18-02-09

தொடர்கள்

காதலுக்கு மருந்து உண்டா?

ஹாய் மதன, கேள்வி பதில்

எஸ்.சுகந்தகுமாரி, செகந்தராபாத்.

உங்களுக்குப் பிடித்த மிகச் சிறந்த ஹாலிவுட் திரைப்படங்களை வரிசைப்படுத்துங்களேன்?

என்னை விடுங்கள்... அமெரிக்கத் திரைப்பட இன்ஸ்டிட்யூட் மற்றும் சினிமா விமர்சகர்கள் இணைந்து, மிகச் சிறந்த 100 காதல் படங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அதில் 'டாப் 10' இதோ... Casablanca, Gone With The wind, Westside Story, Roman Holiday, An Affair to remember, The way we were, Doctor zhivago, Its a Wonderful Life, Love Story, City lights. 37. 37-வதாக Titanic  வருகிறது!

சங்கமித்ரா நாகராஜன், கோவை-6.

கிரேக்கக் காதல் தெய்வமான 'க்யூபிட்' (cupid) ஏன் குழந்தை வடிவத்தில் இருக்க வேண்டும்? போதாக்குறைக்கு கைகளில் வில்லும் அம்பும் வேறு! ஏன் இந்த முரண்பாடு?

ரோமானியர்களுக்குத்தான் அவர் க்யூபிட். கிரேக்கர்களுக்கு ஈராஸ் (Eros). இருவரும் ஒருவரே என்றாலும், குணாதிசயங்கள் வெவ்வேறு. க்யூபிட் விஷயத்தில் ஓர் ஆச்சர்யம்... அவரது வயது குறைந்துகொண்டே வருவதுதான். ஆரம்பத்தில் (கி.மு. எட்டாம் நூற்றாண்டில்) க்யூபிட் இளைஞராகத்தான் கற்பனை செய்யப்பட்டார். அவருடைய லூட்டிகளையும் சிறுபிள்ளைத்தனத்தையும் பார்த்த பிறகு, அவரை வளர்ந்த குழந்தையாக இறக்கையோடு மாற்றினார்கள். பிறகு, மன்மதன் மாதிரி முதிர்ந்த இளைஞராக! 'இந்திரலோகத்தை' ஆண்ட ஜூபிடரே அவரிடம் பயந்தார். அம்மா (அஃப்ரோடைட்) மீது அம்பு எய்து (மன்மதன், சிவபெருமான் மீது அம்பு எய்ததைப் போல!) அவளையே காதல் வயப்படச் செய்ததால், அவள் கோபப்பட்டு 'க்யூபிட்'டின் வில்-அம்புகளைப் பறித்துக்கொண்டாள். மன்மதனுக்குக் கரும்பு வில், மலர் அம்பு போல 'க்யூபிட்'டுக்கு இரண்டுவிதமான அம்புகள் உண்டு - தங்கம், ஈயம்!

தங்க அம்பை எய்தால் காதல்; ஈயம்- தகராறு, சண்டை! அவ்வப்போது அதுவும் இதுவுமாக மாறி மாறி எய்வது 'க்யூபிட்'டின் விஷமத்தனம். பிற்பாடு, அவரே Psycheயிடம் காதல்வயப்பட்டு, அவளை மணந்துகொண்ட பிறகுதான் சற்று திருந்தினார். காதலி Psycheயை ஆன்மாவின் உருவகமாக பண்டைய ரோமானியர்கள் கருதினார்கள். காதலும் ஆன்மாவும் இரண்டறக் கலந்தது!

சி.சரவணன், சேலம்-3.

எழுத்துத் துறையிலும், சினிமா துறையிலும் இருப்பவர்கள் பெரும்பாலும் சொந்தப் பெயரை விட்டு வேறு பெயருக்கு வந்துவிடுவது ஏன்?

இந்தத் துறைகளில் பிற்பாடு அவர்கள் பிரபலமாக ஆகப்போகிறார்கள் என்கிற நம்பிக்கையே இல்லாமல், பெற்றோர் லோக்கலாக 'கண்டாரம்பட்டியான்' என்று ஏதோ ஒரு பெயரை வைத்துத் தொலைத்துவிடுகிறார்கள். ஆகவே, மீடியாவுக்குள் வந்த கையோடு திலீப்ராஜ், ரூப்குமார் என்று புதுப் பெயரை வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது! 'ஹாலிவுட்'டில் பிரபலமாவதற்கு முன்பு ஜாக்கிசானின் பெயர் சான்காங்ஸ¨ங்!

எல்.ஜி.விஸ்வம், சென்னை-31.

நத்தை படு'ஸ்லோ'வாகத்தானே காதலிக்கும்?

உண்மைதான். ஆனால், அதுதானே ஜோர்!

வியப்பான விஷயம் - நத்தையால் தன்னை ஆணாகவும் பெண்ணாகவும் (இரண்டுமே ஒரே சமயம்!) மாற்றிக்கொள்ள முடியும் (அதற்குப் பெயர் Hermaphrodite). பார்ப்பதற்கு ஒரே ஜோடிதான். ஆனால், உண்மையில் இரண்டு ஜோடிகள். உடல் முழுதும் ஓட்டுக்குள் இருப்பதால், தலைப்பகுதியில் நத்தைக்கு ஆண், பெண் இரு உறுப்புக்களும் அமைந்திருப்பது இன்னுமொரு ஆச்சர்யம்! தலையில் உள்ள 'ஆன்ட்டெனா'க்களால் ஜாலியாக 'கத்திச் சண்டை' போட்டவாறு சுமார் இரண்டு மணி நேரம் காதல் விளையாட்டில் நத்தைகள் ஈடுபடும் - Fore play!

பிறகு, ஓ.கே. என்று இரண்டுமே ஒன்றின் தலை மீது இன்னொன்று விந்தைப் பீய்ச்சி அடிக்கும் விந்தை நிகழும். இரண்டுமே கர்ப்பம் தரிக்கும். இரண்டு வாரங்கள் கழித்து முத்துக்கள் போன்ற முட்டைகளிலிருந்து மினியேச்சர் சைஸில் நத்தைக் குட்டிகள் வெளிப்படும்!

ஏ.

காந்த், சென்னை-11.

காதலும் காமமும் இணைந்திருப்பதில் என்ன தப்பு?

தப்பே இல்லை!

ஆனால், வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளுங்கள். காமம் எப்போதாவது போய்விடும். கடைசி மூச்சு வரை காதல் உங்களோடு இருக்கும்!

கே.பி.ஸாரதி, சென்னை-40.

காதலுக்கு மருந்து உண்டா..?

'காதலுக்கு ஒரே மருந்து - இன்னும் அதிகமாகக் காதலிப்பது!' - இப்படிச் சொன்னவர் நம்ம காந்திஜியே மதித்த அமெரிக்க மேதை தோரோ!