Published:Updated:

செய் செய்யாதே! - சத்குரு ஜக்கி வாசுதேவ்

செய் செய்யாதே! - சத்குரு ஜக்கி வாசுதேவ்


. சத்குரு ஜக்கி வாசுதேவ்
எழுத்தாக்கம்: சுபா
செய் செய்யாதே! - சத்குரு ஜக்கி வாசுதேவ்
செய் செய்யாதே !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
செய் செய்யாதே! - சத்குரு ஜக்கி வாசுதேவ்
செய் செய்யாதே! - சத்குரு ஜக்கி வாசுதேவ்

"என்னுடைய சிறு வயதில் என் அப்பா, திருவிழாக் காலங்களில் கிராமத்துக்கு அழைத்துப் போவார். அன்றைய பண்டிகைக் காலங்களின் குதூகலம் இன்றைக்கு இல்லையே? என் குழந்தைகளுக்கு அந்த ஆர்வமும் இல்லை. பண்டிகை கள்பற்றி அவர்கள் கேட்கும் பல கேள்விகளுக்கு என்னால் பதில் தரவும்முடியவில்லை. மாறிவிட்ட சூழ்நிலையில் பண்டிகைகள் அவசிய மற்றுப் போய்விட்டனவா?"

"எந்தச் சந்தோஷமும் இல்லாமல், வாழ்க்கை இயந்திரத்தனமாக நடந்தேறுவதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்? வாழ்க்கையில் கொண்டாட்டம் இல்லையென்றால், செயல்களில் உற்சாகம் இருக்காது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று இருந்தால், ஆனந்தமும், அமைதியும், ஆரோக்கியமும் நம் வாழ்வில் சாத்தியம். எத்த னையோ மனக்குறைகள் விலகும். நோய்கள்தவிர்க்கப் படும்.

செய் செய்யாதே! - சத்குரு ஜக்கி வாசுதேவ்

இதை உத்தேசித்தே, இந்தக் கலாசாரத்தில் வருடத்தின் அத்தனை நாட்களும் பண்டிகை நாட்களாக ஒரு காலத்தில் கொண்டாடப்பட்டன. விதைப்பதற்கு ஒரு விழா, உழுவதற்கு ஒரு விழா, அறுவடைக்கு ஒரு விழா, பிறப்புக்கு ஒரு விழா, குழந்தை வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்துக்கும் ஒரு விழா என்று ஏதாவது ஒரு காரணம் கற்பித்து, தினந்தோறும் வாழ்க்கையை இங்கே விழாவாகக் கொண்டாடினர். இன்றைக்கோ, பண்டிகை நாட்கள் என்றால், விடுமுறை கிடைத்ததடா என்று தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் பசை போட்டு ஒட்டியதுபோல் உட்கார்ந்துவிடுகிறார்கள்.

ஒரு போதகர் தன் புனிதப் பயணத்தின்போது, செயின்ட் ஜானின் முகாம்களுக்கு வந்து சேர்ந்தார். அங்கே பலவிதக் கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டு இருந்தன. பல தேசத்து உணவு வகைகள் சமைக்கப்பட்டு, மக்களுக்கு வழங்கப்பட்டுக்கொண்டு இருந்தன. வில் வித்தை, ஓட்டப் பந்தயம்போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடந்துகொண்டு இருந் தன.

தேவனின் தோத்திரங்களைச் சொல்லாமல், ஏன் இவர்கள் இப்படிக் கூத்தடித்துக்கொண்டு இருக்கிறார் கள் என்று போதகருக்கு வருத்தம்.

கோமாளி வேடம் அணிந்த ஒருவன், அந்த போதகர் செய்வதுபோல ஒவ்வோர் அசைவையும் செய்துகாட்டி மக்களை மகிழ்விக்க ஆரம்பித்தான். மக்கள் மட்டுமல்லாமல், போதகரும் ஒருகட்டத்தில் மனம்விட்டுச் சிரிக்க ஆரம் பித்தார்.

பின் கோமாளியைத்தன் னுடன் உணவருந்த அழைத்தார்.

அவனிடம் கேட்டார்: "எதற்காக அப்படிச் செய் தாய்?"

