Published:Updated:

டீன் கொஸ்டீன்

டீன் கொஸ்டீன்

டீன் கொஸ்டீன்

டீன் கொஸ்டீன்

Published:Updated:

01-04-09
தொடர்கள்
டீன் கொஸ்டீன்
டீன் கொஸ்டீன்
 
டீன் கொஸ்டீன் - கற்பனை குதிரைக்கு கடிவாளமில்லையா?
டீன் கொஸ்டீன்
டீன் கொஸ்டீன்
டீன் கொஸ்டீன்

எம்.ஆறுமுகம், சென்னை-45.

''ஆங்கிலம் தவிர இன்னொரு மொழி கற்றுக்கொள்ள ஆசை. இந்தி, பிரெஞ்சு, ஜாப்பனீஸ், மலாய் என்று ஆளாளுக்கு சாய்ஸ் சொல்லிக் குழப்புகிறார்கள். எனக்கு பார்மசி கம்பெனி யில் மார்க்கெட்டிங் பணி. எந்த மொழி கற்றுக்கொள்ளலாம் என்று வழிகாட்டுவீர்களா?''

டீன் கொஸ்டீன்

சித்ரா கிருஷ்ணன், தலைவர், ஸ்கூல் ஆஃப் இங்கிலீஷ் அண்டு ஃபாரின் லாங்குவேஜஸ், சென்னைப் பல்கலைக்கழகம்.

''சர்வதேச அளவில் ஆங்கிலம் தவிர பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ் மற்றும் இத்தாலி மொழி களுக்குத்தான் முக்கியத்துவம் அதிகம். இந்தியாவில் இந்தி மொழிதான் பெருவாரியான மக்கள் பேசும் மொழி. எனவே, அதைக் கற்றுக்கொண்டால்இந்தியாவில் எங்கு சென்றாலும் சமாளிக்கலாம். உலகில் அதிக மக்கள் பேசும் மொழி சீனம். ஆனால்,அதற்கு இங்கு டிமாண்ட் கிடையாது. எனவே, அதைக் கற்றுக்கொள்வதால் புதிய மொழியைத் தெரிந்து கொண்டோம் என்ற திருப்தி மட்டுமே.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகள் பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பாகக் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு வெளிநாட்டுத் தூதரகத்திலும் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்புகள் உங்களுக்கு இல்லாவிட்டால், இந்தி மொழியைக் கற்றுக் கொள்வது உசிதமாக இருக்கும் என்று நினைக்கிறேன்!''


கே.சாரதி, மதுரை.

''ஜிம்முக்குச் செல்பவர்கள் சிக்ஸ் பேக், எய்ட் பேக் என்றெல்லாம் சொல்கிறார்கள். 24 வயதில் எனக்கு நார்மலான உடற்கட்டு. என்னால் அப்படியெல்லாம் வைத்துக்கொள்ள முடியுமா? அதனால் நன்மை எதுவும் உண்டா?''

டீன் கொஸ்டீன்

அமித்தா அக்னிஹோத்ரி, உடற்பயிற்சி ஆலோசகர்.

''நிச்சயமாக சாரதி! தினமும் சில மணி நேரங்கள் ஜிம் மில் சின்சியராகவொர்க் -அவுட் செய்தால் சிக்ஸ்-பேக், எய்ட்-பேக் சாத்தியமே. பொதுவாக, எல்லோர் உடலிலும் இயற்கையாகவே சிக்ஸ் பேக் அமைப்பு இருக்கும். வயிற்றின் கொழுப்புகளுக்கு அடியில் மறைந்திருக்கும் அதனை வெளியே தெரியுமாறு செய்வதுதான் கொஞ்சம் சிரமமான விஷயம். தொடர் பயிற்சிகளை விடாமல் தொடர்ந்து செய்தால், உங்கள் சிக்ஸ் பேக் தன்னாலேயே வெளிப்படும். இதற்கு வயிற்றுச் சதைகளை வலுவாக்கி, கொழுப்பை அடியோடு குறைக்க வேண்டும். வழக்கமான உடற்பயிற்சிகளுடன் சிட்-அப்ஸ், கார்டியோ வாஸ்குலர் பயிற்சி போன்றவற்றையும் மேற் கொள்ள வேண்டும். இது நல்லதா என்றால், வெளிப் பார்வைக்கு க்யூட் அண்ட் ஃபிட்டாக இருந்தால் சந்தோஷம்தானே. சிக்ஸ் பேக் நீடித்திருக்க தொடர் உடற்பயிற்சிகள் கட்டாயம். பொதுவாக, எந்த ஒரு உடற்பயிற்சியையும் நாம் நிறுத்திய 48 மணி நேரத்துக்குள் இயற்கையான நம் உடல் வடிவம், மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கிவிடும். ஆல் தி பெஸ்ட் சாரதி!''


