Published:Updated:

டீன் கொஸ்டீன் - மனைவியை மீட்பது எப்படி?

டீன் கொஸ்டீன் - மனைவியை மீட்பது எப்படி?


. டீன் கொஸ்டீன்
டீன் கொஸ்டீன் - மனைவியை மீட்பது எப்படி?
தொப்புள் கொடி முதலீடு !?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
டீன் கொஸ்டீன் - மனைவியை மீட்பது எப்படி?
டீன் கொஸ்டீன் - மனைவியை மீட்பது எப்படி?

எஸ்.ரம்யா, கோயம்புத்தூர்-4

டீன் கொஸ்டீன் - மனைவியை மீட்பது எப்படி?

''ப்ளஸ் டூ தேர்வுகளுக்குத் தயாராகிக்கொண்டு இருக்கிறேன். பத்தாம் வகுப்புத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றேன். ஆனால், இப்போது என்னால் அதே கவனத்தைச் செலுத்திப் படிக்க முடியவில்லை. புத்தகத்தோடு உட்கார்ந்தாலே சம்பந்தம் இல்லாத பிற விஷயங்களில் சிந்தனை அலைபாய்கிறது. நான் என்ன செய்ய வேண்டும்?"

என்.ரங்கராஜன்,
மனநல மருத்துவர்.

''ரம்யா உங்களது பதின்பருவத்துக்கே உரிய (டீன்-ஏஜ்) எதிர்பாலின ஈர்ப்பு, காதல், ஹார்மோன் தூண்டல் களால்தான் உங்கள் கவனம் கலைகிறதா என்று நீங்கள் குறிப்பிடவில்லை. காதல் போன்ற சங்கதிகள் அது பற்றி தீர்மானமாக முடிவெடுப்பதற்கு உங்களுக்கு இன்னமும் வயதும், காலமும் இருக்கிறது. அப்படியான டீன்-ஏஜ் சிக்கல்கள் இல்லையென்றால் 'ஆன்சைட்டி டிஸ்ஆர்டர்' பிரச்னையால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்களா என்று பரிசோதிக்க வேண்டியிருக்கும். இது ஒருவிதமான மனப் பதற்றநோய். தேவையில்லாத பயம், பதற்றம் போன்றவை உங்களை அலைக்கழிக்கும். அதற்கான காரணங்களை முழுமையாக ஆராய்ந்து, ரிலாக்சேஷன்தெரபி அல்லது சைக்கோதெரபி மூலம் சரி செய்துவிடலாம். இந்த இரண்டில் எந்தப் பிரச்னையால் நீங்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் உடனே தக்க மனநல ஆலோசகரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்!"

கே.தர்ஷினி, மதுரை.

டீன் கொஸ்டீன் - மனைவியை மீட்பது எப்படி?

''தினமும் ஒரு வெற்றிலை சாப்பிட்டால் எந்த நோயும் வராது என்கிறார் என் பாட்டி. இது உண்மையா? அப்படித் தினமும் வெற்றிலை சாப்பிட்டால் பல்லில் கறை படியுமா?"

மூலிகைமணி அபிராமி,
சித்த மருத்துவர்.

''தினமும் ஒரு வெற்றிலை சாப்பிடுவது ஜீரணத்துக்கு நல்லது. அதோடு, நுரையீரலில் உள்ள சளியையும் வெற்றிலை வெளியேற்றும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். அதனால்தான் குழந்தை பிறந்ததும் பெண்களுக்கு வெற்றிலை கொடுப்பார்கள். அது தாய்ப்பால் மூலம் குழந்தையின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். ஆனால், வெறும் வெற்றிலையை மட்டும் சாப்பிட்டால்தான் இந்தப் பலன்கள். வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு சேர்த்துச் சாப்பிட்டால் பற்களில் கறை படியும். வாய் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். சுண்ணாம்பு - பாக்குக்குப் பதில் வெற்றிலையில் மிளகு, தேன்வைத்துச் சாப்பிடலாம். இப்படிச் சாப்பிட்டால் பற்களில் கறை படியாது. வெற்றிலையை மென்று சாப்பிடப் பிடிக்காதவர்கள், வெற்றிலையின் காம்பு, நுனி நீக்கி லேசாகக் கசக்கி இரண்டு மிளகு, ஒரு ஏலக்காய் சேர்த்து நசுக்கி, ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு வேகவைத்து, அதை வடிகட்டித் தேன் அல்லது சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம். குழந்தைகளுக்கு அதில் ஐந்து அல்லது பத்து சொட்டுக்கள் அளிக்கலாம்!"

எம்.சங்கீதா, சென்னை-45.

டீன் கொஸ்டீன் - மனைவியை மீட்பது எப்படி?

''என் குழந்தையின் பெயரில் 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு மாதாமாதம் ஒரு தொகை செலுத்தும் ஏதேனும் சேமிப்புத் திட்டத்தில் சேரலாம் என்று நினைக்கிறேன். போஸ்ட் ஆபீஸ் அல்லது வங்கி இவற்றில் எதில் சேமிக்கலாம்?"
சொக்கலிங்கம் பழனியப்பன்,

நிதி ஆலோசகர்.

''வங்கி அல்லது தபால் நிலையங்கள்தான் உங்கள் சாய்ஸ் என்றால், அவற்றில் எதில் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். முதலீட்டுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. ஆனால், 15 முதல் 20 ஆண்டுகள் என்று நீண்ட கால முதலீட்டுக்கு நீங்கள்

டீன் கொஸ்டீன் - மனைவியை மீட்பது எப்படி?

