Published:Updated:

பெருந்தலைவரின் தலைவர்!

பெருந்தலைவரின் தலைவர்!

பெருந்தலைவரின் தலைவர்!

பெருந்தலைவரின் தலைவர்!

Published:Updated:

01-04-09
விகடன் பொக்கிஷம்
பெருந்தலைவரின் தலைவர்!
பெருந்தலைவரின் தலைவர்!
 
பெருந்தலைவரின் தலைவர்!
பெருந்தலைவரின் தலைவர்!
பெருந்தலைவரின் தலைவர்!
பெருந்தலைவரின் தலைவர்!

த்தியமூர்த்தி 1887-ம் ஆண்டு, ஆகஸ்ட் 19-ந் தேதி புதுக்கோட்டை ராஜ்யத்தில் பிறந்தார். காங்கிரஸ் மகாசபையின் ஆதரவில், 1918-ம் ஆண்டில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அரசியல் மகாநாட்டில், சத்தியமூர்த்தி முதன்முதலாக முன்னணிக்கு வந்தார். இந்த மகாநாட்டில் அனுபவம் முதிர்ந்த பெஸன்ட் அம்மையார் போன்ற பல தலைவர்களைச் சத்தியமூர்த்தி எதிர்க்க நேரிட்டது.

''சென்னை நகர மேயராக அவர் 1939-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னையை எழில்மிகு நகரமாக்குவதே அவருடைய முக்கி யக் கொள்கையாக இருந்தது. மேயராக இருந்த போது அவர் நிறைவேற்றிய பல்வேறு சாதனை களில், குடி தண்ணீர் வசதியைப் பெருக்குவதற் காகப் பூண்டி நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டது மிகவும் முக்கியமானது.'' - 'சிட்டி'.

''நாற்பது வருஷங்களுக்கு முன்பு, சென்னை சட்டசபையில் ஆளும் வர்க்கத்தினரின் சகாக் களாக அமர்ந்திருந்த மந்திரிகளின் செவிகளில் எதிரொலிக்கும் வகையில், பாரதியின் பெருமை களைப் பற்றி எடுத்துரைக்கிறார் சத்தியமூர்த்தி. மந்திரி சபைத் தலைவர், ஜஸ்டிஸ் கட்சியின் அமைப்பாளர்களில் ஒருவரான பனகல் ராஜா. அந்தச் சமயத்தில் பள்ளிக் குழந்தைகளின் பாட சம்பந்தமாக சத்தியமூர்த்தி பேசியது மிகவும் பொருத்தமாக இருந்தது.

'தமிழ்நாட்டில் பாரதி என்ற மனிதர் ஒருவர் இருந்தார்...' என்று குழந்தைகளுக்குக் கதை சொல்லும் வகையில் ஆரம்பித்தார் சத்திய மூர்த்தி. 'அந்த மனிதர் இங்கிலாந்தில் பிறந் திருந்தால், அரசாங்கக் கவிஞராக நியமிக்கப்பட் டிருப்பார். அவருடைய கவிதைகள் உயர்ந்தவை. தேசிய உணர்ச்சி ஊட்டுபவை. அந்த மனிதரின் பாடல்களைப் பள்ளிக்கூடங்களில் கற்றுக் கொடுப்பதற்காக திருநெல்வேலி தாலூகா போர்டு நடவடிக்கை எடுத்தபோது, கனம் முதன்மந்திரி அவர்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டு விட்டது. இந்தப் பாடல்களின் மூலம் புரட்சி ஏற்பட்டு விடும் என்று அவர் நினைத்தார்' என்று சத்தியமூர்த்தி கர்ஜித்தார்.'' - வில்லி.

''கல்லூரிகளின் நிர்வாகத்தைச் சீரியமுறையில் அமைக்கவேண்டி, சென்னை பல்கலைக்கழகத்தாரால் 1929-ம் ஆண்டு ஒரு கமிஷன் நிறுவப்பட்டது. அதில் திரு. சத்தியமூர்த்தியும் ஓர் உறுப்பினர்.

கமிஷன் எங்கள் கல்லூரிக்கு விஜயம் செய்தது. சத்தியமூர்த்தியின் பொறுப்பு விளையாட்டுத் துறை, நூலகம் இவற்றைக் கவனிப்பது. முதல் நாள் சத்தியமூர்த்தி உள்பட கமிஷனின் சில உறுப் பினர்களை கல்லூரியைச் சுற்றிலும் அழைத்துச் சென்றார்கள். நேராகக் கால்பந்து விளையாடும் மைதானத்திற்குச் சென்றார் சத்தியமூர்த்தி. முன் தினம் துடைத்துச் சீர் செய்து, வர்ணம் தீட்டப்பட் டிருந்த 'கோல் போஸ்ட்'டுகளிடம் சென்று, தொட்டுப் பார்த்தார். காயாத புதுச் சாயம் கையில் ஒட்டிக்கொண்டது. அருகில் நின்ற கல்லூரி முதல்வர் பூஜ்யர் ஞானப்பிரகாசம் அவர்களிடம் தன்னுடைய கைச்சாயத்தைக் காட்டி, 'நாங்கள் வயது முதிர்ந்தவர்கள். கால்பந்தும் ஹாக்கியும் விளையாடும் பருவத்தைத் தாண்டியவர்கள். நாங்கள் விளையாடுவதற்குத்தான் அவகாசம் ஏது? எதற்காகத் தாங்கள் சிரமப்பட்டு இவற்றையெல்லாம் புதுப்பிக்க வேண்டும்? விளையாட்டுகளுக்காக இவ்வளவு பண உதவி தேவை என்று சொல்லியிருந் தால் போதாதா?' என்று கேட்டார்.''

- எஸ்.

பெருந்தலைவரின் தலைவர்!

னிவாசன்

''இறுதிப் போராட்டம் ஒன்று நடத்திப் பூரண சுதந்திரம் பெறுவதென்ற மகாத்மா காந்தியின் யோசனைப்படி, 1942 ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி, அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி பம்பாயில் கூடிற்று. அன்றைய தினமே மகாத்மா காந்தி உட்பட, சத்தியமூர்த்தியும் காங்கிரஸ் தலைவர் களும் கைது செய்யப்பட்டு, விசாரணையின்றிக் காவலில் வைக்கப்பட்டனர்.

ஏற்கெனவே மிகவும் நலிந்து போயிருந்த சத்தியமூர்த்தியின் உடல் நிலை, சிறைவாசத்தால் மேலும் சீர்கெட்டது. நாட்டு விடுதலை ஒன்றையே மனத்தில் கொண்டு, தம்முடைய நோயைச் சகித்து வந்த சத்தியமூர்த்தி, 1943-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதியன்று காலை ஆசுபத்திரியில் காலமானார்.''

- 'சிட்டி'
(தில்லி தமிழ்ச் சங்கம் வெளியிட்ட
'சுடர்' பத்திரிகையிலிருந்து சில பகுதிகள்)

 
பெருந்தலைவரின் தலைவர்!
பெருந்தலைவரின் தலைவர்!