அவன் சொன்னான், "வாழ்க்கையில் முழுமையான ஈடுபாடு வேண்டும். உயிரற்ற நிலையில்தான் அசைவற்று, ஜடமாக இருப்பீர்கள். நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள் என்றால், உங்கள் கைகள், கால்கள் குலுங்க வேண்டும். பாட்டுப் பாடி, நடனமாடி, நீங்கள் குதித்துக் கும்மாளமிட்டுக் கொண்டு இருக்க வேண்டும். நீங்கள் சிரிக்க வேண் டும். மற்றவர்களைச் சிரிக்கவைக்க வேண்டும்."

செய் செய்யாதே! - சத்குரு ஜக்கி வாசுதேவ்

இதைக் கேட்டதும் போதகருக்கு அது வரை புரியாத ஒரு வாழ்க்கைப் பாடம் புரிந்தாற்போல் இருந்தது.

நகரங்களில்தான் தனித்தனியாக வீடுகளில்பண்டி கைளைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், பெரும் பாலான கிராமங்களில், வெவ்வேறு வீடுகளைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோ ரும் எந்த வித்தியாசமும் இன்றி, ஒரே குடும்பம்போல் கூடிக் கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக் கிறார்கள். அங்கேதான், நம் பண்டிகைகள் எவ் வளவு வண்ணமயமானவை என்பதை உணர லாம்.

நம் தேசத்தில் அந்தக் கலாசாரம் மறுபடி பூக்க வேண்டும். வருடத்துக்கு நான்கு, ஐந்து பண்டிகைகள் கொண்டாடினாலும், எல்லோரும் சேர்ந்து ஒரு பெரிய குடும்பத்து உறுப்பினர்கள்போல் அதை முழுமையான விழாவாக மாற்ற வேண்டும்.

இதை மனதில்வைத்துத்தான், ஈஷாவில் பொங்கல், மகா சிவராத்திரி, ஆயுத பூஜை, தீபாவளி நான்கு பண்டிகைகளையும் அனைவரையும் கூட்டி, விமரிசையாகக் கொண்டாடுகிறோம். ஈஷாவோடு நின்றுவிடாமல், இது தேசத்தின் ஒவ்வொரு பகுதி யிலும் கொண்டாடப்பட்டால், மக்களிடம் நட்பு உணர்வும் ஒற்றுமையும் மேலோங்கும்."

"ஆனால், பண்டிகை என்பது கடமைக்காக நடந்தேறும் ஒரு போலியான கொண்டாட்டமாக அல்லவா தெரிகிறது?"

"போலி என்று எதைச் சொல்கிறீர்கள்? வாழ்க்கையைக் கொண்டாட்டமாக அணுகலாம் என்று நீங்களாக யோசிக்க மாட்டீர்கள். தெருவில் நடந்து செல்வதையே ஒரு கொண்டாட்டமாக உங்களுக்கு செய்யத் தெரியாது. அதனால், புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என்று ஒரு காரணத்தை உண்டுபண்ணவேண்டி இருக்கிறது. பட்டாசைக் கொளுத்தி உங்கள் மடியில் போட வேண்டியிருக்கிறது.

குறிப்பிட்ட தினத்திலாவது, கொண்டாட்ட உணர்வுடன் வாழ்க்கையை அணுகிப்பாருங்களேன்.

ஜேம்ஸ் ஜாய்ஸ் என்ற ஆங்கில எழுத்தாளர் தன் மனைவியுடன் ஒரு முறை ஹங்கேரியில் தெருவில் நடந்து கொண்டு இருந்தபோது, அசாத்தியக் குளிரில் ஒரு சிறுவன் ஓவியங்கள் வரைந்துகொண்டு இருப்பதைக் கவனித்தார். அந்தச் சிறுவன் கைகளில் குளிருக் கான கிளவுஸ்களை அணிந்திருக்கவில்லை. ஆச்சர்யமாகிக் காரணம் கேட்டார்.

'கையில் கிளவுஸ் அணிந்தால், வரை யும் பென்சிலை ஒழுங்காகப் பிடிக்க முடி யாது' என்று சிறுவனிடம் இருந்து பதில் வந்தது. சிறுவன் ஜேம்ஸின் மனைவியின் முகத்தை ஓர் அழகான ஓவியமாகத் தீட்டி அவருக்குப் பரிசாக அளித்தான்.

