18-02-09

காதல் ஸ்பெஷல்

லவ் ஆல்!

- எஸ்.கலீல்ராஜா

மனசும் வயசும் விளையாடுகிற மைதானம்...
காதல்!
இங்கே மைதானத்தில் விளையாடுபவர்களின்
காதல்கள் கொஞ்சம்...

டென்னிஸின் டாப் ராக்கெட்டான அனா இவானோவிச்சுக்கு இந்த பிப்ரவரி 14, காதல் தோல்வி தினம். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த, உலக அளவில் 9-வது ரேங்க்கில் இருக்கும் டென்னிஸ் பிளேயரான ஃபெர்னாண்டோ, அனாவின் காதல் கனா.

சென்ற வருட யு.எஸ். ஓப்பன்போட்டி யில் ஃபெர்னாண்டோவைப் பார்த் ததுமே காதல் வளர்த்தார் அனா. 'லவ் ஆல்' என்பது ஃபெர்னாண்டோ பாலிஸி என்பதால், காதல் பாஸ்பரஸ் பற்றிக்கொள்வதில் சிக்கல் இருக்கவில்லை. அனா ரொம்பவே ஓப்பன் டைப் என்பதால், இருவருக்கும் பிடித்திருக்கிறது. 'டேட்டிங் போனோம். இன்னும் அவரைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவேளை திருமணத்தில்கூட இது முடியலாம்!' என்று மீடியாக்களிடம் அறிவித்தார். ஆனால், என்ன நடந்ததோ கடந்த வாரம், 'நாங்கள் இருவரும் பிரிகிறோம். இனி, என் கவனமெல்லாம் டென்னிஸ் மீது மட்டும்தான்!' என்று கண்கலங்க அறிவித்துவிட்டார் அனா.

அதே டென்னிஸின் இன்னொரு அழகி மரியா ஷரபோவாவுக்கு ஆன்டி ரோடிக்குடனான காதல் 'கசக்குதய்யா'!

உலக டென்னிஸ் தர வரிசைப் பட்டியலில் 6-வது இடத்தில் இருக்கும் ஆன்டி ரோடிக், ஏற்கெனவே அமெரிக்க பாப் பாடகி மேன்டி மூருடன் இரண்டு வருடங்கள் காதலில் இருந்தவர். பார்ட்டிகள், ஃபேஷன் ஷோக்கள் என ஷரபோவாவும் ஆன்டியும் கப்ளிங்காகச் சுற்றித் திரிய, பரபரப்பானது டென்னிஸ் மைதானம். ஆனால், மீடியாவிடம் மட்டும் இருவரும் காதல் பற்றி வாய் திறக்கவில்லை. மரியா நம்பர் ஒன் இடத்திலிருந்து சறுக்க, காதல் கத்திரிக்காய்களில் இருந்து விலகி, டென்னிஸ் பக்கம் கவனம் திருப்பினார். காதல் ஜோடிகள் தனித் தனிப் பாதையில் பறந்தன.

இடையில், ஒரு ஸ்போர்ட்ஸ் சேனலின் அதிபருடன் சுற்ற ஆரம்பித்தார் மரியா. இருவருக்கும் காதல் என்று வருகிற செய்தியை இருவரும் இது வரை மறுக்கவில்லை. பொறுத்துப் பார்த்து வெறுத்துப் போன ஆன்டி ரோடிக், 'அமெரிக்கன் ஃபேஷன்மாட லான ப்ரூக்ளின் டெக்கரைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன்!' என்று அறிவித்திருக்கிறார். இதற்கும் மரியாவிடம் இருந்து நோ ரியாக்ஷன்!

கால்பந்து சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பிரச்னையே காதல்தான். டி.வி. நடிகையான ஜெம்மா அட்கின் சனுடன் முதலில் காதலில் இருந்த ரொனால்டோ, இப்போது ஸ்பானிஷ் மாடல் நெரைடா கலார்டோவுடன் கண்டபடி காதலில் இருக்கிறார். டாப்லெஸ் போஸ் கொடுக்கும் அளவுக்கு நெரைடா ஹாட் ஃப்ரீக்கி கேரக்டர். பப்பராஸி போட்டோகிராபர்கள் பற்றிக் கவலையே இல்லாமல் பீச்சில்கூட டாப்லெஸ்ஸாகக் குளிக்கிற நெரைடாவின் கேரக்டர் ரொனால்டோவின் அம்மாவுக்குப் பிடிக்கவில்லை. போதாக்குறைக்குக் கண்டபடி சிகரெட் ஊதித் தள்ளுவார். இன்னொரு இடியாக, நெரைடா தன் முன்னாள் காதலனுடன் அடிக்கடி நைட் கிளப் சந்திப்பு நிகழ்த்தும் செய்திகள். ஓர் அட்டகாசமான அதிகாலையில், 'ரொனால்டோவும் நெரைடாவும் பிரிந்துவிட்டார்கள்' என்று கட்டம் கட்டி செய்தி வெளியிட்டன மீடியாக்கள். திடீரென்று ஒரு எதிர்பாராத நாள் இருவரும் ஜாலி டிரிப் அடித்து, மொத்த மீடியாவையும் டென்ஷன் பண்ணினார்கள். இப்போது மீடியாவைவிட அதிக டென்ஷனில் இருக்கிறார் ரொனால்டோவின் அம்மா!

