Published:Updated:

டீன் கொஸ்டீன்

ஜப்பான் அணு உலை... தமிழகத்தில் ஆசிட் மழை?!

டீன் கொஸ்டீன்

ஜப்பான் அணு உலை... தமிழகத்தில் ஆசிட் மழை?!

Published:Updated:
##~##
ஆர்.சத்யன், செஞ்சி.

''சமீபத்திய ஜப்பான் அணு உலைப் பாதிப்பின் காரணமாக தமிழகத்தில் மழை பெய்தால், அது ரசாயன மழையாக இருக்கும். நம் சருமங்களைப் பாதிக்கும் என்றெல்லாம் தகவல்கள் பரவுகின்றனவே... அது எந்த அளவுக்கு உண்மை?''

ரமணன், வானிலை ஆராய்ச்சி மையம், சென்னை.

''பொதுவாக, அணு உலைகளில் அதீத வெப்பம் மூலம் உருவான நீராவி, கரு சுழற்சிக்கு உதவி புரியும். அப்போது ஏதேனும் கோளாறு நேர்ந்தால், அந்தக் கரு வெடித்துச் சிதற வாய்ப்பு உள்ளது. அப்போது வெளிவரும் கழிவுகளில் பெரும்பகுதி நிலத்திலேயே தங்கிவிடும். மிக மிக சொற்ப அளவிலான

டீன் கொஸ்டீன்

கழிவுகளே கண்டம் தாண்டிப் பரவும் வாய்ப்பு இருக்கிறது. பொதுவாக, அணு உலை வெடிப்பின்போது சீசியம் 137 என்ற கதிர்வீச்சு வெளிப்படும். ஆனால், அவை எளிதில் நீரில் கரையும் தன்மை கொண்டவை என்பதால், நாடுவிட்டு நாடு பரவும் அபாயம் என்பது மிகவும் குறைவு. அதனால் வெறுமனே பரவும் வதந்திகளை நம்பாமல், அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு களுக்கு ஏற்பச் செயல்படுங்கள்!''

சு.ராமஜெயம், ஆரணி.

''நான் ஐந்து மாதக் கர்ப்பிணி. குழந்தை வயிற்றில் இருக்கும்போது கவனமாகத் தூங்க வேண்டும். புரண்டு படுக்க வேண்டும் என்றால், படுக்கையில் இருந்து எழுந்து மறுபுறம் திரும்பிப் படுக்க வேண்டும். இல்லை என்றால், கொடி சுற்றி விடும் என்று கூறுகிறார்கள் என் தோழிகள். கர்ப்பக் காலத்தில் உறங்கும் முறைகள் என்ன?''

சாந்தி குணசிங், மகப்பேறு மருத்துவர்.

''கர்ப்பம் தரித்து முதல் நான்கு மாதங்கள் வரை சாதாரணமாக இருக்கலாம். ஆனால், ஐந்து மாதங்களில் இருந்து இடது பக்கம் ஒருக்களித்துப் படுக்க வேண்டும். முடியாத பட்சத்தில் வலது பக்கம் திரும்பிப் படுக்கலாம். ஆனால், எக்காரணம்கொண்டும் மல்லாக்கப் படுக்காதீர்கள். அப்படிப் படுத்தால், ரத்த நாளங்கள் அழுந்தும் என்பதால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ரத்த ஓட்டம் தடைபடலாம். அதுவே ஒருக்களித்துப் படுத்தால், ரத்த ஓட்டத்தில் எந்தச் சிக்கலும் இருக்காது. மற்றபடி திரும்பிப் படுக்க, எழுந்து அமர்ந்து திரும்பிப் படுக்க வேண்டும். இல்லை என்றால், குழந்தை பிறக்கும் போது கொடி சுற்றிவிடும் என்பதை நம்பா தீர்கள்!''

எம்.பாமா, காஞ்சிபுரம்.

''என் மகளுக்கு 11 வயது. ஆனால், இந்த வயதிலேயே கை, கால்களில் அதிக அளவு ரோம வளர்ச்சி. அதற்கு என்ன காரணம். அதைச் சீராக்க ஏதேனும் வழி இருக்கிறதா?''

வசுந்திரா, அழகுக் கலை நிபுணர்.

''ரோம வளர்ச்சிக்கு பரம்பரைக் காரணிகளும் முக்கியப் பங்கு வகிக்கும். கவலை வேண்டாம். அது குணப்படுத்தக்கூடிய பிரச்னைதான். கெமிக்கல் சார்ந்த பொருட்கள், வேக்ஸிங், த்ரெட்டிங் போன்ற முறைகளில் உங்கள் மகளுக்கு ரோமங்களை அகற்றினால், அது வளர்ச்சியை மேலும் தூண்டிவிடத்தான் செய்யும். வேப்பங் கொட்டையின் சாம்பல், கடலை மாவுடன் கஸ்தூரி மஞ்சள், வாசனைக் குளியல் பொடி இவற்றில் ஏதாவது ஒன்றை, குளிக்கும்போது உபயோகப்படுத்தலாம். குளிப்பதற்கு முன்பு ஆலிவ் ஆயில் அல்லது நல்லெண்ணெயை உடல் முழுக்கத் தேய்த்த பின்பு இப் பொடிகளை உபயோகிக்கலாம். மேலும், குளிப்பதற்கு முன் ரோமம் இருக்கும் இடங்களில் வட்டச் சுழற்சியில் மசாஜ் செய்வது ரோம வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும். தக்க மருத்துவரை உடனடியாக அணுகுங்கள்!''  

