18-02-09

ஸ்பெஷல்

துப்பாக்கியும் தூரிகையும்!

- ஆர்.ஷஃபி முன்னா

யாசின் மாலிக்- காஷ்மீரில் செயல்படும் 'ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி'யின் (ஜே.கே.எல்.எஃப்) தலைவர். ஆயுதங்களும் போராட்டங்களுமாகச்செய்தி களில் அடிபட்டுக்கொண்டு இருந்தவர், சமீபமாக வேறு விஷயங்களுக்காகக் கவனம் ஈர்த்திருக்கிறார். இந்த இதழில் அவர் இடம் பிடித்திருக்கிறார் என்றால், அந்த விஷயம் வேறு என்ன... காதல்தான்!

யாசின் மாலிக், பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீரப் பகுதிக்குச் சென்று, ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்புடன் சேர்ந்து, ஆயுதப் பயிற்சி பெற்றார். படிப்படியாக முன் னேறி தலைமைப் பொறுப்பை ஏற்றார். நாளடைவி லான செயல்பாடுகளில் அமைப்பினருடன் கருத்துவேறு பாடு ஏற்பட்டது. எனவே, 'ஆயுதங்களால் பயனில்லை... அரசியல்ரீதியாகப் போராடி காஷ்மீரைப் பெறுவோம்' என ஜே.கே.எல்.எஃப்-ஐ அரசியல் அமைப்பாக மாற்றி னார். 'விடுதலைப் போராட்டங்களிலேயே எனது ஆயுள் முடிந்துவிடும் என்பதால், திருமணம் பற்றி எல்லாம் யோசிக்க முடியாது!' என்று கூறி வந்தவரின் உறுதியைக் குலைத்திருக்கிறது, மஷால் உசைன் மல்லிக் வரைந்த ஓவியங்கள்!

லண்டனில் பிறந்த பாகிஸ்தானியரான மஷால், புகழ்பெற்ற பொருளாதர வல்லுநரான காலம் சென்ற டாக்டர் எம்.ஏ.உசைன் மல்லிக்கின் மகள். 'லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ்'ல் பட்டப்படிப்பு முடித்த மஷாலின் ஓவியங்களுக்கு மார்க்கெட்டில் நல்ல மதிப்பு உண்டு. காரணம், கலை அழகுடன் கூடிய நிர்வாணப் பெண்களின் ஓவியங்கள்தான் மஷால் ஸ்பெஷல்! 'மஷால் பற்றி அறிந்துகொள்ளும் முன்னரே என்னைக் கவர்ந்தது அவரது ஓவியங்கள்தான். இந்த ஓவியங்களின் மூலம் வரும் வருமானத்தை பாகிஸ்தான் பெண்களின் மேம்பாட்டுக்காக மஷால் செலவிடுவது அவர் மீதுள்ள கண்ணியத்தை அதிகரிக்கிறது!' என மஷால் புகழ் பாடுகிறார் யாசின் மாலிக். இருவருக்கும் இடையேயான நிச்சயதார்த்தமே ஒரு சுவாரஸ்ய சினிமா. மஷாலின் படிப்பு முடிந் ததுமே யாசினுடன் அவருக்குத் திருமணம் நடந்திருக்க வேண்டியது. ஆனால், அப்போது காஷ்மீர் சட்ட சபைத் தேர்தலுக்கு எதிராகப் பேசிய தால், யாசின் சிறையில் அடைக்கப் பட்டார். சிறையில் இருந்தபோதே தனது மோதிரத்தை நண்பர்கள் மூலம் பாகிஸ்தானுக்குக் கொடுத்தனுப்பிய யாசின், அதை மஷாலுக்கு அணிவிக்கச் செய்து நிச்சயதார்த்தத்தை முடித்துக்கொண்டார். சிறையில் இருந்து வெளிவந்த பிறகு, சிறுநீரகக் கல் சிகிச்சைக்காக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

'ஆபரேஷன் அவசியம்' என்று மருத்துவர்கள் தெரிவிக்க, மாத்திரைகள் மூலம் அதை ஒரு மாதம் தள்ளிப் போட்டுவிட்டு, காதலியைத் தேடிக் கிளம்பி விட்டார்.

நிக்காஹ் இடம் மற்றும் தேதி பரம ரகசியம். ஆனால், யாசின் இந்தியா திரும்புகையில் மஷாலை அழைத்து வருவார் என்பதில் நிச்சயமில்லை. காரணம், மஷாலுக்கு இந்திய விசா வாங்குவதில் உள்ள சிக்கல். இந்திய அரசிடம் முறைப்படி விசா அனுமதி பெற்று, பிறகு அதை நிரந்தரமாக்கி குடியுரிமை பெற வேண்டும். 'இந்திய அரசுக்கு எதிராகப் போராடும் யாசினின் கொள்கை முடிவுகளில் எதிர்கால மனைவிக்காகச் சமரசங்கள் செய்துகொள்ள வாய்ப்பு உள்ளது. பிறந்த மண்ணுக்காகப் போராடும் காஷ்மீரத் தலைவர்கள், பாகிஸ்தான் பெண்ணை விரும்புவது ஏன்?' என சலசலப்புகள் துவங்கிவிட்டன. 'மஷால் குடும்பத்தினரின் பூர்வீகம் காஷ்மீரைச் சேர்ந்தது' என்பது மட்டுமே தற்போது யாசின் தரப்பினர் வசமுள்ள ஒரே சமாளிப்பு.