Published:Updated:

ஆலயம் ஆயிரம்

ஆலயம் ஆயிரம்

ஆலயம் ஆயிரம்

ஆலயம் ஆயிரம்

Published:Updated:

01-04-09
தொடர்கள்
ஆலயம் ஆயிரம்
ஆலயம் ஆயிரம்
 
ஆலயம் ஆயிரம்
ஆலயம் ஆயிரம்
- காஷ்யபன் - ஓவியம்: ஜெ.பி. படம்:பொன்.காசிராஜன்

ஆலயம் ஆயிரம்

ழில்மிகு கேரளத்தின் திருவனந்தபுரத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் வழியில் 16 கி.மீ. தொலைவில் அகத்தியர் மலை அமைந்துள்ளது. அதன் சிரசிலிருந்து அருவியாக வீழ்ந்து, பாறைகளினிடையே பாய்ந்து செல்லும் கரமனை நதியின் கரையினில் அமைந்திருக்கிறது சப்த மாதர்களுக்கான அழகிய அருவிக்கரை ஆலயம்.

ஆலயம் இங்கு அமைந்தது எவ்வாறு?

அருவிக்கரைக்கு அருகில் அமைந்திருந்த கடம்ப நாடு என்னும் வனப்பான கிராமத்தின் சிறு ஆலயம் ஒன்றில், அன்னை பகவதி குடியேறி ஆழ்தவத்தில் ஈடுபட்டு இருந்தாள்.

அருகில் வசித்துக்கொண்டு இருந்த கர்ப்பிணிப் பெண் ஒருத்தி, பேறு காலத்தின்போது ஏற்பட்ட வலியைத் தாங்க முடியாமல் அலறி அரற்றினாள்.

ஆலயம் ஆயிரம்

அவளது அலறல் அன்னையின் தவத்தைக் கலைத்தது. மண்ணில் வந்து விழும் மழலை மீது மாதாவுக்குப் பிரியம் ஏற்பட வேண்டும் என்பதற்காக இயற்கை அமைத்துக் கொடுத்திருக்கும் பேறு கால வலியைத் தாங்க மாட்டாமல் அந்தப் பெண் அலறியதால், அன்னை அங்கிருந்து அகன்று வேறு ஓர் அமைதியான தலத்தில் தவமியற்றத் தீர்மானித்தாள்.

ஆலயத்தைவிட்டு அன்னை அகன்றாள். அருகிலிருந்த மலைச் சரிவினை அடைந்து, தக்கதொரு தலத்தைத் தேடினாள்.

அடிவாரத்தில் கரமனை நதி ஓடிக்கொண்டு இருந்தது. கரை அருகில் ஒரு பாறை, நதியின் நீரோட்டத்தாலும் அலைகளாலும் பாதிக்கப்படாமல் தவம் இருப்பது போல் தனித்துப் புலப்பட்டது.

அன்னை அதை நோக்கிப் பாய்ந்தாள். அன்னையின் பாதச் சுவடு பாறையில் ஆழமாகப் பதிந்தது. அது திருப்பாதம் என்று அழைக்கப்பட்டு, மக்களால் வழிபடப்படுகிறது.

பாறை மீது குடில் அமைத்து, அன்னை எழுந்தருளினாள்.

கடம்ப நாட்டு மக்களோ, தங்களது ஆலயத்தில் இருந்து அன்னை அகன்றதை அறிந்து மனம் வருந்தி, அக்கம்பக்கத்தில் தேடினார்கள்.

நதிக்கரைப் பாறையில் அன்னை எழுந்தருளியிருந்ததைக் கண்டார்கள்.

அவளுக்கு அங்கே ஓர் ஆலயம் எழுப்பினார்கள். அதுவே அருவிக்கரை ஆலயம் என்று அழைக்கப்படுகிறது.

இரண்டாயிரம் ஆண்டு பழைமையானதாகக் கருதப்படும் ஆலயம் பாறைகளின் மீது அமைந்துள்ளது.

கலகலவெனப் பாயும் நதியை ஒட்டிய பாதையில் சற்று தூரம் நடந்தால் ஆலயம்!

நதியில் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. ஆலயத்தின் அருகில் அமைந்திருக்கும் ஒரு தகரக் கூரையின் கீழ் தொடர்ந்து நடக்கும் வெடி வழிபாடு வரவேற்பு நல்குகிறது.

வீடு போல் காணப்படும் சிறிய கோயில். ஆழ்ந்த அமைதியும் தெய்விக நறுமணமும் ஆட்சி புரியும் ஆலயத்தைச் சுற்றி பாறைகளையும் மரங்களையும் அமைத்து இயற்கை கொஞ்சுகிறது.