ரா.வினோத், சென்னை-24.

''நான் பி.இ., மூன்றாமாண்டு படிக்கும்போது கேம்பஸ் இன்டர்வியூ மூலம் ஒரு நிறுவனத்தில் ப்ளேஸ்மென்ட் கிடைத்தது. ஜூன் 2008 தேதியிட்டு சேரும்படி கூறியிருந்தார்கள். கடந்த ஆண்டு ஜூனில் கேட்டபோது 'இன்னும் இரண்டு மாதங்கள்' என்றார்கள். இப்படியே 10 மாதங்கள் ஓடிவிட்டன. இப்போது 'வேலை அளிக்க வாய்ப்பில்லை என்றால், உங்களுக்கு அளிக்கப்பட்ட ஆர்டர் கேன்சல் ஆகவும் வாய்ப்புள்ளது' என்கிறார்கள். இதை நம்பி நான் வேறு வேலைக்கும் முயற்சிக்கவில்லை. இவ்வளவு நாள் அலையவிட்டு ஏமாற்றியதற்காக, அவர்கள் மீது நான் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா?''

டீன் கொஸ்டீன்

பரத்குமார், வழக்கறிஞர்.

''உங்களுக்கு வேலை வழங்குவதாக உறுதி அளித்திருந்தாலும், தற்போது அந்த நிறுவனத்தின் சூழ்நிலையைப் பொறுத்து வேலை கொடுக்க முடியாமல் இருக்கலாம். இவற்றையெல்லாம் நீதிமன்றம் கருத்தில்கொள்ளும் என்பதால், தற்போதையசூழ்நிலையில் உங்களால் வழக்குத் தொடர்ந்துவெற்றி பெற முடியாது. தற்போது பல நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தி, தேர்வானவர்களுக்கு வேலை தர முடியாத நிலையில் இருக்கின்றன. உங்களைப் போலவும் பல இளைஞர்கள்வேலைக்காகக் காத்திருந்து ஏமாந்திருக்கிறார்கள்.

ஆனால், யாரும் இதுவரை வழக்குத் தொடர நீதிமன்றத்துக்கு வரவில்லை. நீங்கள் வழக்குத் தொடரும்பட்சத்தில் குறைந்தது இனி இப்படியான வாக்குறுதிகளுக்கு ஒரு கடிவாளம் அமைப்பதற்கான அலாரம் அடித்த மாதிரியாகவாவது இருக்கும்!''


பெயர் வெளியிட விரும்பாத மதுரை வாசகி.

''நான் மூன்று வருடங்களாக ஒருவரைக் காதலிக்கிறேன். எப்போதாவது இருவரும் வெளியே செல்வோம். போன வாரம் பஸ் நிலையத்தில் நின்ற எங்களை போலீஸார் விசாரித்தனர். என் அப்பாவின் செல்போன் நம்பர் கேட்டார்கள். கொடுத்துவிட்டேன். ஆனாலும், எங்களைப் பொது இடத்தில் மிகவும் கேவலமாகப் பேசி அசிங்கப்படுத்திவிட்டனர். அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் சாகும் வரை மறக்க முடியாது. பொது இடங்களில் எத்தனையோ பேர் மோசமாக நடந்துகொள்ளும்போது, நாங்கள் சும்மா நின்று பேசியது தவறா? காதலர்கள் வெளியே செல்லவே கூடாதா? இப்படி போலீஸார் நடந்து கொண்டால், அதை எப்படி எதிர்கொள்வது?''

டீன் கொஸ்டீன்

டி.எஸ்.அன்பு, போலீஸ் துணை கமிஷனர்.

''பொதுவாக, பொதுமக்கள் யாரையும் விசாரிக்கும் உரிமை போலீஸாருக்கு உண்டு. அவர்கள் சந்தேகப்பட்டு பெயர், ஊர் கேட்டால், பதில் சொல்லத்தான் வேண்டும் பொது இடங்களில் எல்லைமீறி நடப்பவர்களைக் கண்டித்து அனுப்புமாறுதான் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி எந்தச் செயலிலும் ஈடுபடாத உங்களிடம் அவர்கள் கடுமை காட்டி இருந்தால், அது தவறு. உடனடியாக உயரதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டு சென்றால், அவர்கள் எச்சரிப்பார்கள். அல்லது துறைரீதியாகவும் நடவடிக்கை எடுக்கலாம்.

நிறைய போலீஸ்காரர்களுக்கு மாரல் போலீஸிங் (கலாசாரக் காவலர்) செய்ய வேண்டும் என்று ஆசை. ஆனால், அதை எப்படிச் செய்வது என்று தெரியாமல் ஒரு சிலர் இப்படி நடந்து கொண்டுவிடுகிறார்கள்!''

 
டீன் கொஸ்டீன்
டீன் கொஸ்டீன்