பிரீமியம் ஸ்டோரி

24-06-09
டீன் கொஸ்டீன்
டீன் கொஸ்டீன்
டீன் கொஸ்டீன்
 
முட்டைக்கு எத்தனை மார்க்?
டீன் கொஸ்டீன்

கே.சரவணன், திருவள்ளூர்.

"தினமும் இரண்டு முறை குளிக்கிறேன். ஆனாலும், வியர்வையில் உப்பு பிடிப்பது போல கை, கால்களில் வெள்ளை வெள்ளையாக வருகிறது. மற்றவர்கள் கிண்டல் செய்வார்கள் என்று பயமாக இருக்கிறது. இது ஏதேனும் தோல் நோயா?"

டீன் கொஸ்டீன்

கே.பிரியா சருமப் பாதுகாப்பு மருத்துவர்.

"இது நோய் இல்லை. பயப்பட வேண்டாம். நமது மேல் தோல் 28 நாளில் வளர்ந்து உதிரும் தன்மை கொண்டது. அதன் செயல்பாடு நம் கண்களுக்குத் தெரியாது. வறண்ட தோல்கொண்டவர்களுக்கு மட்டும் அதன் வெள்ளை தெரியும். அதை Scaling என்பார்கள். அந்த வெள்ளைத் தோற்றத்தைத் தவிர்க்க, வெதுவெதுப்பான நீரில் குளிக்கவேண்டும். மிகவும் சூடாக உள்ள நீரில் குளிக் கக் கூடாது. அழகுசாதனப்பொருட்கள் விற்கும் கடைகளில் Moisturizing Soap என்று கிடைக்கும். அதை வாங்கிக் குளிப்பதற்குப் பயன்படுத்துங்கள். குளித்து முடித்து உடலில் ஈரம் இருக்கும்போது தரமான பாடிலோஷன், மாய்ஸ்சரைஸர் தடவ வேண்டும். நிறையத் தண்ணீர் குடியுங்கள். உணவில் அதிக அளவில் முளைகட்டிய பயறு வகைகள், பழங்கள், பச்சைக் காய்கறிகளைச் சேர்த்துக்கொள் ளுங்கள். இதற்குப் பிறகும் பிரச்னை நீடித்தால், சருமப் பராமரிப்பு நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது!"

பிரியா வாசு, பெங்களூரு.

"25 வயதிலேயே எனக்கு நரைமுடி தென்பட்டதால், கடந்த ஒரு வருடமாக ஹென்னா உபயோகிக்கிறேன். இப்போது நான் இரண்டரை மாதம் கர்ப்பமாக உள்ளேன். கர்ப்ப காலத்தில் தலைக்கு ஹென்னா பயன்படுத்தலாமா? அதனால் கருவில் இருக்கும் சிசுவுக்கு ஏதேனும் பாதிப்பு வருமென்றால் முடியைக் கறுப்பாக வைத்திருக்க என்ன செய்வது?"

டீன் கொஸ்டீன்

வசுந்தரா அழகுக் கலை நிபுணர்.

"சாதாரண மருதாணி மட்டும்கொண்டு தயாரிக்கப்பட்டு இருந்த ஹென்னாவாக இருந்தால் எந்தப் பாதிப்பும் இருக்காது. ஆனால், கறுப்பு நிற ஹென்னாவைப் பயன்படுத்திக்கொண்டு இருந்தால் தயவுசெய்து தவிர்க்கவும். ஏனெனில், கறுப்பு நிறத்தை உருவாக்கக் கண்டிப்பாக அதில் கெமிக்கல் பொருட்கள் கலக்கப்பட்டு இருக்கும். அது நிச்சயம் சிசுவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, மெட்டாலிக் மற்றும் கறுப்பு நிறத்தை ஏற்படுத்தும் கெமிக்கல் கலந்த ஹென்னாவைத் தவிர்த்துவிடுங்கள். இயற்கையாக வீட்டிலேயே தயார் செய்யும் ஹென்னாவைப் பயன் படுத்தலாம். 250 கிராம் ஹென்னாவுக்கு அரை மூடி எலுமிச்சம் பழச் சாறு, சிறிய கப் தயிர், ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய், டீ டிகாக்ஷன் இரண்டு டேபிள் ஸ்பூன் (கறுப்பாக வேண்டுமென்றால் காபி டிகாக்ஷன்). இவை அனைத்தையும் இரவே கொஞ்சம் தண்ணீர்விட்டுக் கலந்து கெட்டியான குழம்பு போலாக்கி, இரும்பு வாணலியில் ஊறவைத்து மறுநாள் காலையில் தலைக்குத் தடவலாம். இதனால் முழுமையான கறுப்பு நிறம் வராது. டார்க் மெரூன் நிறம் கிடைக்கும். ஆனால், சிக்கல் இல்லாதது!"