வளாகத்தில் நுழைந்தவுடன் இடதுபுறம் பிராகாரம் நெடுக குறுகிய திண்ணை. வலம் வந்தால், நெடுநெடுவென்ற கேரள விளக்கு ஒன்று. அதன் பன்முகங்களிலும் சுடர்கள் வளர்ந்து, நெளிந்து ஒளிர்கின்றன.

ஆலயம் ஆயிரம்

அதனை அடுத்து சரிவான ஓட்டுக் கூரையுடன் நாற்கால் மண்டபம். அப்பால் படிகளுடன்கூடிய கருவறை. வாசலில் துவார பாலகியர். கருவறையில் அன்னை வைஷ்ணவி சந்தனக் காப்புடன் அலங்கார பூஷிதையாகக் காட்சி அருள்கிறாள்.

ஆலயம் அந்த நாட்களில் பகவதி ஆலயமாகத்தான் அறியப்பட்டுள்ளது. பின்னர் சப்த மாதர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சப்த மாதர் ஆலயமாக அழைக்கப்பட்டு இருக்கிறது. சப்த மாதர்களில் வைஷ்ணவியே பிரதான அன்னையாகக் கருதப்பட்டு, பூஜைகள் அனைத்தும் நிகழ்கின்றன.

நதி பார்த்து ஆலயம் அமைந்திருக்கிறது. வைஷ்ணவியும் மற்ற மாதர்களும் கிழக்கில் உள்ள ஆற்றை நோக்கித் திருமுக மண்டலம்கொண்டு விளங்குகிறார்கள்.

எந்த நேரமும் நதி நீரைக் காண்பதால் அன்னையின் அஞ்சன விழிகள் ஈரம் நிறைந்து காணப்படுகின்றன. கண்களில் துலங்கும் ஈரம் பக்தர்களின் மேல் அருளாகச் சொரிகிறது.

பாலுண்ணி உள்ளவர்களும், இன்ன பிற தோல் குறைபாடு உள்ளவர்களும் அன்னையின் சந்நிதியில் குறுமிளகும் மஞ்சளும் வைத்து ஆற்றிலுள்ள மீன்களுக்குப் பொரி, தேங்காய் முதலியவற்றை உணவாகப் போட்டால் விரைவிலேயே குணமடைகிறார்கள் என்று ஊர் மக்கள் பிரமிப்புடன் கூறுகிறார்கள்.

தென்னைகள் சூழ்ந்த வெளிப் பிராகாரத்தில் கன்னி மூலையில் கணபதி பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறார். சாஸ்தாவும் கிருஷ்ணனும் தனித் தனிச் சந்நிதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள்.

ஆற்றில் இருக்கும் மீன்கள் பகவதிக்குச் செல்லமானவை. முன்னொரு நாள், ஆற்றில் மீனவன் ஒருவன் மீன் பிடித்துக்கொண்டுபோய் அதன் வாலை வெட்ட, இங்கே பகவதியின் பெருவிரல் துண்டாகி இருக்கிறது. வலி தாங்காமல் தேவி தனது விரலைப் பூமியில் அழுத்தியதில், கோயில் கூரையே முன்னால் சரிந்திருக்கிறது. அருவி நீர் பேரலையாக எழும்பி மீனவன் வீட்டை விழுங்கிஇருக்கிறது.

அந்த வீட்டில் இருந்த மீன் தண்ணீரில் சேர்ந்து உயிர் தப்பி இருக்கிறது. ஆற்றில் பேரலைகள் எழுந்தால், இப்போதும் அந்த மீன் நடமாடுவதாக மக்கள் நம்புகிறார்கள்.

அதனால், இந்த இடத்தில் யாரும் மீன் பிடிப்பதில்லை. மக்கள் எல்லா நேரமும் மீன்களுக்குப் பொரியையும் தேங்காய்த் துருவலை யும் அளிக்கிறார்கள்.

நவம்பர் மாதம் கார்த்திகை தொடங்கி, மூன்று நாட்களுக்கு நிகழும் திருக்கார்த்திகை உற்சவம் இங்கு பிரதானத் திருவிழா.

சக்தி வாய்ந்த ஆலயம். சக்தி வாய்ந்த அன்னை!

ஆலயம் ஆயிரம்

 
ஆலயம் ஆயிரம்
- தரிசிப்போம்
ஆலயம் ஆயிரம்