18-02-09

தொடர்கள்

நாயகன் - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

அஜயன் பாலா

சென்ற இதழ் தொடர்ச்சி...

'இரவு எனும் காராக்கிரகம் நம்மைச் சூழ்ந்திடும்போதெல்லாம், காலைப் பகலவனின் அற்புத வெளிச்சம் நம்மை நெருங்கிவிட்டது
என்பதே அர்த்தம்!'

- நேதாஜி

கல்கத்தா நகரம் கதி கலங்கியது. மேயராகப் பதவி ஏற்று ஒரே வாரத்திலேயே சுபாஷ் சந்திரபோஸ் கைது செய்யப்பட்டால், யாருக்குத்தான் கொதிப்பு வராது! தடை செய்யப்பட்ட மால்டா பகுதிக்குள் நுழைந்ததுதான், அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் என்றது பிரிட்டிஷ் அரசாங்கம். ஆனால், எதிர்ப்புகள் கடுமையாக இருப்பதைக்கண்டு அஞ்சி, அடுத்த வாரமே அவரை விடுதலை செய்தது. ஆறாவது மாதத்திலேயே சுபாஷ் மீண்டும் பிரிட்டிஷ் காவலர்களால் பம்பாயில் சுற்றி வளைக்கப்பட்டார். இம்முறை சுபாஷின் கைதுக்குக் காரணம், காந்தி.

லாகூர் சதி வழக்கில் பகத் சிங், ராஜ குரு, சுகதேவ் ஆகியோரை பிரிட்டிஷ் அரசாங்கம் தூக்கிலிட்டதன் காரணமாக இந்தியாவே உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்த காலம். இது நடப்பதற்குச் சில நாட்களுக்கு முன், இர்வினுடன் ஒப்பந்தத்தில் காந்தி கையெழுத்திட்டபோது, மேற்சொன்ன மூவரையும் விடுவிப்பதை ஒரு கோரிக்கையாக முன்வைக்கச் சொல்லி சுபாஷ் உள்ளிட்ட பலரும் கேட்க, காந்தி கடைசி வரை வாய் திறக்காமல் இருந்துவிட்டார். அயர்லாந்து போராட் டத்தில் சைன் பின் எனும் போராளியை இப்படிக் காப்பாற்றிய வரலாற்றை சுபாஷூம் காந்திக்குஎடுத்துக் கூறினார். ஆனால், கடைசி வரை காந்தி மௌனம் சாதித்தார். காரணம், எங்கே இதனால் நமக்கு அவர்கள் தரப்போகும் உடனடி சுதந்திரத்துக்குக் குந்தகம் வந்துவிடுமோ எனும் அச்சம்.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது வட்ட மேசை மாநாட்டுக்கு காந்தி லண்டன் சென்றார். ஆனால், மாநாட்டில் பெரும் தோல்வியுடன் காந்தி பம்பாய் திரும்பினார். பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் நாம் எவ்வளவு உண்மையாக நடந்தும் பலன் இல்லை என்பதை காந்தி வெகு தாமதமாகப் புரிந்துகொண்டார். இதன் காரணமாக, நிறுத்திவைத்திருந்த சட்ட மறுப்பு இயக்கத்தை மீண்டும் தொடர்வது என காந்தி அறிவித்தார். காந்தியின் இந்த மனமாற்றம் சுபாஷூக்கு மன மகிழ்ச்சியைத் தந்தது. அடுத்த போராட்டத்துக்கு சுபாஷ் தயாரானார்.

உஷாரான பிரிட்டிஷ் அரசாங்கம், மீண்டும் இந்தியா முழுவதும் உள்ள தலைவர்களை வேட்டையாடிச் சிறையில் அடைத்தது. கைது செய்யப்பட்ட சுபாஷ், முதலில் ஜபல்பூர் சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டு பின் சென்னை சிறைக்கு மாற்றப்பட்டார். அது அவரது வாழ்க்கையின் திருப்பு முனை.

ரயில் தண்டவாளம் போலத்தான் தமிழகமும் வங்காளமும். இரண்டும் இந்தியாவின் பிரிக்க முடியாத இணை கோடுகள். இந்தியாவின் இதர மொழிகளைக் காட்டிலும், பண்பாடு, கலாசாரம், இலக்கியம் ஆகிய வற்றில் தொன்மையும் ஆழமும் கூடியவை இவை இரண்டும்தான். இதனாலேயே இரண்டும் இந்தியாவின் மைய அச்சிலிருந்து காலங்காலமாக எப்போதும் முரண்பட்டே வந்திருக்கின்றன. அதிலும் விடுதலைப் போராட்ட காலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைக்கு ஆளான வங்க சிங்கங்களுக்குத் தோள் கொடுத்து உதவிய தோழர்கள், தமிழர் கள்தான்.

