18-02-09

தொடர்கள்

ஆலயம் ஆயிரம்

காஷ்யபன் - ஓவியங்கள்:ஜெ.பி. படம்:பொன்.காசிராஜன்

தாரகன், சிம்மமுகன், சூரபத்மன் என்று மூன்று அசுரர்கள் இந்திர லோகத்தைக் கைப்பற்றினர். தோல்வியுற்ற தேவர்கள் பரமசிவனைப் பணிந்தனர்.

ஈசன், தன் சக்தியை அக்னியில் பாய்ச்சினார். அதைத் தாங்க இயலாத அக்னி, அதைக் கங்கையில் கலந்தான். கங்கையும் அந்த வீர்யத்தைப் பொறுக்க மாட்டாமல், அதை ஆரண்யத்தில் வீசினாள்.

அங்கு ஆறு தாமரைகளில், ஆறு பகுதிகளாக வீழ்ந்த சிவனின் சக்தி, ஆறு சிசுக்களாக உருக்கொண்டது. அவற்றை அன்னை அரவணைத்து ஒருங்கிணைத்தாள்.

ஞானம், வைராக்கியம், பலம், கீர்த்தி, செல்வம், ஐஸ்வர்யம் ஆகியவற்றைக் குறிக்கும் ஆறு முகங்களும், பன்னிரு கைகளும் கொண்ட கார்த்திகேயன் அவதரித்தான்.

அழிக்க முடியாத அசுரர்களை அழிக்க அன்னை ஆறுமுகனுக்கு ஓர் ஆயுதம் வழங்கினாள். ஜோதியின் வடிவில் அமைந்த அந்த வேல், அசுரர்களை அழித்து தேவலோகத்தை மீட்டுத் தந்தது.

மரணத்தறுவாயில், ஆறுமுகனின் அடி பணிந்தான் சூரபத்மன். தன்னை மயிலாகவும் சேவலாகவும் முருகன் ஏற்று அருள வேண்டும் என்று கோரினான்.

கருணை நிறை கந்தனும் சூரனின் உடலை இரு கூறாகப் பிளந்து, சேவலைத் தன் கொடியிலும், மயிலைத் தன் வாகனமாகவும் ஏற்றான்.

ஈசனின் அம்சமான முருகனுக்கு அன்னை வேல் வழங்கிய தைப்பூசத் தினம் அவனுக்கு மிக உகந்த நாளாகக் கருதப்படுகிறது.

திரைகடலோடி திரவியம் தேடியபோதும், திருமுருகன் மீது பிரியம்கொண்ட தமிழர்கள், பல்வேறு தேசங்களில் முருகன் கோயில்களை நிர்மாணித்தார்கள்.

அவ்வாறு மலேசியாவில் சுப்ரமணியர் கோயில்கொண்ட ஒரு முக்கியத் தலம்தான் பத்து குகைகள். (இது ஒன்பதுக்குப் பிறகு வரும் பத்து அல்ல. சம்பத்து என்பதில் வரும் பத்து போல் உச்சரிக்கப்பட வேண்டும். பாறைக் குன்றம் என்று பொருள்).

19-ம் நூற்றாண்டில் கோலாலம்பூரில் தம்புசாமிப் பிள்ளை என்ற தமிழர், பத்து குன்றங்களில், குகைகளின் நுழைவாயில் வேல் வடிவத்தில் அமைந்திருப்பதைக் கண்ணுற்று, அங்கு ஞானக் குழந்தையான முருகனுக்கு ஆலயம் எழுப்பினார். மேலும், கோலாலம்பூரில் உள்ள மகா மாரியம்மன் கோயிலையும் நிர்மாணித்தவர் இவரே.

குன்றங்களின் அடிவாரத்தில் 130 அடி உயரத்துக்கு நெடிது உயர்ந்து கம்பீரமாக நிற்கும் வேல்முருகன் கண்களைக் கவர்கிறான். 272 கான்க்ரீட் படிகள் முருகனின் குகைக் கோயிலுக்கு அழைத்துச் செல்கின்றன.

400 அடி உயரத்தை ஏறியதும், இயற்கை அற்புதமாக வடிவமைத்துத் தந்துள்ள பத்து குகைகள். இவை 40 கோடி வருடங்களுக்கு முன் உருவான சுண்ணாம்புக் குன்றங்கள். குகைகளில் பனி உருகி வழிந்து உறைந்தது போல், பாறை வழிந்து உறைந்த நிலையில் காணப்படுகிறது.

துவக்கத்திலேயே அருள் முருகனின் சுதைச் சிற்பம் வரவேற்கிறது. இடது புறம் உடல் இரண்டாகப் பிளவுபட்டு சேவலாகவும் மயிலாகவும் மாறிய அசுரன் சூரபத்மனின் சிற்பம்.

