18-02-09

காதல் ஸ்பெஷல்

இதுதான் காதல் என்பதா?

- ஷக்தி, மோகன், படங்கள்: ராஜேஷ், பாண்டி

வழக்கமாகச் சாதி, மதம் மீறிக் காதலிக்கும் காதலர்களுக்கு மத்தியில் இன்னும் சில எல்லைகளைத் தகர்க்கின்றன இவர்களின் காதல்கள்!

விஜி. காற்றிலாடும் கவரிங் ஜிமிக்கி, சிந்திக்கும் கண்கள், இரண்டு நொடிகளுக்கு ஒரு புன்னகை என்று விஜியின் புறத்தோற்றம் தீட்டுவதெல்லாம் ரசனையான வர்ணங்கள்தான். ஆனால், அவர் கதையைக் கேட்டால் ஆடி அடங்குகிறது நம் தேகம்.

''பூர்வீகம் ஆந்திரா. வளர்ந்தது சென்னை. வாழ்வது கோவையில். போலியோ அட்டாக் காரணமாக நடக்கக் கொஞ்சம் சிரமம். ப்ளஸ் டூ படிக்கிறப்போ அப்பாவோட பழ மண்டிக்கு வந்து போகும் கண்டக்டர் குமார் பழக்கமானார். எல்லார்கிட்டயும் ரொம்பத் தன்மையா பழகுவார். முழுசா குமாரைக் காதலிக்க ஆரம்பிச்சேன். 'அவனைப் பத்தி நமக்கு என்ன தெரியும்'னு அப்பா எதிர்த்ததையும் மீறி குமாரை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

ஆமா, அதுக்குப் பிறகுதான் குமாரைப் பத்தி முழுக்கத் தெரிஞ்சது. பேட்டை ரவுடிங்க எல்லாருமே அவரோட ஃப்ரெண்ட்ஸ். பொம்பளை சகவாசமும் உண்டு. அத்தனை தப்பான ஆளா இருந்தும் என்னை ஒரு நாளும் அடிச்சதோ, திட்டினதோ இல்லை. தங்கமா பார்த்துக்கிட்டார். திடீர்னு அவருக்கு அக்கிங்கிற தோல்நோய் வந்துச்சு. அதுக்காக ரத்தப் பரிசோதனை பண்ணப்போ, அவருக்கு எய்ட்ஸ்னு தெரிஞ்சுது. ஆனா, அப்ப எனக்கு எய்ட்ஸ் இல்லை. 'வீட்டுக்காரரோடு இனி செக்ஸ் வெச்சுக்காதே. தவிர்க்க முடியலைன்னா காண்டம் பயன்படுத்து'ன்னு சொல்லி அனுப்பினாரு டாக்டர். வீட்டுக்கு வந்ததும் 'என்னால் உன் வாழ்க்கை நாசமாயிருச்சு. என்னை வெறுக்க ஆரம்பிச்சிடாதே'ன்னு புலம்ப ஆரம்பிச்சுட்டார். 'என்காதல் உண்மையானது'ன்னு மட்டும்னு சொல்லிட்டே இருந்தேன். ஆனா, அவர் சமாதானமாகலை. என்ன செஞ்சு அவரைச் சமாதானப்படுத்துறதுன்னு தெரி யலை. என் காதல் உண்மைதான்னு புரியவைக்க, ஆணுறை இல்லாமலேயே அவரோடு உறவு வெச்சுக் கிட்டேன். மடத்தனமான, உணர்ச்சிவசப்பட்ட முடிவா உங்களுக்குத் தெரியலாம். ஆனா, அது என் காதலின் வெளிப்பாடு... அவ்வளவுதான்!

நான் கர்ப்பமானேன். நாலாவது மாசத்தில்எனக் கும் எய்ட்ஸ் பாதிப்பு இருக்குன்னு தெரிஞ்சுது. எதிர்பார்த்ததுதான். ஆனா, குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் இருக்காம தடுப்பு நடவடிக்கைகள் எடுத்துக்கிட்டேன். வயித்துல குழந்தை வளர வளர... அவருக்கு நோய் முத்த ஆரம்பிச்சுது. காப்பாத்த எடுத்துக்கிட்ட முயற்சிகளுக்குப் பலனில்லாம இறந்துட்டார். 'இனி வாழ்ந்து என்ன பிரயோஜனம்'னு தோணுச்சு. ஒன்பது மாசக் கரு வயித்துல இருக்கும் போதே தீ குளிச்சுட்டேன். ஆனா, உயிர் போறதுக்கு முன்னாடி காப்பாத்திட்டாங்க. கை, கால், அடி வயிறு எரிஞ்சிருச்சு. தீக்காயங்கள் ஆறினதும் சிசேரி யன் பண்ணி குழந்தையை வெளியே எடுத்தாங்க. குழந்தைக்கு எய்ட்ஸ் பாதிப்பு இல்லை. எய்ட்ஸ், தீ-ன்னு ரெண்டு முறை சாவைத் தொட்டுப் பார்த்துட்டு, நல்லபடியா வந்து சேர்ந்த என் பொண்ணுக்காக வாழ ஆரம்பிச்சுட்டேன்.