நம்ம பையன் யுவராஜ் சிங்குக்கும் அம்மா பிரச்னைதான். யுவராஜ் இந்தி நடிகை கிம் சர்மாவோடு லவ்வியது முன் கதை. கிம் கிளாமர் நடிகை என்பதால், யுவராஜின் அம்மா பல கட்ட நடவடிக்கைகளில் இருவரையும் பிரித்துவிட்டார். இடையில் தீபிகா படுகோனை சின்சியராகக் காதலித்தார் யுவராஜ். தீபிகா கை கழுவியதில் பார்ட்டி படு அப்செட். பல மேட்ச்சுகளில் சொதப்பி, இப்போதுதான் மீண்டு(ம்) வந்திருக்கிறார் இந்த சிக்ஸர் சிங். இப்போது கிம் சர்மா - யுவராஜ் காதல் மீண்டும் துளிர்விட்டிருக்கிறது என்கிற வதந்தி, யுவராஜ் அடிக்கும் சிக்ஸர் பால் போலவே றெக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்திருக்கிறது. கொஞ்ச நாள் முன்பு இருவரும் ஒரு பார்ட்டியில் நட்புடன் சிரித்துக்கொண்டார்கள். முழுக்க முழுக்க நல்ல பையனாக கிரவுண்டிலேயே யுவராஜ் இருப்பதால், இந்தச் செய்தி உண்மையா... பொய்யா என்பது தெரியாமல் காத்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். கூடவே அவரது அம்மாவும்!

டீமுக்குள் உள்ளே - வெளியே விளையாட்டு விளையாடினாலும் ஹர்பஜன் சிங் எப்பவும் செய்திச் சிங்கம்தான்!

கீதா பஸ்ரா... இரண்டே படங்களில் நடித்திருக்கும் இந்தி நடிகை. நடிப்பால் கிடைக்காத புகழ், ஹர்பஜனின் காதலி என்பதால் கீதாவுக்குக் கிடைத்திருக்கிறது. இங்கிலாந்தில் பிறந்தாலும் கீதாவின் பூர்வீகம், பஞ்சாப். 'ஒன்றும் ஒன்றும் ரெண்டு... சிங்குக்கு கீதா கேர்ள் ஃப்ரெண்டு' என்று முடிவு செய்துவிட்டார்கள். பார்ட்டிகள், ஃபங்ஷன்கள் என்று சேர்ந்து சுற்றி, ஜோடியாக சல்சா ஆடினாலும் எல்லோரையும் போல 'நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்' என்று சத்தியம் செய்கிறார்கள் இருவரும்!

சானியாவின் மனசில் அத்தனை ரகசியம்! காத்ரீனாவுடன் காதல் கன்ஃபர்ம் ஆவதற்கு முன், சல்மான்கானோடு கிசுகிசுக்கப்பட்டார் சானியா. ஷாகித் கபூர் - கரீனா கபூர் லவ் ஃப்ளாப் ஆனதும் ஷாகித்தோடு ரெஸ்டாரென்ட் பக்கம் தென்பட்டார் சானியா. இருவரும் காதலில் இருக்கிறார்கள் என்றதும் பரபரப்பானது பாலிவுட்டும் டென்னிஸ் கோர்ட்டும். 'எங்களுக்குள் நல்ல டெம்போ இருக்கிறது. ஆனால், நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டுமே!' என்று சந்தோஷமாகப் பேசினார் ஷாகித். இடையில் காயம் காரணமாக சானியா டென்னிஸில் சொதப்பி, ரேங்க்கில் ரிவர்ஸ் செஞ்சுரி அடிக்க, மிகத் தீவிரப் பயிற்சியில் கவனம் செலுத்தினார். கொஞ்ச நாட்கள் சானியா பக்கம் வராமல் ஒதுங்கியே இருந்த ஷாகித், இப்போது வித்யா பாலனுடன் ஊர் சுற்ற ஆரம்பித்திருக்கிறார். திரும்பவும் வெற்றிப் படிக்கட்டில் ஏற ஆரம்பித்திருக்கும் சானியா எப்போதும் போல மௌனமாகக் காத்திருக்கிறார்.

ஆறடி நான்கு அங்குலம் உயரத்தில் இருக்கும் இஷாந்த் ஷர்மா, பாலிவுட் நடிகைகளில் உயரமான காத்ரீனாவின் 5 ஸ்பீட் ஃபேன்! காத்ரீனாவை நேரில் சந்தித்து கடலை போட வேண்டும் என்பது இஷாந்தின் நீண்ட நாள் ஆசை. இந்த விஷயம் இஷாந்த் விளையாடும் கொல்கத்தா ரைடர்ஸ் அணியின் ஓனர் ஷாரூக்கான் கவனத்துக்கு வந்திருக்கிறது. உடனே, காத்ரீனாவை ரகசியமாக வரவழைத்து, இஷாந்தைச் சந்திக்கவைத்து (சந்திக்க மட்டும்தான்!) சர்ப்ரைஸ் ஷாக் கொடுத்திருக்கிறார் ஷாரூக். இப்போது காத்ரீனாவிடம் ட்வென்டி - ட்வென்டி வேகத்தில் ஃப்ரெண்ட் ஆகிவிட்டார் இஷாந்த். சல்மானோடு சச்சரவில் இருக்கும் காத்ரீனா, இஷாந்த் பக்கம் திரும்புவாரா என்று தாவாங்கட்டையில் கை வைத்துக் காத்திருக்கிறது பாலிவுட்!

இந்த விளையாட்டுப் பசங்களுக்குக் காதல்னாலே விளையாட்டாப் போச்சு!