Published:Updated:

ஹாய் மதன்

ஹாய் மதன்

ஹாய் மதன்

ஹாய் மதன்

Published:Updated:

01-04-09
தொடர்கள்
ஹாய் மதன்
ஹாய் மதன்
 
துட்டு ஹிட்டு... எது பெஸ்ட்?
ஹாய் மதன்
- ஹாய் மதன், கேள்வி பதில்

ஹாய் மதன்
ஹாய் மதன்

கே.எஸ்.சம்பத்குமார், பெங்களூரு.

'டியூப்' மாத்திரையை உட்கொள்ளும்போது அந்த டியூப் மூடி எப்படித் திறக்கப்பட்டு, அதனுள் இருக்கும் மருந்து நம் உடலுக்குள் செலுத்தப்படுகிறது?

டியூபுக்கு உள்ளே இருக்கும் மாத்திரைத் துகள்களுக்கு உயிர் உண்டு! அவை எல்லாம் இணைந்து மூடியின் மீது பல முறை மோதி அதை வெளியே தள்ளிய பிறகு, அத்தனை துகள்களும் வயிற்றுக்குள் எகிறிக் குதிக்கும்! அட, சும்மாங்க! டியூப் மாத்திரையை நாக்கில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள். அப்படியே கரைந்துவிடும். வயிற்றுக்குள் (ஆசிட் இருப்பதால்) இன்னும் வேகமாகக் கரையும்!


வி.எஸ்.ராமு, திண்டுக்கல்.

அதிகமான பணம், புகழ் பெற எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கலாம்?

எதில் உங்களுக்குத் திறமையிருக்கிறது என்று முதலில் கண்டுபிடியுங்கள்! திரும்பத் திரும்ப எந்தத் துறை உங்கள் மனசை ஆட்டிப்படைக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். குடும்பப் பிரச்னைகளிலிருந்து எல்லாம் 'ரிட்டையர்' ஆன பிறகு திருமதி மோஸஸ் என்கிற அமெரிக்கப் பெண்மணி, தன்னால் ஓவியம் வரைய முடியும் என்பதைக் கண்டுபிடித்தார். அப்போது அவருக்கு வயது 90. அவருடைய ஓவியங்கள் பிரமாண்டமான வெற்றிஅடைந்து, அவரை அமெரிக்கர்கள் செல்லமாக Grandma Moses என்று அழைத்தனர். இங்கே பஸ் கண்டக்டராகப் பணியாற்றிய ஒருவருக்கு இருந்த தன்னம்பிக்கை பற்றியும், அவர் பிற்பாடு புகழின் உச்சிக்குப் போனது பற்றியும் உங்களுக்கே தெரியும். ஆகவே, அதிகமான பணம் எப்படி வரும் என்கிற

ஹாய் மதன்

யோசனையோடு மட்டும் ஒரு துறையைத் தேர்ந்தெடுத் தால் அதோகதிதான்!


வி.எஸ்.கீர்த்தனா, ஈரோடு.

குதிரைகள் நின்றுகொண்டுதான் தூங்கும் என்கிறார்களே, ஏன்? இது உண்மையா?

உண்மைதான். காரணம், குதிரைகள் முழங்கால்களை 'லாக்' பண்ணிக்கொள்ளும். ஆகவே கீழே விழாது. மனிதனால் இது முடியாது. பஸ்ஸில் பக்கத்து ஸீட்காரர் தோளில் சாய்ந்து தூங்குகிறோமே என்பதுகூட கும்பகர்ணர்களுக்குத் தெரியாது!


ஜி.மாரியப்பன், தேனி.

தனிமையிலேயே இருந்தால் பைத்தியம் பிடித்துவிடும் போல் உள்ளதே! ஜெயிலில் கைதிகள் எப்படித் தனிமையில் உள்ளனர்?

'தனிமை' வேறு. 'தன்னந்தனியாக' வேறு! தினமும் ஒவ்வொருவரும் கொஞ்சநேரமாவது தனிமையில் இருப்பது சிந்தனைத் திறனையும், அறிவையும் வளர்க்கும். ஆனால், 'சிறையில் தனிமை' என்பது கொடுமையான விஷயம். சில நாடுகளில் ஒரு பெட்டிக்குள்கூட கைதிகளை வாரக் கணக்கில் அடைத்து வைப்பார்கள். ஆஸ்கர் வென்ற பழைய படம் 'The Bridge on the River kwai'ல் அப்படி ஒரு காட்சியை நீங்கள் பார்க்கலாம். அல்லது Papillon நாவலைப் படியுங்கள். தமிழில் ரா.கி.ரங்கராஜன்'பட் டாம்பூச்சி' என்கிற பெயரில் இதை உணர்ச்சி கரமாக மொழி பெயர்த்திருக்கிறார்.

ஹாய் மதன்


ஏ.வி.என்.ராமநாதன், தஞ்சாவூர்.

'அஞ்சு விரலும் ஒண்ணாவா இருக்கு' என்பது தமிழ் சினிமாக்களில் வரும் ஒரு வசனம். யோசித்துப் பார்த்தால், அஞ்சு விரலும் ஒரே மாதிரி இருந்தால் நம்மால் எந்த வேலையையுமே ஒழுங்காகச் செய்ய முடியாது என்றே தோன்றுகிறது. உண்மைதானே?

ஹாய் மதன்

உண்மைதான்! ஒரு டம்ளரைக் கையில் ஏந்திப் பாருங்கள். அதாவது விரல்களைப் பாருங்கள்! நான்கு விரல்களும் ஒரே வரிசையில் இருக்கும். பரிணாம வளர்ச்சி என்பது அந்த அளவுக்கு நுணுக்கமானது!


க.நா.இராஜேஸ்வரன், ஈரோடு.

ஸ்லீவ்லெஸ் ஆடைகளை இன்றைய பெண்கள் அதிகம் விரும்பி அணிவதற்கு என்ன காரணம்?

ஃபேஷன்தான் காரணம். ஃபேஷன் என் பது அநேகமாக பிரான்ஸில் ஆரம்பித்து அமெரிக்கர்களையும், ஐரோப்பிய நாடுகளை யும் அடைந்து, பிறகு தென்னாட்டுக்குப் பரவி, தமிழ்நாட்டுக்குள் நுழைந்து, கடைசி யாக கிராமங்களுக்குக்கூடச் சென்றுவிடுகிறது! 'ஒரு குரங்கு குல்லாய் போட்டுக்கொண்டால் எல்லாக் குரங்குகளும் குல்லாய் அணிந்து கொள்கிற' கதை மாதிரிதான். தனிப்பட்ட முறையில்... எனக்கு ஸ்லீவ்லெஸ் அவ்வளவாகப் பிடிக்காது!

 
ஹாய் மதன்
ஹாய் மதன்