('கர்ப்பிணிப் பெண்கள் கெமிக்கல் கலந்த ஹென்னாவைப் பயன்படுத்துவது கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்குப் பிரச்னை உண்டாக்கும்!' என்று மருத்துவர்களும் உறுதிப்படுத்தினார்கள்.)

பெயர் வெளியிட விரும்பாத வாசகி, திருவண்ணாமலை.

"எனக்குத் திருமணமாகி குழந்தை உள்ளது. ஒரு விழாவில் நண்பராக அறிமுகமான ஒருவர் இரண்டு மாதங்கள் போனில் நன்றாகப் பேசினார். கடந்த வாரம் திடீரென்று, 'உன்னைப் பார்க்க வேண்டும்' என்றார். நானும் அவர் வீட்டுக்குச் சென்றேன். அவர் என்னிடம் தப்பாக நடக்க முயற்சித்தார். நான் சத்தம் போட்டுவிட்டு வந்துவிட்டேன். ஆனால், அவர் நட்பை இழக்கவும் மனமில்லை. அவருக்குப் புரியவைத்து நட்பைத் தொடரலாமா? அல்லது, அவரை முழுக்கவே தவிர்த்துவிடலாமா?"

டீன் கொஸ்டீன்

பி.ஆனந்தன் மனநல மருத்துவர்.

"போதைப் பழக்கத்துக்கு அடிமைஆனவனுக்கு ஒருநாள் போதைப் பொருட்கள் கிடைக்காவிட்டால் அவன் எப்படிக் கஷ்டப்படுவான்? அப்படி ஒரு நிலையில் நீங்கள் சிக்கியிருக்கிறீர்கள். உணர்ச்சிகளுக்கு அடிமையானதொரு மனநிலை (Emotional addiction). போதைப் பொருள் உபயோகிப் பதால் ஏற்படும் கெடுதிகளைப்பற்றி அறிந்தும் அதன் மாய சுகத்துக்காக ஏங்குவது போலத்தான் அவருடைய பேச்சுகளுக்கு நீங்கள் மயங்கிக்கிடக் கிறீர்கள். ஒரு தனிமனிதனின் வளர்ச்சிக்கு உதவாத எந்த ஓர் உறவும் நோய்வாய்ப்பட்ட உறவே ஆகும் (Morbid Relationship). மேடம் ப்ளீஸ்... உடனடியாக இந்த உறவிலிருந்து வெளியேற முயற்சியுங்கள். முடியாவிட்டால் உடனடியாக ஒரு மனநல மருத்து வரிடம் ஆலோசனை பெறுங்கள்!"

டீன் கொஸ்டீன்

எம்.ஸ்ரீதர், தர்மபுரி.

"என் மகனுக்கு வயது 5. அவனுக்கு முட்டை என்றால் ரொம்பவே பிடிக்கும். மற்ற எந்த உணவைவிடவும் ஆஃப்பாயிலை அதிகம் சாப்பிடுவான். ஒரு நாளைக்கு நாலு அல்லது ஐந்து முட்டை சாப்பிடுகிறான். 'ஆரோக்கியமாகவே இருந்தாலும், இத்தனை முட்டை சாப்பிடக் கூடாது' என்கிறார்கள் சிலர். அது உண்மையா?"