திட்டமிடுவதால், மியூச்சுவல் ஃபண்ட் போன்ற திட்டங்களில் முதலீடு செய்தால் வங்கி, தபால் நிலைய முதலீடுகளைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிக லாபமடையலாம். ஆனால், உங்கள் முதலீட்டுக்குப் பாதிப்பில்லாத சிறந்த திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். தக்க நிதி ஆலோசர்களின் துணைகொண்டு உங்களுக்கான திட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது குறைந்த லாபம், அதிக பாதுகாப்பு என்று முடிவெடுத்தால் யோசிக்காமல் வங்கி அல்லது தபால் நிலையம் என ஏதோவொன்றில் நீங்கள் முதலீடு செய்யலாம்!"

சி.ராகேஷ், சென்னை-28.

''என் மனைவி தற்போது ஏழுமாதக் கர்ப்பம். 'குழந்தை பிறந்ததும் தொப்புள் கொடியைப் பத்திரப்படுத்தச் சொல்லுங்கள். பிற்காலத்தில் உதவும்' என்கிறார்கள். அதை முறையாகப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?"

மயூர் அபயா,
தலைவர் மற்றும் செயல் இயக்குநர்,

லைஃப் செல்.

டீன் கொஸ்டீன் - மனைவியை மீட்பது எப்படி?

''தொப்புள் கொடியில் உள்ள ரத்தம் மற்றும் சதைத் துணுக்குகளை 'ஸ்டெம் செல்' என்பார்கள். மனித உடல் இயக்கத்தில் ஸ்டெம் செல்லுக்கு என்று குறிப்பிட்ட பணி எதுவும் கிடையாது. ஆனால், தாயின் கர்ப்பப் பையில் இந்த ஸ்டெம் செல்லில் இருந்துதான் ரத்தம், எலும்பு, சதை என்று 200 வகையான திசுக்கள் உருவாகி, குழந்தையாக உருவெடுக்கும். ஒரு குழந்தையின் மரபணு ரகசியங்கள் அனைத்தும் ஸ்டெம் செல் திசுக்களில் ஒளிந்திருக்கும். ஒரு குழந்தையின் ஸ்டெம் செல்களைப் பாதுகாத்து வைத்திருப்பதன் மூலம், பிற்காலத்தில் அந்தக் குழந்தை வளர்ந்த பிறகு எதிர்கொள்ளும் 75-க்கும் மேற்பட்ட நோய்களைக் குணப்படுத்துவதற்கான மாற்று திசுக்களைப் பெறலாம். தொப்புள் கொடி ரத்தம் அல்லது தொப்புள் கொடி சதைப் பகுதி அல்லது ஒரு மில்லியன் ஸ்டெம் செல் அல்லது 50 மில்லியன் திசுக்கள் என வெவ்வேறு பாதுகாப்புத் திட்டங்கள் இருக்கின்றன. குழந்தை பிறந்த 48 மணி நேரத்துக்குள் தொப்புள் கொடி சேமிக்கப்பட வேண்டும். தொப்புள் கொடியை ஆயுள் முழுக்கப் பத்திரப்படுத்திவைக்க முடியும். ஆனால், இந்தியாவில் இந்த நடைமுறைகள் ஆரம்ப நிலையில் இருப்பதால், இப்போதைக்குச் செலவு பிடிக்கும் சங்கதி இது!"

பா.கவிதா, மதுரை-5.

டீன் கொஸ்டீன் - மனைவியை மீட்பது எப்படி?

''எனக்குத் திருமணமாகி ஓராண்டு ஆகிறது. இதுவரை குழந்தை இல்லை. மாதவிலக்கு வந்த 14 முதல் 16-வது நாளுக்குள் உறவுவைத்துக்கொண்டால், குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகம் என்கிறார்களே. அது எந்த அளவுக்கு உண்மை?"

காமராஜ், செக்ஸாலஜிஸ்ட்.

''பொதுவாக, 28 நாட்கள் மாதவிலக்குச் சுழற்சிகொண்ட பெண்களுக்குத்தான் 14 முதல் 16-ம் நாளுக்குள் கருமுட்டை வெளிவரும். அந்த நேரத்தில் செக்ஸ்வைத்துக்கொண்டால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம். ஆனால், ஒவ்வொரு மாதமும் இது துல்லியமாக நிகழும் என்று சொல்ல முடியாது. அதிலும் 30, 35 அல்லது 20 நாட்கள் சுழற்சிகொண்ட பெண்களுக்கு இந்த நம்பர் உபயோகப்படாது.
'குழந்தை வேண்டுபவர்கள் தினமும் செக்ஸ்வைத்துக்கொண்டால் கருத்தரிக்கும் வாய்ப்பும், கரு தங்கும் வாய்ப்பும் அதிகம்' என்று ஆஸ்திரேலியாவின் சிட்னி ஐ.வி.எஃப் மைய ஆய்வு தெரிவிக்கிறது. எனவே, எந்தக் குடும்பக் கட்டுப்பாடு நடைமுறைகளையும் மேற்கொள்ளாமல், தினமும் செக்ஸ் வைத்துக்கொள்ளுங்கள்!"

 
டீன் கொஸ்டீன் - மனைவியை மீட்பது எப்படி?
டீன் கொஸ்டீன் - மனைவியை மீட்பது எப்படி?