Published:Updated:

பொய்யாய் ஒரு பொய்! - ஹாய் மதன்-கேள்வி பதில்

பொய்யாய் ஒரு பொய்! - ஹாய் மதன்-கேள்வி பதில்


ஹாய் மதன்
கேள்வி- பதில்
பொய்யாய் ஒரு பொய்! - ஹாய் மதன்-கேள்வி பதில்
பெண்களைச் சிரிக்க வைக்கும் ஜோக் !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பொய்யாய் ஒரு பொய்! - ஹாய் மதன்-கேள்வி பதில்

ஆர்.கே.லிங்கேசன்,
மேலகிருஷ்ணன்புதூர்.

காமராஜர், அண்ணா, தமிழ்வாணன், இவர்களது அடையாளம் என்ன?

பொய்யாய் ஒரு பொய்! - ஹாய் மதன்-கேள்வி பதில்

இதற்குப் பதில் யாரைக் கேட்டாலும் சொல்வார்களே! காமராஜர் - முக்கால் கை சட்டை. அண்ணா - மூக்குப் பொடி, தமிழ்வாணன்-கூலிங் கிளாஸ், தொப்பி! விரல்களில் ஒரு சிட்டிகைப் பொடியோடு - பொடி வைத்துப் பேசிய ஒரே தலைவர் அண்ணாதான்! பள்ளிப் பருவத்தில் எனக்கு எந்த வி.ஐ.பி-பற்றியும் தெரியாது. தெரிந்த ஒரே ஒருவர் தமிழ்வாணன்தான். தெரிந்த ஒரே துப்பறியும் கதாபாத்திரம் அவருடைய சங்கர்லால்தான்! தமிழ்நாட்டில் கேள்வி-பதிலைப் பிரபலப்படுத்தியவர் அவரே. தமிழ்வாணனுக்கு ஒரு கை கிடையாது, ஒரு கண் கிடையாது... என்றெல்லாம் வதந்திகள் உலவின (உலவவிட்டது அவராகவே இருக் கும்!). என்னுடைய சின்ன வயசில், திருவல்லிக்கேணியில் ஏதோ கூட்டத்தில் பேச அவர் வந்திருக்கிறார் என்றதும், வதந்திகள் நிஜமா என்று தெரிந்துகொள்ள தெருவில் நான் ஓடியது நினைவு இருக்கிறது!

'ஃபோர்ஜரி' என்றால் என்னங்க?

ஒரு தமாஷ் பாருங்கள். To forgue ahead என்றால் 'முன்னேறுவது'. அதுவே forgery என்றால் 'போலியாகத் தயாரிப்பது'! ஒரு காலத்தில் பிரெஞ்சு மொழியில் உலோகத்தைச் சூடாக்கி பொருட்களைத் தயாரிப்பதற்குத்தான் இந்தப் பெயர் இருந்தது. அச்சு வார்த்து அதிலிருந்து பல 'காப்பி'கள் (சிலைகளை) எடுக்க ஆரம்பித்ததால், சற்று அர்த்தம் மாறி போலிக் கையெழுத்துக்கு வந்துவிட்டது!

விஜயலட்சுமி, பொழிச்சலூர்.

'பெண்களுக்கு என்று தனி ஊரே அமைந்தால்கூட எனக்கு ஓ.கே-தான்' என முன்னர் கூறியுள்ளீர்களே, பெண்கள் மீது அவ்வளவு வெறுப்பு உங்களுக்கு எப்படி வந்தது? ஒரேயடியாக ஒதுக்கிவிட ஆசைப் படுகிறீர்களே, ஏன்?

ஐயையோ! அதாவது... பெண்களுக்கு, ஒரு ஊரே தனியாக அமைத்து அங்கேயாவது எல்லா ஆண்களும் அடக்க ஒடுக்கமாக பெண்கள் சொல்வதற்குக் கீழ்ப்படிந்து நடந்தால், எவ்வளவு ஜோராக இருக் கும் என்கிற அர்த்தத்தில்தான் நான் அப்படிச் சொன்னேன்!

சிவராம சுப்பிரமணியன், தூத்துக்குடி-2.

நகைச்சுவை உணர்வு ஆண்களுக்கு அதிகமா... பெண்களுக்கு அதிகமா?

இரண்டும் வெவ்வேறு வகை!ஆண் களிடம் பிரமாதமாக எடுபட்ட ஒரு 'ஜோக்'கைப் பெண்களிடம் சொல்லிப் பார்த்திருக்கிறேன். ஊகூம்! மிகுந்த முயற்சிக்குப் பிறகுதான் பெண்கள் எந்த வகை ஜோக்குகளுக்குச் சிரிக்கிறார்கள் என்று (ஓரளவு) கண்டு பிடிக்க முடிந்தது. பெண்களிடம், நான் அபத்தமாகச் செய்த ஏதோ ஒரு காரியத்தைத் தமாஷாகச் சொல்லி என்னையே கிண்டல் பண்ணிக்கொண்டேன். விழுந்து விழுந்து சிரித்தார்கள். அப்பாடா என்றிருந்தது!

அ.முரளிதரன், மதுரை-3.

நமது நாட்டின் வரைபடத்தை (மேப்) வரையும்போது, இலங்கையையும் சேர்த்து வரைவது ஏன்?

