18-02-09

தொடர்கள்

கிருஷ்ணவேணி

- பா.ராஜநாராயணன், படம்: 'தேனி'ஈஸ்வர்

''போட்டாவ அனுப்பிவையுங்க... மறந்துப்புடாதீங்க.'' - பத்து முறை சொல்லிவிட்டான் படகுக்காரன். காதல் ஜோடிகள் சிரித்துக்கொண்டார்கள். ''போட்டோ என்ன பிரமாதமான விஷயமா, நிச்சயமா அனுப்பிவெப்போம்.'' - சிரித்தாள் அந்தப் பெண்.

தன்னை அருவியில் வைத்துப் புகைப்படம் எடுத்தது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது பேச்சிமுத்துவுக்கு. இருந்தாலும், நிமிடங்கள் நகர நகர... ஒருவித பயம் வந்து அப்பிக்கொண்டது. லேசாக இருட்ட ஆரம்பிக்க... கொஞ்சம் அவசரமாகவே கிளம்பினார்கள் கரைக்கு. ஆழமான அமைதி, அரைகுறை வெளிச்சத்தில் அந்த படகுப் பயணம் கடும் பயத்தைக் கொடுத்தது. அவர்களைப் பத்திரமாகக் கரை சேர்த்துவிட்டுப் பெரிதாக மூச்சுவிட்டவன், ''அந்த போட்டோவ மறந்துடாதீங்க!'' என்று அவர்களை அனுப்பிவைத்தான். சரியாக இரண்டு வாரங்களுக்குப் பிறகு, கையில் ஒரு கவருடன் பேச்சிமுத்துவைத் தேடி அணைக்கரைக்கு வந்து நின்றார் தபால்காரர்.

காலையில் பிடித்த மீனை வீட்டில் கொடுத்துவிட்டு வரக் கிளம்பியவனை மறித்து ஒருவன், ''ஏ! பேச்சி. உன்னையத்தான் தபால்கார அண்ணாச்சி தேடிட்டு அணைக்கரைக்குப் போயிருக்காரு. சீக்கிரம் போ'' என்று சொல்ல, ''எதிர்லதானே வந்தோம்... எப்படி அவரைப் பாக்காம விட்டோம்'' என்று ஆச்சர்யமும் அவசரமுமாக கரை பார்த்து ஓடினான்.

வழியிலேயே பிடித்துவிட்டான் தபால்காரரை. அங்கேயே அவசரமாக கவரைப் பிரித்தான் பேச்சிமுத்து. ''அட, இது ஆஸ்திரேலியாக்காரங்க எடுத்ததுல்ல...'' என்று போட்டோவைப் பார்த்தான். அருகில் இருந்த தபால்காரரிடமும் படத்தைக் காட்டினான். அடுத்த படம்... அருவியில் குளித்துக்கொண்டு இருந்தான் பேச்சிமுத்து. அருகிலேயே ஒரு பெண் உருவம். ஆனால், உருவம் தெளிவில்லாமல் இருந்தது. அந்த உருவத்தை சிவப்பு ஸ்கெட்ச்சால் பெரிதாக வட்டமிட்டு, போட்டோவுக்குக் கீழேயே, 'நீங்க குளிக்கும்போது அந்த இடத்தில் யாருமே இல்லை. நாங்க படம் எடுக்கும்போது நீங்க மட்டும்தான் இருந்தீங்க. அப்ப உங்க பக்கத்துல குளிக்கிறது யாரு?' என்ற கேள்வியோடு துண்டுக் காகிதம் ஒட்டியிருக்க... அப்படியே உறைந்துபோனான் பேச்சிமுத்து!

அன்று இரவு பேய்க் காய்ச்சல் வந்தது பேச்சிமுத்துவுக்கு.

''பக... பக...'' - விகாரமாகச் சிரித்தான் குட்டி.

''நிஜமாவாடே சொல்லுத. போட்டோவுல பேய் தெரியுதா? சும்மா கத வுடாதடே.''

''ஏல! கோட்டி. நிசத்தத்தான் சொல்லுதேம். எஸ்டேட்ல வேலன்னு ரெண்டு நாளு காணிக் காரங்ககூடப் போயிருந்தேம். போன இடத்துலஇதப் பத்திதாம்டே பேச்சு'' என்றான் அவன் நண்பன் கணேசன். இருவரும் நின்றிருந்தது கல்யாண தீர்த்தம் தடாகத்தின் உச்சியில்.

