18-02-09

ஸ்பெஷல்

நானே கேள்வி.. நானே பதில்!

''கலைஞர், காதலி -என்ன வித்தியாசம்?''

'' 'இதயத்தில் இடம் உண்டு' - இதைக் காதலி சொன்னால் ஜாங்கிரி; கலைஞர் சொன்னால் 'அல்வா'!''

- மா.சிங்காரவேலன், தஞ்சாவூர்.

''சுஜாதா என்றதும் நினைவுக்கு வருவது...''

''1980-களின் தொடக்கம்... நான் கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும்போது ஒரு விழாவில் சிறப்பு அழைப்பாளராக எழுத்தாளர் சுஜாதா அழைக்கப்பட்டு இருந்தார். அப்போது கம்ப்யூட்டர் அவ்வளவாகப் பிரபலமாகாத நேரம். கம்ப்யூட்டர் பற்றி எளிய உதாரணங்களுடன் சுஜாதா பேசிக்கொண்டு இருந்தார். 'மனிதர்களுக்குச் சில விஷயங்கள் தான் நினைவில் நிற்கும். தினம் தினம் செய்யக்கூடிய காரிய மானாலும் அவை அனைத்தும் நினைவில் இருப்பது இல்லை. ஆனால், கம்ப்யூட்டர் அப்படியில்லை. அதன் மெமரியில் அனைத்துத் தகவல்களும் அழியாமல் அப்படியே இருக்கும்' என்று சுஜாதா பேசிக்கொண்டு இருந்தார். இதை எளிதாகப் புரியவைக்க எண்ணி, ஒரு மாணவியை எழுந்து நிற்கச் சொல்லி, 'நேற்று மதியம் என்ன சாப்பிட்டீர்கள்?' என்று கேட்க, அவரும் 'தேங்காய்ச் சாதம் சாப்பிட்டேன் சார்' என்றார். 'நல்லது, போன வாரம் புதன்கிழமை மதியம் என்ன சாப்பிட்டீர்கள் என்று நினைவிருக்கிறதா?' என்று கேட்க, அந்த மாணவியோ 'ஞாபகம் இருக்கே... தேங்காய்ச் சாதம் சார்' என்றார். உடனே மாணவிகள் மத்தியில் சிரிப்பு. சுதாரித்துக்கொண்ட சுஜாதா, 'ஓ.கே. உங்களுக்குக் கொஞ்சம் எக்ஸ்ட்ரா மெமரி போலிருக்கிறது' என்றவர், 'போனவாரத் துக்கு முந்தைய புதன்கிழமை மதியம் என்ன சாப்பிட்டீர்கள் என்று சொல்ல முடியுமா?' என்று கேட்க, அந்த மாணவியும் 'தேங்காய்ச் சாதம்தான்' என்றார். மீண்டும் மாணவிகள் மத்தியிலிருந்து சிரிப்பலை. அந்த மாணவி தன்னைக் கலாய்க்கிறார் என்று புரிந்துகொண்ட சுஜாதா சற்றுக் கோபத்துடன், 'நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். போன வருடம் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் புதன் கிழமை மதியம் என்ன சாப்பிட்டீர்கள் என்று கேட்டால்கூட தேங்காய்ச் சாதம் என்றுதான் சொல்வீர்கள்' என்று சொல்ல, அந்த மாணவியும் 'யூ ஆர் சர்ட்டன்லி கரெக்ட் சார்' என்றார். மீண்டும் எழுந்த சிரிப்பலைகளுக்கு மத்தியில் பதில் அளித்த மாணவிக்குப் பக்கத்திலிருந்த மாணவி எழுந்தார். 'சார், அவள் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிறாள். ஹாஸ்டல் மெனுப்படி ஒவ்வொரு புதன்கிழமை மதியமும் தேங்காய்ச் சாதம்தான்' என்று விளக்கமளித்தார். 'அப்பாடா! நல்லவேளை! இது பெண்கள் கல்லூரியா, ஆண் கள் கல்லூரியா என்று ஒரு விநாடி தடுமாறி விட்டேன்' என்று சுஜாதா சமாதானமானார். தனது நகைச்சுவையால் பலரையும் சிரிக்கவைத்த சுஜாதாவே நகைச்சுவையின் மையமாகிப்போன அந்த நாளை மறக்க முடியவில்லை!''

- எஸ்.மாலா, மறைமலை நகர்.

''உலகத்தில் காதலிக்காத மனிதர்கள் உண்டா?''

''இல்லை. அதோடு இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள். காதலிக்கப்படாத மனிதர்களும் இல்லை. எல்லா ஆண்களும் ஏதோ ஒரு பெண்ணைக் காதலிப்பதைப் போலவே எல்லாப் பெண்களும் ஏதோ ஓர் ஆணைக் காதலிக்கிறார்கள் மற்றும் காதலிக்கப்படுகிறார்கள். சமீபத்தில் படித்த ஒரு காதல் கவிதை இது...

'நீ செய்த தவறு
என்னை நேசிக்காமல் இருப்பதல்ல...
நான் நேசிக்கும்படி இருப்பது! ' ''

- வி.ராமலிங்கம், மதுக்கூர்.

''காதல் கவிதைகள் என்றாலே நிலா, மலர் என்று வர்ணிக்க ஆரம்பித்துவிடுவது ஏன்?''

''என்ன செய்ய... காதல் உண்டாக்கும்விபத்துக் களில் ஒன்று கவிஞர்கள் உருவாவது. கவிதை எழுதுவது என்று முடிவெடுத்த உடனே அவர் களுக்கு நிலவும் மலரும் நினைவுக்கு வந்து விடுகிறது. ஆனால், பாரதிதாசனின் 'காதலும் வாழ்வும்' என்ற கவிதையில் காதலன் தன் காதலி யின் அடிப்பாதத்தை வர்ணிப்பதைக் கவனி யுங்கள். 'நாயின் நாக்கு போன்று சிவந்தமெல்லடி யைத் தூக்கி வை குடிசையில்' என்று வர்ணிக் கிறான். இந்த வரிகளைப் படித்தவுடனே, நமக்கு மூச்சிரைக்கத் தொங்கிக்கொண்டு இருக்கும் நாயின் நாக்கும் அதன் சிவந்த நிறமும் ஞாபகத் துக்கு வருமல்லவா? அதுதான் கவிதையின் வெற்றி!''

-கி.மனோகரன், பொள்ளாச்சி.