தப்புதான். ஆனால், அது பழக்கமாகிவிட்டது! ஆஸ்திரேலியா 'மேப்'பில் கூடவே பாப்புவா நியூகினீ நாட்டையும் சேர்த்துத்தான் காட்டுகிறோம். பிரிட்டனைக் காட்டும்போது கூடவே அயர்லாந்தும் இருக்கிறது! க்யூபா என்றால், மேப்பில் கூடவே வெஸ்ட் இண்டீஸ் தீவுகள் இருக்கும். சரி, இந்தியாவை 'மேப்'பில் காட்டும் போது அதன் ஒரு பகுதியான அந்தமான் தீவுகளை நாம் விட்டு விடுவதற்கு என்ன சொல்கிறீர்கள்?!

சிவகார்த்தி, புறத்தாக்குடி.

'கால்' மேல் கால் போட்டா தப்பா சார்?

பொய்யாய் ஒரு பொய்! - ஹாய் மதன்-கேள்வி பதில்

அப்படி ஓர் எழுத்து தமிழில் கிடையாது என்பதால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமாஷ் இருக்கட்டும். கால் மேல் கால் போடுவது முதலில் அவமரியாதையான செயல் அல்ல; ரொம்ப முதியவர்கள், ஞானிகளின் முன்னிலையில் வேண்டுமானால் கால் மீது கால் போடாமல் உட்காரலாம். ஓவல் ஆபீஸில் ஒபாமாவுக்கு எதிரே ஆலோசகர்கள் அனைவருமே கால் மேல் கால் போட்டுக்கொண்டு உரையாடும் போட்டோ ஒன்றை நான் பார்த்திருக்கிறேன். இங்கே அது நடக்காது!

புத்தார்தா, காரைக்குடி

தமிழ் சினிமாவில் இந்தக் குத்துப்பாட்டு கலாசாரம் என்பது முன்பே இருந்ததா?

பொய்யாய் ஒரு பொய்! - ஹாய் மதன்-கேள்வி பதில்

தெருக்கூத்தின் பாதிப்பு இல்லாமல் தமிழ் சினிமா இருந்தது இல்லை. தெருக்கூத்தில் டப்பாங்குத்துப் பாட்டு உண்டு. ஆகவே சினிமாவிலும், ஆரம்பத்திலேயே டப்பாங்குத்து வந்துவிட்டது. பழம்பெரும் நடிகர் கே.ஆர்.ராமசாமி 'ராசாத்தி...' என்று பாடி டப்பாங்குத்தியிருக்கிறார். சிவாஜி ஆடிய 'தாண்டவக்கோனாரே'யும் டப்பாங்குத்துப் பாட்டுத்தான். (ஆச்சர்யம்! எனக்குத் தெரிந்த வரையில் எம்.ஜி.ஆர் முழுசாக டப்பாங்குத்து டான்ஸ் ஆடியது இல்லை!) அப்போது ட.கு.பாடல் மட்டும் (தாளத்துக்காக) ரசிக்கப்பட்டது. தியேட்டரில் விசில் சத்தமும் தூள் கிளப்பும். இப்போது குரூப் டான்ஸ், மும்பையில் இருந்து கவர்ச்சி நடிகை கள்... என்று ஏராளமான மசாலாக்களைச் சேர்த்து 'டப்பாங்' என்கிற வார்த்தையை மட்டும் நீக்கிவிட்டார்கள்!

வி.ரவிச்சந்திரன், சென்னை-18.

கப்பல்கள் நிற்கும் இடத்தை நாம் 'துறைமுகம்' (Port) என அழைக்கிறோம். ஆனால், விமானம் இருக்கும் இடத்தையும் 'air port' என, ஏன் அழைக்கிறோம்?அப்படி யானல் railway port,bus port என்று கூறாமல் railway station,bus stand என, ஏன் கூறுகிறோம்?

இதற்கான விளக்கங்கள் சுவையாக இருக்கும்! station என்பதற்கு அடிப்படை - நிற்பது. நிலைத்து நிற்கிற விஷயம் எல்லாம் 'st' -யில்தான் துவங்கும். உ-ம், Statue,state,stand,status !

Port என்றால் ஒருவித 'ஸ்டிராங்க்' ஆன ஒயின் என்றும் அர்த்தம் உண்டு. போர்ச்சுகல் நாட்டின் தலைமைத் துறைமுகத்தின் பெயர் O Porta அங்கு இருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதியான அந்த ஒயினுக்குப் பெயர் Port.

அதுவே harbour என்றால் 'நுழைகிற இடம்' என்று பொருள். That place Harbours Bacteria என்றும் சொல்லலாம். (கிருமிகள் நுழைகிற இடம்!). ஒரு காலத்தில் 'ஹார்பர்' என்றால், எல்லோரும் கூட்டமாக, பாதுகாப்பாக இருக்கிற இடம் என்றுதான் அர்த்தம். இப்போது மக்களுக்கு பதில் கப்பல்கள்! கம்ப்யூட்டரிலும்கூட Portal உண்டு. லக்கேஜை சுமந்துகொண்டு போகிறவர் 'போர்ட்'டர்! யாரும் air station என்றும் railway port என்றும் சொல்லாததால் நாமும் அப்படிச் சொல்வது இல்லை!

 
பொய்யாய் ஒரு பொய்! - ஹாய் மதன்-கேள்வி பதில்
பொய்யாய் ஒரு பொய்! - ஹாய் மதன்-கேள்வி பதில்