''சரி, அதவுடு. நாம பாணதீர்த்தம் அருவிக்குப் போகணும். விக்கிரமன ஒரு தடவ பாக்கணும்னு நினைக்கேம். நீ என்ன சொல்லுத?''

''அது சரி! நீ ஏம்ல அவனப் பாக்கணும்னு சொல்லுத?'' என்றான் கணேசன்.

''நா மட்டுமில்லடே. நேத்து போலீஸூ இன்ஸ்பெக்டரு கூப்பிட்டுவிட்டாரு. என்னமோ ஏதோன்னு போனாக்க, 'ஏ! நீதாம் குட்டியா?'ன்னாரு. 'ஆமாங்கய்யா!'ன்னு கும்பிடு போட்டுட்டு நிக்கேம். 'பாண தீர்த்தம் அருவியில முங்கியிருக்கியா?'ன்னாரு. 'என்னய்யா, எவனும் விழுந்து தொலைச்சுப்புட்டானா?'ன்னு கேட்டேன்.

'என்ன எளவு ஸ்டேசனுடே இது. வந்ததுலேர்ந்து அருவியிலேயும் ஆத்துலயுமா பத்து பொணத்தத் தூக்கியாச்சு. ஒவ்வொரு தடவையும் விக்கிரமனத் தேடுறதும், அவன வெச்சு பொணத்தத் தூக்குறதும் பெரிய வேலயாக்கெடக்கு. கொஞ்சம் இடத்தப் பாத்துகிட்டேன்னா... நல்லா இருக்கும்'னு சொன்னவரு, 'எவனும் விழுதானோ இல்லியோ... ஆளுங்கள ரெடி பண்ண வேண்டிக்கிடக்கு பாரு. எளவு எடுத்த ஊருடே இது'ன்னு தலையில அடிச்சுக்கிட்டாரு இன்ஸ்பெக்டரு. அங்கனயே சிரிப்பு வந்துடுச்சு. 'ஐயா, நாளைக்கே போறேம்யா!'ன்னு ஓடியாந்துட்டேன்'' என்ற குட்டி, ''நாளைக்குப் போய்டுவோமாடே?'' என்றான்.

''பேச்சிமுத்து போட்டாவக் காட்டிக் காட்டிப் பேசுதானாம். நாலு நாளாகியும் காய்ச்சல் குறையலியாம். என்னத்தச் சொல்ல. கண்ட நேரத்துல அருவிக் கரையில நிக்காதீங்கடான்னு சொன்னாப் புரிய மாட்டேங்குது'' - காணிக் குடியிருப்பு முழுக்க இதே பேச்சாகவே இருந்தது. கூடவே, ஒவ்வொருவர் மனதிலும் அச்சம் பிடித்துக்கொண்டது.

''என்ன விக்கிரமா, கேட்டியா? பேச்சிமுத்து பக்கத்துல ஒரு பொண்ணு குளிக்க மாதிரி பளிச்சுனு போட்டோல தெரியுதாமே?'' என்று ஊர்க் காணிமட்டு மில்லை. பலரும் வந்து விசாரிக்க ஆரம்பிக்க... விக்கிர மனுக்கும் கொஞ்சம் யோசனை வர ஆரம்பித்ததுஎதுக் கும் ஒரு எட்டு பேச்சிமுத்துவைப் பார்த்துட்டுவந்துட லாம் என்று எழுந்தவனை மறித்தாள் வள்ளியம்மாள்.

''போதும். இனிமே நீங்க அருவிக்கரைக்குப் போவே கூடாது. பேய் பிடிச்சுடுமோன்னு பேடியாக் கெடக்கு'' என்று அழ ஆரம்பித்தாள்.

''அட ச்சீ! உனக்குக் கரையுறது தவிர வேற அறியுலய்யா யென. என்ன இப்ப போட்டோவுல தெரியுதுன்னு சொல்லுதாங்க, அம்புட்டுதானே. வுடு யென. அப்படியே இருந்தாலும் எனக்கு ஒண்ணுமே ஆவாது. ஆ கிருஷ்ணவேணிப் பெண்ணு இருந்து என்னையக் காக்கும்'' என்றபடி வேகமாக வெளியே கிளம்பிப் போனான்.