அந்தக் கணத்தில்தான் ஜேம்ஸ் ஒரு விஷயத்தை உணர்ந்தார். அவரும் ஓவியச் சிறுவனும் அடுத்தவர் மொழியை அறியாத வர்கள். கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கும் மேலாக, எந்தக் குறிப்பிட்ட மொழியிலும் பேச முயற்சிக் காமல், சைகைகளாலும், புன்ன¬ககளாலும், முகபாவங்களாலும் ஒருவருடன் ஒருவர் உரையாடியிருந்தனர்.

ஒருவருடன் மற்றவர் சந்தோஷங்களைப்பகிர்ந்துகொள்ளும் மனநிலையில் இருக்கையில், மொழியே தேவை இல்லை என்பதைமொழி யில் வல்லுநராக இருந்த அந்த எழுத்தாளர் புரிந்துகொண்டார்.

பண்டிகைகள், திருவிழாக்கள் போன்ற கொண்டாட்டங்களின்போது, பலதரப்பட்ட மனிதர்கள் எந்தவேறு பாடும் இல்லாமல் கூடி மகிழ்வதும் இப்படிப்பட்ட மன நிலைக்கு உயர்த்தப்படுவதால்தான்.

எது உங்களுக்குத் தேவையோ, அதை உங்களுக்குக் கீழானதாக நினைத்துவிட்டால், அதனுடன் முழுமையாக உங்களை ஈடுபடுத்திக் கொள்ள முடியாது. ஒரு வழிபாட்டு உணர்வுடன் மதித்து, முழுமையான ஈடுபாட்டுடன் அணுகினால்தான், அது உங்களுக்கு அருமையான வெற்றிகளைக் கொண்டுதரும்.

ஒரு புகைப்படக் கருவியை விஷயம் தெரிந்த யாரால் வேண்டுமானாலும் இயக்க முடியும். ஆனால், அது யார் கையில் இருக்கிறதோ, அதைப் பொறுத்து, அது எடுத்துத் தரும் புகைப்படத்தின் தரம் அமைகிறது. இசைக் கருவிகளும் அப்படித்தான். முடிவுகளை எதிர்பார்த்துச் செயல்படுவதைவிட, கருவியை முறையாகக் கையாள்வதிலேயே ஆனந்தம் கிடைப்பதை நீங்கள் உணர்ந்துவிட்டால், அது மகத்தான முடிவுகளை அமைத்துத் தரும்.

கல்வியையும், வித்தைகளையும் மதிப்பவர்கள் சரஸ்வதி பூஜை என்று அறிவை மதித்துக்கொண்டாடுகிறார்கள். வணிகத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் லக்ஷ்மி பூஜை என்று செல்வத்தைக் கொண்டாடுகிறார் கள். தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள், ஆயுத பூஜையன்று அவர்கள் பயன்படுத்தும் இயந்திரங்களைக் கொண்டாடுகிறார்கள்.

உங்களுக்கு வழங்கப்பட்டு இருப்பதை மரியாதையுடன் மதிப்பதற்கும், நன்றியுடன் அதைக் கொண்டாடுவதற்கும் உணர்வுபூர்வமாக அமைக்கப்பட்டவையே பண்டிகைகள்!"

சரி செய்வோம்...

சத்குருவின் 'ஜென்'னல் !

செய் செய்யாதே! - சத்குரு ஜக்கி வாசுதேவ்

ஒருநாள் திடீரென்று பாம்பின் வால், அதன் தலைப்பகுதியுடன் வாக்குவாதம் செய்தது. ''நீ நகர்வதற்கே நான்தான் காரணம். அப்படி இருக்க, எப்போது பார்த்தாலும் உன்னை நான் பின்தொடர வேண்டுமா? இன்று முதல் நான்தான் வழிகாட்டுவேன்.''

சொன்னதோடு நிற்காமல், பிடிவாதமாக அதன் போக்குக்கு பாம்பை இழுத்துச் செல்ல ஆரம்பித்தது. ஒரு மலையின் விளிம்புக்கு வந்துவிட்டதைப் பார்வையற்ற வால் உணரவில்லை. பாம்பு அதலபாதாளத்தில் விழுந்து, உயிரை விட்டது.

