Published:Updated:

வருங்காலத் தொழில்நுட்பம்! -அண்டன் பிரகாஷ்

வருங்காலத் தொழில்நுட்பம்! -அண்டன் பிரகாஷ்


. அண்டன் பிரகாஷ்
வருங்காலத் தொழில்நுட்பம்! -அண்டன் பிரகாஷ்
வருங்காலத் தொழில்நுட்பம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வருங்காலத் தொழில்நுட்பம்! -அண்டன் பிரகாஷ்
வருங்காலத் தொழில்நுட்பம்! -அண்டன் பிரகாஷ்

இந்தத் தொடரில் கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் இணையம் சார்ந்த தொழில்பிரிவு களில் போட்டியிடுவதைத் தொடர்ந்து கவனித்து வருகிறோம். இணைய இண்டஸ்ட்ரி போட்டி களைக் குத்துச்சண்டை போல உருவகப்படுத் திக்கொண்டால், இந்த ரவுண்டில் வெற்றி பெற்ற கூகுள், அடுத்த ரவுண்டில் ஹெவிவெயிட் சாம்பியனான ஆப்பிளை அடித்து நொறுக்க ஆரம்பித்துவிட்டது என்று சொல்லலாம்.

என்ன நடக்கிறது என்பதை ஆழமாகப் பார்க்கலாம்.

ஆப்பிள், கணினி நிறுவனம் என்ற அடையாளத்தைத் தாண்டி, தரம் உயர்ந்த (அதே வேளையில் விலையும் உயர்ந்த) எலெக்ட்ரா னிக்ஸ் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனம் என்ற அடையாளத்தை அடைந்து சில வருடங்கள் ஆகிவிட்டன. கூகுள் பிரமிக்கத்தக்க தேடல் இயந்திரம் ஒன்றைத் தனது அறிவுசார் சொத்தாகக் கொண்டிருந்தபோதும், பிசினஸ் மாடலைப் பொறுத்தவரை அது ஒரு விளம்பர நிறுவனமாக இயங்கிவருவதும் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

மைக்ரோசாஃப்ட், கூகுளுக்குப் போட்டியாகத் தனக்குச் சொந்தமான தேடல் இயந்தி ரமான பிங்கைத் (new.bing.com) தொடங்கி, பெயர் சொல்லும் அளவுக்கு வளர்ந்தபடி இருக்கிறது. ஆப்பிள், தேடல் இயந்திரமாக கூகுளைத்தான் பரிந்துரை செய்கிறது. ஏன், சென்ற வருடம் வரை ஆப்பிள் நிறுவனத்தின் போர்டில் இயக்குநராக கூகுளின் சிணிளி எரிக் ஸ்மிட் இருந்து வந்தார்.

இப்படி தாய்-பிள்ளைகளாகக் குலாவிவந்த நிறுவனங்கள், இப்போது எதிரும் புதிருமாகப் போட்டியிட்டுக்கொள்வதன் காரணம், இணையத்துக்கு கணினியில் இருந்து செல்வதைவிட கைகளில் எடுத்துச் செல்லும் உபகரணங்களில் இருந்து பயனீட்டாளர்கள் செல்லப்போவது அதிகமாகப் போகிறது.

கைகளில் எடுத்துச் செல்லும் உபகரணம் என்றதும் உங்களுக்கு அலைபேசிதானே என்ற எண்ணம் எழலாம். அலைபேசி இன்றைய நாளில் இணையத்தில் பயனீட்டாளர் களை இணைக்கும் எளிய சாதனம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், அலைபேசி மட்டுமல்லாது, நாம் பயன்படுத்தும் பலவிதமான உபகரணங்களில் இணையம் செல்லும் வசதி இருக்கப்போகிறது. இரண்டு க்விக் உதாரணங்களைப் பார்த்து இந்த டிரெண்ட் பரவலாகிவருவதைப் புரிந்துகொள்ளலாம்.