200 அடி நீளமும், 300 அடி உயரமும்கொண்ட குகைகள் பரந்து விரிந்திருக்கின்றன. அங்கு முருகனுக்கென்று ஒரு சந்நிதி. நடராஜர், சீதா, ராம, லட்சுமணன், முனீஸ்வரன் ஆகியோருக்கும் தனிச் சந்நிதிகள்.

சுப்ரமணியருக்கான பிரதான குகைக் கோயிலின் நேர் மேலே, 300 அடி உயரக் கூரையில், வானவர்கள் முருகனைப் பார்க்க வசதியாக மாபெரும் திறப்பு. இந்த ஆலயத்தில்தான் ஒவ்வொரு தைப்பூச விழாவிலும் கந்தன் குடியேறுகிறான்.

பத்து குகைகளில் தைப்பூசம் முக்கியத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. மூன்று நாட்கள் நகரமே திருவிழாக் கோலம் பூணுகிறது.

முதல் நாள், விடிகாலை நான்கு மணிக்கே கோலாலம்பூர் மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் கூடுகின்றனர். வருடத்தின் மற்ற நாட்களில் இங்கே எழுந்தருளியிருக்கும் சுப்ரமணியரின் மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.

அதன் பின், முருகன் வெள்ளித் தேரில் எழுந்தருளி, மேளதாளங்கள் முழங்க மலேசியாவில் வீதியுலா வருகிறார்.

பக்திப் பாடல்கள் பாடப்படுகின்றன. கோலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம் என்று எங்கும் கொண்டாட்டம். ''வேல்... வேல்'' என்று பக்திப் பரவசத்தில் முழங்கியபடி ஆயிரக்கணக்கில் காவடி தூக்குபவர்கள் நடனமாடியபடி ஊர்வலத்தில் கலந்துகொள்கின்றனர்.

பத்து மணி நேர ஊர்வலத்தின் இறுதியில் சுப்ரமணியர் பத்து குன்றங்களின் அடிவாரத்தை அடைந்து, மக்களுக்குத் தரிசனம் அருள்கிறார்.

பின்னர், காவடி எடுத்து வருபவர்களுடன் சேர்ந்து மலையேறுகிறார். பிரதான குகைக் கோயிலை அடைந்ததும், பூசாரிகள் வரவேற்றுப் பொறுப்பேற்றுக்கொள்கின்றனர்.

அலகு குத்திக்கொண்டவர்களின் அலகுகள், திருநீறு தெளிக்கப்பட்டு ரத்தம் சிந்தாமல் எடுக்கப்படுகின்றன.

தைப்பூச விழாவில் 12 லட்சம் பக்தர்கள் கலந்துகொள்கிறார்கள்.

முருகனிடம் வேண்டிக்கொண்டால் குணப்படுத்த முடியாத நோய்கள் குணமாகின்றன. தீர்க்க முடியாத பிரச்னைகள் தீருகின்றன.

வேண்டுதல்களை நிறைவேற்ற காவடி தூக்குபவர்கள் நான்கு வாரங்கள் உரிய முறையில் விரதமிருக்கிறார்கள். முருகனின் நாமம் ஜபித்து, காமம், குரோதம் போன்ற தீய எண்ணங்களை நெருங்கவிடாமல், மனதாலும், எண்ணத்தாலும், வாக்காலும் தூய்மையாக இருக்கிறார்கள்.

பக்தர்கள், பத்து குன்றங்களுக்கு அருகிலிருக்கும் சுங்காய் பத்து நதியில் குளித்து எழுந்து, மார்பு, தோள்கள், முதுகு, தொடைகள் நெற்றி, நாக்கு, கன்னங்கள் என எல்லா இடங்களிலும் அலகு குத்தி வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார்கள்.

தைப்பூசம் முடிந்த மறு நாள் குகைக் «¢காயிலிலிருந்து முருகனின் மூர்த்தி மறுபடி மாரியம்மன் கோயிலுக்கு வெள்ளி ரதத்தில் எடுத்துச் செல்லப்படுகிறது.

பத்து குகைகள் இந்துக் கலாசாரத்தின் பிரதிபலிப்பாக விளங்குகின்றன. தைப்பூசம் உலகில் வேறு எங்கும் இல்லாத அளவு இங்கே விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியா, சிங்கப்பூர், சீனா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து பக்தர்கள் திரளாக வந்து தைப்பூச விழாவில் கலந்து கொள்கின்றனர்!

- தரிசிப்போம்