Published:Updated:

'ஆயிரம் பெரியார் வந்தாலும்...!'

Vikatan Correspondent
'ஆயிரம் பெரியார் வந்தாலும்...!'
'ஆயிரம் பெரியார் வந்தாலும்...!'

                                                                              வாசகர் பக்க கட்டுரை

தொலைக்காட்சிகளில் வரும் வியாபார, ஜோதிடம், அதிர்ஷ்ட பொருட்கள் விற்பனை, அதிரடி மருத்துவ சேவை, மத பிரார்த்தனைகள் போன்ற விளம்பரங்களை நம்புகின்ற மக்கள் ஏராளம். 

தொலைகாட்சி நிறுவனங்கள்,  'இந்த விளம்பரங்களை நம்புவது உங்கள் முடிவு, எங்களுக்கும் இந்த விளம்பரங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது!' என்று முன்னறிவிப்பு செய்தாலும்,   'குடி குடியை கெடுக்கும்' என்று டாஸ்மாக்கில் எழுதியதை போன்று அதனை யாரும் கண்டுகொள்வதில்லை .

விளம்பரங்களில் சிலர் சாட்சி சொல்ல வருவார்கள். அவர்கள் சொல்வதை அப்படியே நம்புகிற கூட்டம்தான் அதிகம். சாமானியர்கள் ஒரு சங்கடத்தில் இருக்கும்போது, யார் பரிகாரம் சொன்னாலும் ஆராயாமல் அப்படியே நம்புவதுதான் நமது அத்தனை மூடநம்பிக்கைகளுக்கும் விதை.

"தொலைகாட்சியில் சொல்கிறான்...இத்தனை கூட்டம் வருகிறது; பொய்யா சொல்லப்போகிறான்..?!" என்று ஆட்டுமந்தை கூட்டத்தில் சங்கமமாய்விட, நாடுகிற கூட்டம் இருக்கும்வரை இந்த போலிகளுக்கு வியாபாரத்தில் குறைவிருக்காது. பிறவி குறைகளை கூட இரண்டுநாளில் குணப்படுத்தி காட்டுகிறேன் என்பவன், தனக்கு ஒரு விபத்து ஏற்பட்டால் அவசர சிகிச்சிக்குதான் ஓடுவான். அவன் போலி மருத்துவத்தை பற்றி அவனுக்கு தெரியும்.

அதிர்ஷ்டத்தை வியாபாரம் செய்பவனும், ஜோதிடம் சொல்பவன் எவனும் பெரிய தொழில் நிபுணராகவோ

'ஆயிரம் பெரியார் வந்தாலும்...!'

அல்லது கோடீஸ்வரனாகவோ இல்லை. அவனையே சரிசெய்ய முடியாதவன்  உங்களுக்கு உதவ போகிறானா ?

மதப்பிரச்சாரகர்கள் எல்லோருமே எந்த மதத்தவராயினும் மதத்தை வியாபாரமாக செய்பவர்களே. இதை Patent செய்து கார்ப்பரேட் நிறுவனங்களாக வணிகம் செய்யும் பல நவீன குருக்கள், பெரிய சமூக சாருண்ணிகள். இதில் எல்லா மத கார்ப்பரேட்டுகளும் உண்டு. மனநல மருத்துவர்களையும், மனநல ஆலோசகர்களையும் நாடவேண்டிய பிரச்னைகளுக்கு,  உடனடி தீர்வு என்று நாடகமாடி ரோல்ஸ்ராயிலும், சொந்த விமானங்களிலும் உலகை சுற்றிவருகிறார்கள்.

விளம்பரத்திற்காக ஒருசில மருத்துவமனை கல்வி நிறுவனங்கள், முதியோர் இல்லம் என்று சேவை மையங்களை நடத்துகிறார்கள். இதற்கு பணம் பக்தர்கள் கொடுக்கிறார்கள். அவை முறையாக பராமரிக்கப்படுகிறதா ? இவர் எப்படி வானில் பறக்கமுடிகிறது என்று யாரும் கேள்வி கேட்பதில்லை.

ஆளும் வர்க்கமும், பெரும் பணக்காரர்களும் சேர்ந்து லாபி செய்யும் இதை யாரும் திருத்த முடியாது. ஆயிரம் பெரியார் வந்தாலும் கேட்க மாட்டார்கள்...கேட்க விடமாட்டார்கள்!


-ஹமீது