ஊரில் மெதுவாகத் தலை நீட்டி விசாரிக்க ஆரம்பிக்க... கிட்டத்தட்ட அத்தனை பேருமே அருவிக்கரைக்கு மாலை நான்கு மணிக்கு மேல் செல்வதற்கே அச்சப்பட்டார்கள். விக்கிரமனும் மனதுக்குள் கொஞ்சம் சுருண்டு கொள்ள ஆரம்பித்தான். மொத்த காணிக் குடியிருப் புமே உறக்கத்தில் இருந்த நள்ளிரவு நேரம்... விக்கிர மனுக்கு உறக்கம் பிடிக்கவில்லை. தற்செயலாக எழுந்து, வீட்டுக்கு வெளியே எட்டிப் பார்த்தான். தூரத்தில் விலங்குகளுக்காகப் போடப்பட்டு இருந்த நெருப்பு தணிந்து புகைந்துகொண்டு இருந்தது.

நிதானமாக பீடி ஒன்றைப் பற்றவைத்துக்கொண்டான். இவன் சிந்தனையிலும் மறுபடி மறுபடி பேச்சிமுத்துவே வந்துகொண்டு இருந்தான். இன்று மாலை மந்திரம் சொன்னது கேட்டுச் சிரிப்பதா இல்லை... யோசிப்பதா என்பது அவனுக்குப் புரியவில்லை. 'அருவியிக்குப் போவாத... போவாத' என்று வள்ளியம்மாள் வேறு அடிக்கடி புலம்புவதும் கொஞ்சம் யோசிக்கவைத்தது.

தீவிரமாக யோசித்துக்கொண்டு இருந்தவனது மனது அப்படியே அருவிக்கரை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தது. அடிக்கடி கனவு வருவதும், தொடர்ச்சி யாக யாராவது விழுந்து சாவதும் கொஞ்சம் குழப் பத்தையே அதிகரித்தது.

''ச்சே! என்ன கெடக்குன்னு அறிஞ்சுலயே'' - வாய்விட்டுச் சொல்ல... பின்னால் நின்றிருந்தாள் வள்ளியமாள்.

''என்னது, உறங்கலியோ?'' என்றாள்.

''இல்ல யென. உறக்கம் பிடிக்குல்லா. நடக்கக் காரியங்கள யோசிக்க தல கிறங்கினி!''

''எந்துருவும் ஆய. நீங்க இனிமே அருவிக்குப் போ வேண்டா'' என்றாள், அவள் பங்குக்கு. சரியென்று வள்ளியம்மாளைச் சமாதானப்படுத்திவிட்டு, நன்றாக உறங்கியும்விட்டான் விக்கிரமன்.

மெதுவாக வெளிச்சம் பரவியது... காரையார் அணையில் தோழிகளுடன்... யார் அது கிருஷ்ணவேணி மாதிரி தெரியுது என்று கூர்ந்து கவனித்தான் விக்கிரமன். ஐயோ! கிருஷ்ணவேணியேதான். நீல நிறப் புடவையில் படகில் தோழிகளுக்கு நடுவே கைகளை அகல விரித்து, கண்களை மூடியபடி ஒருவித அமானுஷ்யத்தில் லயித்திருந்தாள். பின்னால், கொட்டிக் ªகாண்டு இருந்தது பாணதீர்த்தம் அருவி.

சட்டென்று திடுக்கிட்டு உறக்கம் கலைந்து எழுந்தான் விக்கிரமன். 'ஐயோ! எந்துரு சொப்பனம் இது?' என்று நடுநடுங்க ஆரம்பித்தான்.

''நெனெச்சேம்... இருபது நாளாச்சே ஒருத்தனும் சாவலியேன்னு. விழுந்துட்டானா... யாருய்யா அது? நெய்வேலிக்காரனா... இன்ஜினீயரா? படிச்ச ஆளு பாத்து போயிருக்கக் கூடாதா?'' - டெலிபோனிலேயே நொந்துகொண்டு இருந்தார் அந்த இன்ஸ்பெக்டர்.

''யோவ்! போங்கய்யா... போயி அந்தக் குட்டிப் பயலக் கூட்டிட்டுப் போங்க. அருவியில ஒருத்தம் விழுந்துட்டானாம்'' என்றார். பாபநாசம் மலைப் பாதையில் கரும் புகை கக்கியபடியே ஏறிக்கொண்டு இருந்தது அந்த போலீஸ் ஜீப். 'எப்படியும் தண்ணிக்குள்ள புகுந்து பொணத்தத் தூக்கிப்புடணும்.' - தீவிரமாக யோசித்தபடியே ஜீப்பின் பின்னால் இருந்தான் குட்டி!

- திகிலடிக்கும்...