டீன் கொஸ்டீன்

கவிதா ராமச்சந்திரன் நியூட்ரீஷியனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன்.

"ஐந்து வயதுச் சிறுவனுக்கு ஜீரணிக்கும் திறன் குறைவாகத்தான் இருக்கும். முட்டையில் அதிகப் புரதம், தாதுப் பொருட்கள், வைட்டமின் இருந்தாலும் கொழுப்பும் அதிகளவில் உள்ளது. பொதுவாக, வயது வந்தவர்களும் குழந்தைகளும் நாள் ஒன்றுக்கு 300 மி.கி. கொழுப்புதான் உட்கொள்ள வேண்டும். ஆனால், ஒரு முட்டையில் மட்டுமே 230 மி.கி. கொழுப்பு உள்ளது. ஒரு நாளுக்கு ஐந்து முட்டை என்றால், அதுவே 1,000 மி.கி. கொழுப்பைத் தாண்டும். பிற்காலத்தில் இதயம் சம்பந்தமான பிரச்னைகளுக்கு இன்றைய கொழுப்புகள் காரணமாக இருக்கக்கூடும். எனவே, ஒரு நாளைக்கு ஒரு முட்டை மட்டுமே உங்கள் மகனுக்குக் கொடுங்கள். மிகவும் அடம்பிடித்தால் இரண்டாவது முட்டையில் மஞ்சள் கரு இல்லாமல் கொடுங்கள். அதற்கு மேல் வேண்டாம்!"

எஸ்.பிரசாந்த், சென்னை.

"நான் பிளஸ் டூ முடித்துவிட்டு தற்போது பி.எஸ்ஸி., பயோ-டெக்னாலஜி படிப்பில் சேர்ந் துள்ளேன். ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்பது என் லட்சியம். ஆனால் ஐ.ஏ.எஸ். தேர்வில் இந்தப் பாடத்தை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுக்க முடியாது என்கிறார்கள். அது உண்மையா? எந்தெந்தப் பாடங்களை விருப்பப் பாடமாகத் தேர்ந் தெடுக்க முடியும்?"

டீன் கொஸ்டீன்

டி.சங்கர் 'சங்கர் I.A.S. பயிற்சி அகாடமி,' சென்னை.

"ஐ.ஏ.எஸ்., பதவிக்கான சிவில் சர்வீஸஸ் தேர்வுகளில் பயோ -டெக்னாலஜி பாடத்தை விருப்பப் பாடமாகத் தேர்வு செய்ய முடி யாது என்பது உண்மைதான். முதல் நிலைத் தேர்வில் புவியியல், சமூகவியல், வரலாறு, தாவரவியல், விலங்கியல் உள்பட மொத்தம் 23 பாடங்களில் இருந்து ஒன்றை விருப்பப் பாடமாகத் தேர்வு செய்ய முடியும். பாடப் பிரிவுகள் பற்றிய முழு விவரங்களையும் new.upsc.gov.in என்ற தளத்தில் அறிந்துகொள்ளலாம். தேர்வு எழுதும் மாணவர்களில் 80 சதவிகிதத்தினர் புவியியல், வரலாறு, சமூகவியல், பொது நிர்வாகம், அரசியல் அறிவியல், மானுடவியல் ஆகிய பாடங்களைத் தேர்வு செய்தே வெற்றி பெறுகின்றனர். உங்களுக்கு நன்றாக எழுதும் திறன் மற்றும் ஆங்கில அறிவு இருந்தால், சமூகவியல் போன்ற கலைப் படிப்புகளை எடுத்துப் படிக்கலாம். இல்லையென்றால், புவியியல், வரலாறு போன்ற பாடங்களைப் படிக்கலாம். ஆல் தி பெஸ்ட்!"

டீன் கொஸ்டீன்
 
டீன் கொஸ்டீன்
-
டீன் கொஸ்டீன்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு