Published:Updated:

நாயகன் - அன்னை தெரசா

நாயகன் - அன்னை தெரசா

நாயகன் - அன்னை தெரசா

நாயகன் - அன்னை தெரசா

Published:Updated:

01-04-09
தொடர்கள்
நாயகன் - அன்னை தெரசா
நாயகன் - அன்னை தெரசா
 
நாயகன் - அன்னை தெரசா
நாயகன் - அன்னை தெரசா
- அஜயன் பாலா

நாயகன் - அன்னை தெரசா
நாயகன் - அன்னை தெரசா

ன்பே சத்தியம்... அன்பே சிவம்... அன்பே ஆனந்தம்!

நாம் ஒரு வீதியில் நடந்து செல்கிறோம். சைக்கிளிலோ, பஸ்ஸிலோ, பைக்கிலோ அல்லது காரிலோ கடந்து செல்கிறோம். கடைகளின் முன் தொங்கும் பத்திரிகைகளின் அன்றைய செய்திகள், சினிமா விளம்பரங்கள், ஜீன்ஸ் பெண்கள், வாங்கச் சொல்லி வற்புறுத்தும் பிரமாண்ட விளம்பரங்கள் எனப் பலப்பல விஷயங்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. ஆனால், என்றாவது பிளாட்ஃபாரங்களில் அழுக்கு மூட்டையும் நாற்றமெடுக்கும் உடைகளுமாக விழுந்துகிடக்கும் அநாதைகளைக் கூர்ந்து கவனித்திருப்போமா? வீடற்றவர்களாக, குளிரிலும் மழையிலும் வாடும் அவர்களின் அவல நிலையை யோசித்திருப்போமா? நோயின் வலி தாளாமல் முனகும் அவர்களின் அழுகுரல்களைக் கேட்டிருக்கிறோமா? நம்மால் முடிந்தது, சில சில்லறைக் காசுகளை வீசுவது மட்டுமே!

ஆனால், அவர்களின் அருகே, கருணையுடன் சென்று, அன்பின்மையால் உதாசீனப்படுத்தப்பட்ட அவர்களை மார்புற அணைத்து, துயரம் எனும் கண்ணீரைத் துடைத்து, நோயுற்ற அவர்களின்உடம்பை கருணையுடன் தடவி மருந்திட்டுக் காத்த ஒருவர் என்ன சொன்னார் தெரியுமா?

''உண்மையில் கடவுள் என்பவர் இங்குதான் இருக்கிறார். இவர்களுக்குச் சேவை செய்யும்போதுதான் நான் அவரை உணர்கிறேன்!''

மதங்களால் மனிதருக்கு உணர்த்த முடியாத அன்பெனும் கடவுளைத் தன் கருணைக் கரங்களால் கண்டுகொண்ட மனித மலர்... அன்பின் திருவுரு அன்னை தெரசா!

உலகில் உள்ள அன்பையெல்லாம் நெஞ்சில் தேக்கிக்கொண்ட ஒருவன் அதனை ஒரு சித்திரமாக வரைய முற்பட்டால், அவன் இழுக்கும் கோடு இறுதியில் உருவாக்கும் சித்திரம் அன்னை தெரசாவினுடையதாகத்தான் இருக்கும்.

ன்று யூகோஸ்லோவேகியாவாக அறியப்படும் பழைய அல்பேனியாவில் ஒரு சிறு வணிக நகரம், ஸ்கோப்ஜி. அங்கே மருத்துவமனைகளுக்கு மருந்து சப்ளை செய்யும் வியாபாரியாகத் தன் வாழ்க்கையைத் துவக்கியவர் நிகோலா பொஜாக்சு. அந்த வியாபாரத்தில் அவருக்குக் கிடைத்த வெற்றி தொடர்ந்து கட்டட கான்ட்ராக்ட் தொழிலில் ஈடுபடவைத்தது. அதுவே, அவரை நகரின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவராகவும் மாற்றியது. நல்லது கெட்டது ஊரில் எது நடந்தாலும் அங்கு பொஜாக்சு இருப்பார். அந்த ஊருக்கு முதல் முறையாக சினிமா வந்தபோது ஊரின் முதல் திரையரங்கைக் கட்டி மக்களிடையே நன்மதிப்பும் பெற்றிருந்தார். பொஜாக்சுவின் மனைவி, நல்லிளம் நங்கை ட்ரானாஃபைல் பெர்னாய். இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அகா எனப் பெயரிட்டனர். இரண்டாவது, ஆண் குழந்தை... லாசர். இந்த இரண்டு குழந்தைகளுக்குப் பிறகு 1910 ஆகஸ்ட் 26-ல் மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவளுக்கு அப்போது அவர்கள் சூட்டிய பெயர் ஆக்னஸ் கோன்ஸா. பிற்பாடு உலகம் சூட்டிய பெயர், அன்னை தெரசா.

மற்ற இரண்டு குழந்தைகளும் துறுதுறுவென துள்ளித் திரிய, கடைக்குட்டியான ஆக்னஸ் மட்டும் அமைதியின் திருவுருவாக அப்படியே சுவரோடு ஒட்டியபடி நின்று அவர்களை வேடிக்கை பார்ப்பாள். அதிகமாகவும் பேச மாட்டாள். ஆனால், கண்களில் மட்டும் ஒளி ஊஞ்சல் கட்டி விளையாடும். யார் எது கேட்டாலும் ஆம், இல்லை என்பது போல் ஒரு சிறு தலையசைப்பு. உடன் ஒளிக் கீற்றாகக் குறும் புன்னகை, அவ்வளவுதான்.

பொஜாக்சு, நகரின் முக்கிய பிரமுகராகவும் அரசிய லில் தீவிர ஈடுபாடுகொண்டவராகவும் இருந்ததால், வீட்டில் ஆட்கள் நடமாட்டம் எப்போதும் இருக்கும். வந்து செல்பவர்கள், கடைக்குட்டியான ஆக்னஸைப் பார்த்துத் தவறாமல் சொல்லும் ஒரு வார்த்தை, 'இந்தப் பெண்ணிடம் ஏதோ ஓர் அதிசயம் இருக்கிறது!'

பொஜாக்சு வியாபார விஷயமாக அடிக்கடி வெளி யூர்களுக்குச் சென்று இரண்டொரு நாட்கள் கழித்து வீடு திரும்புகிற சமயங்களில், குழந்தைகள் அவரைச் சுற்றி ஆவலுடன் அமர்ந்திருப்பர். காரணம், தான் பயணத்தில் சந்தித்த வித்தியாசமான மனிதர்களைப் பற்றி அவர் கூறும் விதவிதமான கதைகள். கடைக்குட்டி ஆக்னஸூக்கு அம்மாவின் மேல் பிடிப்பு அதிகம். அம்மா எதைச் செய்தாலும் தானும் அதைச் செய்பவளாகவே பழகியிருந்தாள். அம்மா செய்யும் அசட்டுத்தனங்களையும் அவள் விட்டுவைக்கவில்லை. அப்பா வெளியூர் போயிருந்த ஒரு நாளில் அனைவரும் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க... சமையல்அறையிலிருந்து வெளிப்பட்ட ட்ரானா சட்டென விளக்கை அணைத்துவிட்டு, 'வெறுமனே பேசுவதற்கு விளக்கு ஒன்றும் அவசியமில்லையே' எனச் சமையல்அறைக்குச் சென்றுவிட்டார். அதன் பிறகு, அம்மா இல்லாத சமயங்களில் ஆக்னஸூம் இதையே சொல்லியபடி விளக்கை அணைக்கும் காரியத்தைத் தொடர்ந்து செய்து தங்களுக்கு எரிச்சலூட்டியதை, பின்னாட்களில் ஆக்னஸ் அன்னை தெரசாவாக மாறி, நோபல் பரிசு பெற்றபோது அவரது சகோதரர் லாசர் பத்திரி கையாளர்களிடம், தங்கை பற்றிய நினைவாகப் பகிர்ந்துகொண்டார்.

ஆக்னஸ், தன் அம்மாவோடு சேர்ந்து இன்னொரு விஷயத்திலும் ஈடுபாட்டுடன் இருந்தாள். அது, அவளது அம்மா ஏழைகளின் மீதும் நோயாளிகள் மீதும் காட்டிய அன்பு மற்றும் பரிவு.

அந்த ஏழை நகரத்தில் பலரும் வந்து உதவி வேண்டி நிற்பது வழக்கம். ட்ரானா தன்னிடம் இருப்பதைக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், அக்கம்பக்கத்து வீடுகளிலும் சென்று உணவு மற்றும் பொருட்களைத் திரட்டி வந்து ஏழைகளுக்குக் கொடுத்து வந்தாள். அவள் அப்படிப் போகிறபோதெல்லாம், ஆக்ன ஸூம் அம்மாவுடன் ஒட்டிக் கொண்டு தன் பங்குக்கு தன் பிஞ்சுக் கைகளால் பொருட்களைச் சேகரிப்பாள். ஒரு நல்ல தாயின் உணர்வுகள் தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தை எப்படி வளர்த்தெடுக்கும் எனபதற்கு ட்ரானா எனும் அந்தத் தாய் மிகச் சரியான உதாரணம்.

இப்படியான அந்த இனிமை ததும்பும் எளிய வாழ்வில் ஒரு நாள் புயல் வீசியது. ட்ரானா வின் கணவர் பொஜாக்சுவின் அரசியல் எதிரிகள் வஞ்சகமாகக் கொடுத்த நஞ்சு, அவரது உயிரைக் காவு வாங்கத் துடித் தது. உயிருக்குப் போராடினார் பொஜாக்சு.

 
நாயகன் - அன்னை தெரசா
- சரித்திரம் தொடரும்
நாயகன் - அன்னை தெரசா