சத்குருவின் விளக்கம்:

"மிக எளிமையாகத் தோன்றினாலும், இந்தக் கதைக்குப் பின்னால் ஒரு மாபெரும் அர்த்தம் பொதிந்திருக்கிறது. வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சத்துக்கும் ஒரு குறிப்பிட்ட மகத்துவம் இருக்கிறது. வாய்ப்பு இருக்கும் இடத்தில் எல்லாம் வரையறைகளும் இருக்கின்றன.

இதை நான் ஏன் செய்ய வேண்டும், அவன் ஏன் செய்யக் கூடாது என்று எல்லாவற்றையும் தர்க்கரீதியாக அணுகினால், வாழ்க்கையின் லயத்தில் இருந்து வெகுவாக விலகிப்போய்விடுவீர்கள். உங்களுக்கு விழிகள் மிக முக்கியமானவை என்பதற்காக, அடுத்த முறை உணவைக் கண்களுக்கு நேரடியாகக் கொடுத்துப் பாருங்களேன்.

பசியால் உடலின் எந்தப் பகுதி சோர்ந்துபோனாலும், வாயிடம்தான் உணவை ஒப்படைக்க வேண்டியிருக்கிறது. வயிறுதான் அதை ஜீரணம் செய்யும். அதைத் தனக்கென மட்டும் வைத்துக்கொள்ளாமல், உடலின் அத்தனை பகுதிகளுக்கும் சக்தியை அது வழங்கும். ஒன்றில்லாமல் அடுத்தது இல்லை.

உங்கள் உடல் மட்டும் அல்ல, மொத்தப் பிரபஞ்சமும் அப்படித்தான் ஓர் உடலின் வெவ்வேறு பகுதிகளாக இயங்குகிறது. எங்கோ ஒன்று வழங்கப்பட்டால், அது எல்லாவற்றுக்கும் போய்ச் சேர்கிறது. 'நல்லதைத் தனக்கு வைத்துக்கொண்டு, நஞ்சை மற்றவனுக்கு வழங்கலாம்' என்று திட்டமிட்டால், அந்த நஞ்சில் ஒரு பகுதி வழங்கியவனுக்கு வந்து சேரும். அதே போல் வளமானதை வழங்கினால், அதில் ஒரு பகுதியும் கொடுத்தவனுக்கு வந்து சேரும். உங்களுக்கு நீங்கள் செய்வது உலகத்துக்குச் செய்ததாகும். உலகத்துக்குச் செய்தது உங்களுக்குச் செய்த தாகும்.

இது ஏதோ வறட்டுத் தத்துவம் அல்ல. பிரபஞ்சத்தின் ஒவ்வோர் அணுவும் மற்றதுடன் தொடர்புவைத்திருக்கிறது என்பதை விஞ்ஞானம் அழுத்தம் திருத்தமாக நிரூபித்திருக்கிறது.

'இந்தப் பிரபஞ்சத்தில் நான் ஓர் அங்கம்; என்னில் இந்தப் பிரபஞ்சம் ஓர் அங்கம்' என்ற பரிமாணத்தைப் புரிந்துகொண்டவர்களால்தான் வாழ்க்கையை முழுமையாகச் சமநிலையில் வாழ முடியும். எல்லாமே ஒன்றுதான். இதைப் பங்கு போட இயலாது. வாழ்க்கையில் இந்தப் பரிமாணம் வந்துவிட்டால், 'அது இதைவிடத் தாழ்ந்தது, இது அதைவிட உயர்ந்தது' என்ற பாகுபாடும், 'அதை எப்படியாவது தவிர்க்க வேண்டும், இதை எப்படியாவது அடைய வேண்டும்' என்ற வெறியுணர்வும் விலகி, வாழ்க்கை சரியான சுருதியில் இயங்கும். முழுமையான பரவசத்தைக் கொண்டுதரும்!"

 
செய் செய்யாதே! - சத்குரு ஜக்கி வாசுதேவ்
செய் செய்யாதே! - சத்குரு ஜக்கி வாசுதேவ்