சூசன்னு ஒரு ஆங்கிலோ இந்தியன் பொண்ணு 'எய்ட்ஸை எதிர்த்து வாழ முடியும்'னு நம்பிக்கை கொடுத்தாங்க. எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவங்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து, இன்னிக்கு 'தமிழ் நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகத்'தின்ஆலோ சகர் நான். ஒவ்வொரு நாளும் என் பொண்ணு ஸ்கூலுக்குக் கிளம்பி டாட்டா சொல்லுவா. அப்போ 'ஆண்டவா! அவ திரும்பி வர்ற வரை நான் உயிரோடு இருக்கணும்'னு வேண்டிப்பேன். ஐ லவ் மை சரிகா. ஏன்னா, என் காதலோட ஒரே உயிர் எச்சம் அவ தான்!'' என்கிறார் விஜி.

ஈழத்தின் இறுக்கத்தில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாகத் தமிழர்கள் வருவதுதான் வழக்கமான காட்சி. முதல்முறையாக சிங்கள காதல் தம்பதி ஒன்று உயிரையும் காதலையும் காப்பாற்றிக்கொள்ள தமிழகம் வந்திறங்கி ஆச்சர்யம் கொடுத்திருக்கிறார்கள். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக எரிந்த முத்துக்குமாரின் கடைசிக் கடிதத்தில், 'ஈழத்தில் இருந்து தப்பி வந்த சிங்கள ஜோடியை அகதிகளாக அங்கீகரிக்க வேண்டும்' என்பதும் ஒரு கோரிக்கை. கடல் கடந்த தமிழர்களுடன் ஒட்டி வந்த துஷாரா சந்தனா, தாருகா தில்கானி என்ற அந்த சிங்கள ஜோடி மீது, குடியுரிமை மீறிய வழக்கு சுமத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார் கள். அந்த ஜோடி சிறைக்குச் செல்லும் சில நிமிடங்கள் முன், சிங்கள நண்பரின் உதவியோடு பேசி னோம்...

''கொழும்பில் என் கூடத்தான் தாருகா தில்கானியின் அப்பா வேலை பார்த்தார். இதனால் தாருகாவோடு ஏற்பட்ட பழக்கம் காதலில் முடிந்தது. இருவர் வீட்டினரும் எங்க காதலை ஏத்துக்காததால, வீட்டைவிட்டு வெளியேறி கல்யாணம் பண்ணிக்கிட்டு தனிக்குடித்தனமா இருந்தோம். என் தம்பி ஒரு தமிழ்ப் பெண்ணைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிகிட்ட விவகாரம் தொடர்பா, போலீஸ் சம்பந்தமே இல்லாம எங்களைத் தொந்தரவு பண்ணாங்க. போலீஸ்கிட்ட இருந்து தப்பிக்க, வவுனியாவில் இருந்த தாருகாவின் உறவினர் வீட்டுக்குப் போயிட்டோம். அது இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், தினமும் எங்களிடமும் சோதனை நடத்துவாங்க. சிங்களனான நான் தமிழர்களுடன் தங்கி இருந்ததால், ஆர்மிக்காரங்க விசாரணைக்கு வரும்போதெல்லாம் அடிச்சு மிரட்ட ஆரம்பிச்சாங்க.

திடீர் திடீர்னு இலங்கை ராணுவத்தினர் எங்க பகுதியில் குண்டு வீசுவதால், காடுகளில் பசி பட்டினியுடன் காத்திருப்போம். இந்தச் சமயத்துல எங்களுக்கு அடைக்கலம் கொடுத்த தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாகப் போகப் போறதா சொன்னாங்க. அவங்களை விட்டா எங்களுக்கு வேற போக்கிடம் இல்லாததால, உயிர் பிழைத்துக் கிடக்க நாங்களும் அகதிகளா இந்தியாவுக்குக் கிளம்பி வந்துட்டோம்!'' என்றார் துஷாரா சந்தனா.

நம்பி வந்தவர்களை எப்படி நடத்த வேண்டும் என்று சிங்களர்களுக்குச் சொல்வதற்கு நமக்கொரு வாய்ப்பு!