Published:Updated:

வனம் வாழ் இனம் !

வனம் வாழ் இனம் !


வனம் வாழ் இனம் !
வனம் வாழ் இனம் !
வனம் வாழ் இனம் !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வனம் வாழ் இனம் !

வனங்களில் வாழும் மக்கள் பற்றியஆராய்ச்சி கள் மிகமிக அரிது. அந்த அரிய ஆய்வுகளின்படி உலகம் முழுவதும் சுமார் 60 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காடுகளிலும் அதைச் சார்ந்தும் வாழ்கின்றனர். தங்களை 'சுதேசிகள்' (Indigenous People) என்று அழைத்துக்கொள்ளும் வனம் வாழ் மக்களையும் சேர்த்தால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகும்.

காலம் காலமாக காடுகளில் வாழும் இந்த மக்கள், தங்களின் தேவைகளுக்காக காட்டு வளங்களைப் பயன்படுத்திக்கொள்வதை சர்வதேச சட்டம் அங்கீகரிக்கிறது. ஆனால், நடைமுறையில் சுள்ளி பொறுக்கும் மக்களையே குற்றவாளிகளாகச் சித்தரித்து தண்டனை தருகிறது வனத் துறை. முதலில் காட்டில் வாழும் அந்த மக்களின் கலாசாரத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் வயிற்றுப் பாட்டுக்கு வேட்டையாடு வதைக்கூட 'மிருகவதை' என்று கூக்குரலிடும் மேல்தட்டு வர்க்கத் தினர், காடுகளில் வாழும் மக்களுக்கு எங்கிருந்து 'பீட்ஸா'வும், 'பர்கரும்'கிடைக் கும் என்று சிந்தித்துப் பார்க்க வேண் டும்.

சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் கன்வென்ஷன் ஆர்டிகிள் 14 மற்றும் 15 படி, பரம்பரையாகக் காடுகளில்தங்களுக்கு என ஏற்படுத்திக்கொண்ட நில வரைமுறைகளில் வனம் வாழ் மக்களுக்கு சர்வ சுதந்திரமும் இருக்கிறது. அந்த கன்வென்ஷனில் 'நிலம்' என்பது மரங்கள் மற்றும் நீர் நிலைகளைக்கொண்டதாகத்தான் வரையறுக்கப்பட்டு உள்ளது. எனவே, அந்த வளங்களை, தங்களின் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்வது காடு வாழ் மக்களின் அடிப்படை உரிமை.

வனம் வாழ் இனம் !

தொழிற்சாலைகள் கட்டவும், அணைகள் அமைக்கவும், ரயில் பாதைகள் ஏற்படுத்தவும் காட்டு நிலங்களைப் பறித்துக்கொண்டு மக்களை துரத்தியடிக்கிறார்கள். அவர்களுக்கான மாற்றுக் குடியிருப்புகளையும் ஏற்படுத்தித் தருவது இல்லை. காடுகள் சார்ந்து எந்த ஒரு நட வடிக்கை மேற்கொண்டாலும், சட்டம் இயற் றினாலும் அதைப் பற்றி காட்டில் வாழும் மக்க ளிடம் கருத்து கேட்க வேண்டும் என்பது வனச் சட்டம். ஆனால், அது நடைமுறைக்கு வருவதே இல்லை. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க காடுகளைத் தோட்டங்களாகவும், காட்டேஜ்களாகவும் மாற்றினால் பின் யானைகளும், புலிகளும் ஊருக்குள் உலா வராமல் என்ன செய்யும்?

வன மேலாண்மையை காட்டில் வாழும் மக்களிடமே விட்டுவிடுவதுதான் சூழலியலுக்கு உகந்தது என்பது ஆய்வாளர்களின் கருத்து!

ந.வினோத்குமார்

 
வனம் வாழ் இனம் !
வனம் வாழ் இனம் !