டீன் கொஸ்டீன்

ச.உஷா, செஞ்சி.

''எனக்குச் சங்கீதம் என்றால் பிரியம். இசை மற்றும் அது சார்ந்த துறைகளிலேயே என் எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள விரும்புகிறேன். அத்துறை சார்ந்த படிப்புகள் பற்றியும் வேலைவாய்ப்புகள் பற்றியும் கூறுங்களேன்?''

டாக்டர் ஆர்.எஸ்.ஜெயலட்சுமி, இசைத் துறைப் பேராசிரியர்(ஓய்வு).

''ஏதேனும் ஓர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் மியூஸிக்கில் பி.ஏ., எம்.ஏ., பட்டப் படிப்புகளை தொலைதூரக் கல்வி மூலம் பயிலலாம். அதன் பிறகு, எம்.ஃபில்., பி.ஹெச்டி., போன்ற பட்ட மேற்படிப்புகளை சென்னைப் பல்கலைக்கழகம் போன்ற அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் நேரடியாக இணைந்து தொடரலாம். இதனால், இசைக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியில் சேரலாம். ஆனால், வருடத்துக்கு 20 நாட்கள் மட்டுமே நடக்கும் நேரடி வகுப்புகளின் மூலம் உங்களால் இசையை முழுமை யாகக் கற்க முடியாது. எனவே, தனிப்பட்ட முறையில் வெளியில் யாரேனும் ஒரு தேர்ந்த குரு அல்லது இசைப் பள்ளியில் சேர்ந்து உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளலாம். அடையாரில் இருக்கும் இசைக் கல்லூரியில் மூன்று வருடப் படிப்பு ஒன்று இருக்கிறது. அதில் இணைந்து பயிற்சியின் இறுதியில் தேர்ச்சி அடைந்தால், 'இசைக் கலைமணி’ என்ற பட்டம் அளிப்பார்கள். அந்தப் பட்டத்தின் மூலம் தனியாக இசை வகுப்புகள் எடுக்கலாம். ஆனால், அந்தப் பட்டம் பி.ஏ., எம்.ஏ., போன்ற பட்டத்துக்கு ஒப்பானது ஆகாது. இந்த மூன்று வருடப் படிப்புக்குப் பின் ஒரு வருடம் இசை ஆசிரியர் படிப்பு முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துகொண்டால், அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஆசிரியர் பணி கிடைக்கும் வாய்ப்பு பிரகாசம்!''

கே.வரதன், வேலூர்.

''நான் கோவையில் பிசினஸ் செய்து வருகிறேன். மூலப் பொருட்கள் வாங்குவதற்காக அடிக்கடி சென்னைக்கு ரயில் அல்லது காரில் பயணிப்பேன். வங்கி விடுமுறை காலமாக இருந்தால், கையோடு சில லட்ச ரூபாய்களும் எடுத்துச் செல்வேன். சமீப நாட்களாக தேர்தல் பாதுகாப்புப் பணி வாகனச் சோதனைகளில் அரசியல்வாதி அல்லாத பொது மக்களிடமும் லட்சங்களில் பணம் பறிமுதல் செய்யப்படுவதாகச் செய்திகள்! இந்தச் சோதனைகளை எதிர்கொள்ள என்ன மாதிரியான ஆவணம் வைத்திருக்க வேண்டும்? பொதுவாக, எவ்வளவு தொகை கையில் வைத்திருக்கலாம்? விளக்கவும்!''  

ரவிச்சந்திரன், வருமான வரித் துறை கூடுதல் இயக்குநர்(புலனாய்வு).

''ஒரு லட்ச ரூபாய்க்குக் குறைவாக எடுத்துச்செல்பவர்கள் பயப்படத் தேவை இல்லை. அதைவிட அதிகமான தொகையை எடுத்துச் செல்பவர்கள், வங்கியில் இருந்து அந்தப் பணத்தை எடுத்ததற்கான சான்றாக வங்கி பாஸ் புக் அல்லது வித்டிராயல் ஸ்லிப்பைக் கையில் வைத்திருப்பது அவசியம். வியாபார நடவடிக்¬ககளுக்காக வெளியூருக்குப் பணத்துடன் செல்பவர்கள், தங்கள் கம்பெனி லெட்டர் பேடில் இந்தக் காரணத்துக்காக, இவ்வளவு பணம் கொண்டு செல்கிறார் என்று உயர் பொறுப்பில் உள்ளவர்களிடம் அத்தாட்சிக் கடிதத்தை வாங்கிச் செல்வது நல்லது. ஏற்றுக் கொள்ளத்தக்க விளக்கம் இருந்தால், உங்களுக்கு எந்தச் சிக்கலும் இருக்காது!''    

டீன் கொஸ்டீன்