Published:Updated:

நதியும் நமதே...மரமும் நமதே !

நதியும் நமதே...மரமும் நமதே !


நதியும் நமதே...மரமும் நமதே !
நதியும் நமதே...மரமும் நமதே !
 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நதியும் நமதே...மரமும் நமதே !

'நிலம் நமதே. நதிகள் நமதே. காடுகளும் நமதே. முன்னோர்கள் பண்படுத்திய இந்தச் செல்வங்களைப் பாதுகாக்கும் கடமையும் நமதே!' மிகச் சாதாரணமாகத் தோன்றும் இந்த வரிகளுக்குப் பின் இருக்கும் வலிகளும், சாதனைகளும் அசாதாரணமானவை!

நதியும் நமதே...மரமும் நமதே !

1974 மார்ச் 24-ல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் வனம் வாழ் மக்களிடம் இருந்து காட்டு நிலங்களை கையகப்படுத்த முயற்சித்தது வனத் துறை. இதற்கு எதிராகக் கிளர்ந்துஎழுந்த காடு வாழ் பெண்கள், மரங்களை கட்டி அணைத்துக்கொண்டு, கோஷங்கள் எழுப்பிப் போராடினார்கள். அன்று காடுகளைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான் 'சிப்கோ இயக்கம்'.

கி.பி. 1730-ம் ஆண்டிலேயே ஜோத்பூர் மாவட்டத்தில் அமிர்தாதேவி என்பவரின் தலைமையில் காடுகளைப் பாதுகாக்க மரங்களைக் கட்டிப்பிடித்துக்கொண்டு கோடரி வெட்டுக்களைத் தாங்கி தங்களின் உயிரைக் கொடுத்த நிகழ்வுதான் சிப்கோ இயக்கத்தின்உந்து சக்தி. ஆரம்பத்தில் வாழ்வா தார இயக்கமாகத் தொடங் கப்பட்டுப் படிப் படியாகச் சுற்றுச்சூழல் இயக்கமாகத் தன்னை வடிவமைத்துக் கொண்டது சிப்கோ. இந்த இயக்கம் உருவாகி கால் நூற்றாண்டு முடிந்தபோது, 'தேசத்தை வடிவமைத்த 100 பேர்'பட்டியலில் இந்த இயக்கமும் இடம்பிடித்தது.

நதியும் நமதே...மரமும் நமதே !

'சூழலியல் பெண்ணியம்' (Eco-Feminism) என்பதை இந்தியாவில் முதன்முதலில் ஏற்படுத்தியது சிப்கோ இயக்கம்தான். சுண்ணாம்புக் கல் சுரங்கப் போராட்டம், பகீரதி நதியின் குறுக்கே டெஹ்ரி அணை கட்டும் பிரச்னை, ஹிமாச்சல பிரதேசக் காடுகளை அழிப்பதற்கு எதிராக'விதைகளைக் காக்கும் போராட்டம்' என இன்று வரை வனம் வாழ் மக்களுக்கு ஆதரவான இந்த இயக்கத்தின் பங்களிப்புகள் ஏராளம்.

மரங்களைக் கட்டிப்பிடித்துக்கொண்டு போராட்டம் நடத்திய கிராமங்கள் இருக்கும் நம் நாட்டிலேயே, மரங்களை வெட்டி சாலையில் கிடத்திப் புரட்சி செய்த அரசியல் கட்சிகளும் இருப்பது ஏனோ நினைவுக்கு வருகிறது!

ந.வினோத்குமார்

 
நதியும் நமதே...மரமும் நமதே !
-
நதியும் நமதே...மரமும் நமதே !