Published:Updated:

உலகின் 'எட்டாவது'கண்டம்?

உலகின் 'எட்டாவது'கண்டம்?


உலகின் 'எட்டாவது 'கண்டம் ?
உலகின் 'எட்டாவது'கண்டம்?
உலகின் 'எட்டாவது'கண்டம்?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'உலகில் மொத்தம் எத்தனை கண்டங்கள் இருக்கிறது? 'ஏழு' என்பீர்கள். ஆனால், 'எட்டு கண்டங்கள்' என்பார் வில்லியம் பீப் என்ற அறிஞர். 'தரையில் இருந்து 100, 200 அடி உயரம் வளர்ந்து நிற்கும் மரங்கள் லட்சக்கணக்கான சதுரமைல்களில் பரவி இருக்கின் றன. அந்த மரங்களின் உச்சியில் ஏராளமான உயிரினங்கள் இருக்கின்றன. அதுதான் உலகத்தின் எட்டா வது கண்டம்' என்கிறார் அவர். 1980-ல் வன ஆராய்ச்சியாளர் டெர்ரி இர்வின் அமேசான் காடுகளில் அலைந்தபோது அவர் மேல் சில பூச்சிகள் விழுந்தன. அவை அத்தனையும் புதுவகைப் பூச்சிகள். அதிசயித்த

உலகின் 'எட்டாவது'கண்டம்?

இர்வின் மர உச்சியை ஆராய்ந்து பல புதிய பறவைகள், பூச்சிகளைக் கண்டுபிடித்தார். அடர்த்தியான மரக் கிளைகள் இருப்பதால் பறவைகளோ, பூச்சிகளோ கீழே வர வாய்ப்பு இல்லை. மனிதன் மேலே ஏறினால்தான் புதிய கண்டுபிடிப்புகள் சாத்தியம். எட்டாவது கண்டத்தில் மட்டும் 3 கோடி உயிரினங்கள் இருக்கலாம் என்கிறார்கள். இவற்றை ஆராயும் பணிக்கு 'காட்டுக்கூரை' (Canopy analysis) என்று பெயர். ஐக்கிய நாடுகளின் இயற்கை பராமரிப்பு நிறுவனம், இந்தக் காடுகளின் கூரையைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. இந்த எட்டாவது கண்டத்தில் மனிதனின் ஏதாவது ஒரு பிரச்னைக்கு தீர்வு கிடைக்கலாமாம்!

எம்.ஜி.பாஸ்கரராஜன்



 
உலகின் 'எட்டாவது'கண்டம்?
-
உலகின் 'எட்டாவது'கண்டம்?