பாண்டிச்சேரியில் பாரதி, அரவிந்தருக்கு அரண் அமைத்துத் தந்தார். அதே போல கைதியாக சுபாஷ் சென்னை சிறையில் இருந்தபோதுதான் அவருக்கு உற்ற சகாக்களாக இருந்த தெய்வநாயகம், கண்ணாயிரம், ஏகாம்பரம், சபாபதி, சங்கர் போன்றவர்களின் ஆதரவுக் கரங்கள் பின்னாளில் உருவாக இருந்த இந்திய தேசிய ராணுவப் படை எனும் பிரமாண்ட லட்சியத்துக்கு ஆதார சக்தியாக விளங்கியது. சென்னை சிறையில் ஆவேச உரைகளை நிகழ்த்தி, இதர கைதிகளின் நாடி நரம்புகளைப் புடைக்கவைத்த சுபாஷூக்கு இயற்கை, காச நோய் எனும் பரிசை வழங்கியது.

ஆம், மற்றவருக்குத்தான் நோய் ஒரு தொல்லை. ஆனால், லட்சிய புருஷனுக்கு அதுவும் ஒரு துருப்புச் சீட்டு. மாவீரர் சுபாஷ் தனக்கு வந்த காச நோயை வைத்தே ஒரு கணக்கு போட்டார். நாளாக நாளாக, சுபாஷின் உடல் நோயால் மெலிவு கண்டது. சிறையிலேயே சுபாஷ் இறந்துவிட்டால், நாட்டில் பெரும் கொந்தளிப்பு வெடிக்கும் என்பதை உணர்ந்த பிரிட்டிஷ் அரசாங்கம், சுபாஷ் இந்தியாவில் இருந்தால்தானே வம்பு. இந்த நோயையே காரணமாக வைத்து, அவரை வெளிநாட்டுக்கு அனுப்பிவிடலாம் எனத் தப்புக் கணக்கு போட்டது. அதன்படி, காச நோயால் பாதிக்கப்பட்டிருந்த இன்னொரு தலைவரான விட்டல்பாய் படேலையும் சுபாஷையும் ஆஸ்திரியாவின் தலைநகரமான வியன்னாவுக்குச் செல்லும்படி உத்தரவிட்டது.

1933 பிப்ரவரியில் பம்பாய் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட 'கங்கை' கப்பலில் வியன்னா நோக்கிப் பயணமான சுபாஷின் பாதை அந்த நொடியிலிருந்து பிரமாண்டமாக விரியத் துவங்கியது.

வியன்னாவில் சிகிச்சை ஒருபுறம் நடக்க, உலக நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டுவதில் மும்முரமாக இருந்தார். முதல் வேலையாக வியன்னாவில் இந்திய -ஆஸ்திரிய நட்புறவுக் கழகத்தைத் துவக்கிய சுபாஷ், பின் பெர்லினில் செண்பகராமன் பிள்ளை இயக்கத்தினரோடு அறிமுகமானார். ஹிட்லரையும் சந்தித்து இந்திய விடுதலைக்கு அவர்கள் உதவ வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார்.

இதனிடையே அவருக்குள் ஒரு காதலும் கிளைத்தது. வியன்னாவைச் சேர்ந்த எமிலிஷெங்கல் என்ற பெண் அவரது 'இந்திய விடுதலை வரலாறு' எனும் நூலின் உதவியாளராகப் பணி செய்தவர், அவரே காதலியாக வும் மாறினார். அந்தப் புத்தகம், உலகம் முழுக்கப் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதனிடையே அறுவை சிகிச்சை மூலம் அவரது உடலில் இருந்து பித்த நீர்ப் பை முழுவதுமாக அகற்றப்பட... உடல்நலம் தேறினார். 1936-ல் சுபாஷ், கப்பல் மூலம் பம்பாய் வந்து இறங்கியதும் ஆங்கிலேய அரசு அவரைக் கைது செய்தது.

நாடு மீண்டும் கொந்தளிக்க, உடனடியாக அவரை விடுதலை செய்து, சிம்லா, டார்ஜிலிங் போன்ற இடங்களில் வீட்டுச் சிறையில் இருக்க அனுமதி அளித்தது. அதன் பிறகு, சுபாஷ் மீண்டும் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்தார். லண்டனில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் இந்திய விடுதலை குறித்துத் தன் நெடிய உரையை நிகழ்த்தி அரங்கமே கைதட்டி ஆர்ப்பரித்தபோது, ஒரு துண்டுச் சீட்டில் சேதி வந்தது.

இந்தியாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சுபாஷ் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சேதி அது.

ஜனவரி 23, 1938-ல் பம்பாய் விமான நிலையத்தில் சுபாஷ் வந்து இறங்கியபோது, அவரை வரவேற்க 500 கார்கள் முற்றுகையிட்டிருந்தன. 41 வயதில் ஒருவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ஆகிறார் என்பது வரலாறு.

கட்சியில் சுபாஷின் வளர்ச்சியோடு விடுதலை உணர்ச்சியும் நாட்டில் தீப்பிடித்து எரியத் துவங்கியது. சுபாஷின் தாய்மொழிக் கல்விக் கொள்கைத் திட்டத்துக்கு மிகுந்த ஆதரவு இருந்தாலும் சிலர் முணுமுணுக்கத் துவங்கினர். ஓராண்டு முடிந்தது. இம்முறையும் சுபாஷையே தலைவராகத் தொடர்ந்து பதவி வகிக்குமாறு பலரும் குரல் கொடுக்க, வலுவான எதிர்ப்புக் குரல் ஒன்றும் எழுந்தது.

அது மகாத்மா காந்தியினுடையது!

- சரித்திரம் தொடரும்