப்டர் மூலம் மேகங்களின் மேல் தூவி, செயற்கை மழையை உருவாக்கி காட்டுத் தீயை கட்டுப்படுத்துவார்கள்.

காட்டுத் தீ விபத்துகள் சில நாடு களின் பொருளாதாரத்தையே சரிய வைத்திருக்கின்றன. இது தவிர, ஏக்கர் கணக்கில் தீப் பிடித்து எரிவதால் எழும் கரியமில வாயுக்கள் சுற்றுச்சூழலுக்கும் பெரும் தீங்கை விளைவிக்கின்றன. காட்டுத் தீ தொடர்ந்து எரிந்துகொண்டே இருந்தால் வெப்பப் புயல் உருவாகும். இது உலக அளவிலான பருவ நிலை மாற்றத்துக்கும் காரணமாக அமைந்துவிடும்.

பெருகி வரும் புவி வெப்பம் வரும் காலங்களில் அதிக அளவு காட்டுத் தீயை உருவாக்கும் என்று கணித்திருக்கிறார்கள். 2030-ம் ஆண்டுக்குள் அமேசான் காடுகளில் கிட்டத்தட்ட 55 சதவிகிதம் காட்டுத் தீயினால் அழிந்துவிடும் வாய்ப்பு இருக்கிறதாம்.

இயற்கையாக உருவாகும் காட்டுத் தீயை தடுக்க முடியாது. ஆனால், மனிதனால் உருவாகும் காட்டுத் தீயை தடுத்துவிடலாம். காட்டுக்குள் சிகரெட் பிடிப்பது, சுள்ளிகளுக்கு தீ வைப்பது போன்ற ‘நல்ல’ செயல்களை நீங்கள் செய்யாமல் இருந்தாலே பாதி காட்டுத் தீயை அணைத்துவிடலாம்!

- மதுமிதா,
முருகானந்தம்

 
தீப்பிடிக்க...தீப்பிடிக்க...
-
தீப்பிடிக்க...தீப்பிடிக்க...