Published:Updated:

இந்திய மக்களிடம் வரவேற்பு பெறுமா பஜாஜ் கஃபே ரேஸர் பைக்?

விகடன் விமர்சனக்குழு
இந்திய மக்களிடம் வரவேற்பு பெறுமா பஜாஜ் கஃபே ரேஸர் பைக்?
இந்திய மக்களிடம் வரவேற்பு பெறுமா பஜாஜ் கஃபே ரேஸர் பைக்?

ஃபே ரேஸர் பைக்கை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். ஆனால், விற்பனையில் கான்டினென்டல் ஜிடி பைக், எதிர்பார்த்தபடி சிகரத்தைத் தொடவில்லை. 

அதைத் தொடர்ந்து, 2014ல் ‘ஸ்ப்ளெண்டர் ப்ரோ கிளாஸிக் கஃபே ரேஸர்’ என்னும் கிளாஸிக் பைக்கை 100 சிசி செக்மென்ட்டில் களமிறக்கியது ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம். சிங்கிள் சீட், முன் பக்கம் டிஸ்க் பிரேக் இல்லாதது போன்ற காரணங்களாலோ என்னவோ, இதுவும் பெரிதாக ஜொலிக்கவில்லை. இப்போது, பஜாஜும் தன் பங்குக்கு கிளாஸிக் பைக் ஒன்றை இறக்கத் தயாராக இருக்கிறது.

இந்திய மக்களிடம் வரவேற்பு பெறுமா பஜாஜ் கஃபே ரேஸர் பைக்?

பஜாஜின் பழைய பாக்ஸர் பைக் நினைவில் இருப்பவர்களுக்கு சட்டென இந்த பைக் பரிச்சயமாகிவிடும். பாக்ஸரில் சின்னச் சின்ன மாறுதல்கள் செய்யப்பட்டு, 150 சிசி செக்மென்ட்டில் வரவிருக்கும் இந்த பாக்ஸர் கஃபே ரேஸர் பைக்கை, முதன் முதலாக துருக்கியில் லாஞ்ச் செய்திருக்கிறார்கள். 144.8 சிசி டிஸ்ப்ளேஸ்மென்ட் கொண்ட சிங்கிள் சிலிண்டர் - ஏர்கூல்டு இன்ஜின், 12bhp பவர், 12 Nm டார்க், 1,285 மிமீ வீல்பேஸ், 11 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு கொண்ட இந்த பைக்கின் மொத்த எடை 123 கிலோ.

கஃபே ரேஸர் பைக்குகளுக்கே உரிய வட்டமான ஹெட்லைட் டிசைன் மற்றும் இண்டிகேட்டர் விளக்குகள், சிங்கிள் சீட்டிங் பொசிஷன் கொண்ட இந்த பைக்கின் புதுமை, அலாய் வீல்கள்தான். ஆனால், 100 சிசி பைக்குகளிலேயே டிஸ்க் பிரேக் ஆப்ஷன் இருக்கும்போது, 150 சிசி பைக்குக்கு நிச்சயம் டிஸ்க் இல்லாதது மிகப் பெரிய குறைதான் என்று விமர்சனங்கள் இப்போதே வர ஆரம்பித்து விட்டன.

இந்தியாவுக்கு வந்தால், மக்களிடம் பஜாஜ் பாக்ஸர் கஃபே ரேஸர் நல்ல பேர் வாங்குமா?

- தமிழ்