புத்தகப் பிரியர்களின் மிகப் பெரிய தலைவலி அவற்றைப் பராமரிப்பது. புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அவற்றைக் கரையானில் ஆரம்பித்து கோடை விடுமுறைக்கு வீட்டுக்கு விசிட் அடிக்கும் கஸின் சிஸ்டரிடம் இருந்தும் பாதுகாக்க வேண்டியது அவசியம். கணினியும், குறிப்பாக இணையமும் பிரபலமான தொடக்கக் காலங்களில் e-Book எனப் படும் மின்புத்தகங்கள் இந்தப் பிரச்னைக்குத் தீர்வளிக்கும் என்ற எதிர்பார்ப்பு தகர்ந்து போனது. காரணம், இணையத்தின் மூலம்

வருங்காலத் தொழில்நுட்பம்! -அண்டன் பிரகாஷ்

புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அவற்றைச் சேமித்துவைத்துக்கொள்வதும் எளிதுதான். ஆனால், ஒளிரும் கணினித்திரை யில் தொடர்ந்து புத்தகங்களைப் படிப்பது கண்களை வருத்தி, நாளடைவில் பார்வைத் திறனையும் பாதிக்கும் என்று தெரிய வர... மின் புத்தகங்களின் மகிமை மங்கிப்போனது. ஆபத் பாந்தவனாக, e-Paper என்ற தொழில்நுட்பம் அறிமுகமாக, மீண்டும் நம்பிக்கை துளிர்த் தது. e-Paper பற்றிய விக்கி உரலி -http://en.wikipedia.org/wiki/Electronic_paper . e-Paper-ல் எழுதப்பட்டதை சாதாரண பேப்பரில் எழுதியதைப் போலவே படிக்க முடியும். e-Paper திரை ஒளிராது என்பதால் கண்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. e-Paper தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, படிக்கும் சாதனம் (Reading Device) ஒன்றைக் கொண்டுவந்தது SONY நிறுவனம். (http://en.wikipedia.org/wiki/Sony_Reader) ஆயிரக்கணக்கான புத்தகங்களை ஆனந்த விகடன் சைஸில் இருக்கும் சாதனம் ஒன்றில் பதிவேற்றிப் படித்துக்கொள்ளலாம் என்பது பயன் உள்ளதாக இருந்தாலும், அந்தச் சாதனத்தின் மிகப் பெரிய குறைபாடு e-paper புத்தகங்களை இந்தச் சாதனத்தில் பதிவேற்றம் செய்ய கணினி தேவை. இதைக் கருத்தில்கொண்டு அமேசான் நிறுவனம் கிண்டில் (new.kindle.com) சாதனத்தை வெளியிட்டது. கிண்டில் e-Paper தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல், கணினியின் தேவையில்லாமல் இணையத்தில் இணைந்துகொள்ள முடியும் என்பதால், அமோக வெற்றியடைய அதைத் தொடர்ந்து சைபுக், இலியாட் என வரிசையாக ஈயடிச்சான் காப்பிகளாக e-paper சாதனங்கள். அனைத்திலும் இணைய வசதி இருக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டியது இல்லை.

Flip(http://new.theflip.com) என்பது குட்டி சைஸ் வீடியோ கேமரா. அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களில் பெரும் வரவேற்பை அடைந்த இந்தச்சாதனத் தின் சிறப்பு, இதனுடன் கொடுக்கப்படும் மின்பொருள். இதனை Install செய்துகொண்டால், எடுக்கப்படும் வீடியோக்களை எளிதில் யூ டியூப்பிலோ, ஃபேஸ்புக் கிலோ அப்லோட் செய்யலாம். ஆனால், இதையும் இணையத்தில் இணைக்க கணினி கட்டாயம் தேவை. Flip பற்றி பயனீட்டாளர்களின் பின்னூட்டங்களைப் பார்த்ததும் Flip இன் அடுத்த version இணைய வசதியுடன் இருக்கும் என அறிவித்தனர்.

வருங்காலத் தொழில்நுட்பம்! -அண்டன் பிரகாஷ்

புத்தகங்கள், கேமரா என நாம் பயன்படுத்தும் சாதனங்களில் இணையத்தைப் பயன்படுத்தும் தேவை இதே டிரெண்டில் தொடர்ந்தால், உங்கள் டூ வீலரில் இருந்து துடைப்பக்கட்டை வரை இணைய வசதியுடன் வரப் போகும் காலம் வெகு விரைவில்.

new.kickbee.net என்ற நிறுவனம் கர்ப்பமாக இருக்கும் பெண்களின் வயிற்றைச் சுற்றி அணிந்து கொள்ள பெல்ட் ஒன்றை விற்கிறது. இணையத்தில் இணைக்கப்பட்ட தொழில்நுட்பத்தைக்கொண்ட இந்தச் சாதனம், வயிற்றில் இருக்கும் குழந்தை அசையும்போதெல்லாம் டிவிட்டருக்கு ட்வீட் ஒன்றை அனுப்பும். அந்த டிவிட்டரைப் பின்தொடரும் எல்லாருக்கும் '4:32 PM இப்பதான் மம்மிக்கு ஒரு உதைவிட்டேன்’ என்ற செய்தி கணநேரத்தில் (real time) போய்ச் சேரும். (விவரங்களுக்கு new.kickbee.net தளத்தைப் பாருங்கள்). இதைத் தவிர, வேறு சாதனங்கள் பற்றிய விவரங்கள் தெரிந்தால் டிவிட் டரில் @vikatan முகவரியில் #new என்ற hashtagவுடன் டிவிட்டுங்கள்.

ஆப்பிள்/கூகுள் சச்சரவுக்குத் திரும்புவோம்.

இணையத்தில் இணைந்திருக்கும் தேவை கணினி என்ற சாதனத்தையும் தாண்டி வருவது கண்கூடாகத் தெரிவதால், கூகுள் தொலைநோக்குப் பார்வையுடன் இந்த ஏரியாவில் தனது தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ய ஆர்வம் காட்டுகிறது. ஆப்பிள் நிறுவனம் தனது ஐ-போன் சாதனத்தையும் அதில் இயக்க முடிகிற மென்பொருட்களையும் பிரபலம் அடையவைக்க விரும்புகிறது. சென்ற வாரத்தில் கூகுள் தனது அலைபேசியை வெளியிட, ஆப்பிளோ அதே நாளில் மொபைல் விளம்பரத் தொழில்நுட்ப நிறுவனமான க்வாட்ரோவை 275 மில்லியனுக்கு வளைத்துப் போட்டது. ஆப்பிள் மென்பொருட்களில் வெளியிடப்படும் விளம்பரங்களின் வருமானத்தை கூகுளுக்குக் கொடுக்காமல் தடுக்க ஆப்பிள் எடுக்கும் நடவடிக்கை இது.

வருங்காலத் தொழில்நுட்பம்! -அண்டன் பிரகாஷ்

தமிழ்நாடு மாநிலத்தை டிஜிட்டல் உலகமாக உருவகமாக்கினால், இவர்கள் இருவரும் தி.மு.க., அ.தி.மு.க-வாக தமிழ்நாட்டை ஆளத் துடிக்க, ம.தி.மு.க, விஜயகாந்த்தாக blackberry ji RIM,Symbian OS போன்றவை தமது தொழில்நுட்பங்களை முன்னேற்ற முயல்கின்றன.

வரும் வாரங்களில் இணைய உலகின் ஜாம்பவான்களான இவர்களின் குஸ்திகளைப் பார்க்கலாம்!

 
வருங்காலத் தொழில்நுட்பம்! -அண்டன் பிரகாஷ்
-log off
வருங்காலத் தொழில்நுட்பம்! -அண்டன் பிரகாஷ்