பிரீமியம் ஸ்டோரி

24-06-09
கிரஹப்பிரவேசம்
கிரஹப்பிரவேசம்
கிரஹப்பிரவேசம்
 
பாரதி தம்பி, படங்கள்:கே.ராஜசேகரன், மு.நியாஸ்அகமது
கிரஹப்பிரவேசம்
உங்கள் எதிர்காலம் காக்கும் தொடர் -11

கிரஹப்பிரவேசம்

னுபவத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்வது நல்ல விஷயம்தான். ஆனால், 'சொந்த அனுபவத்தில் இருந்து மட்டும்தான் பாடம் படிப்பேன்!' என்பது நல்லதல்ல. பக்கத்தில் நடப்பவர் காலில் முள் குத்தியதுமே, நாம் சுதாரித்துக்கொள்ளலாமே!

அந்த வீட்டின் தரைத்தளத்தில் ஹவுஸ் ஓனர் குடியிருந்தார். இரண்டாவது மாடியில் ஒரு குடும்பம் வாடகைக்கு இருந்தது. காலியாக இருந்த முதல் மாடிக்கு ஒரு குடும்பம் குடி வந்தது. வந்தவர்கள் நுனி நாக்கு ஆங்கிலமும், அரை டிரவுசர் நாகரிகமுமாக இருந்தார்கள். அதைவிட, அவர்களும் ஹவுஸ் ஓனரும் ஒரே சாதி. இவற்றில் மயங்கிய ஹவுஸ் ஓனர், வந்த வர்கள் பற்றிய மேலதிக விவரங்கள் கேட்காமல் வாட கைக்கு விட்டார். வாடகை என்னவோ ஒழுங்காகத் தான் வந்தது. ஆனால், இரண்டாவது மாடியில் வாட கைக்கு இருந்தவர்களுடன் வம்பு பிடித்தார் புதிதாக வந்தவர். ஹவுஸ் ஓனருக்கு புது ஆட்கள் மீது அபரிமித நம்பிக்கை. இரண்டாவது மாடிக்காரர்தான் தவறு செய்திருப்பார் என எண்ணி, அவரைக் காலி செய்ய வைத்தார். முதல் மாடிக்காரர் அறிமுகத்தில் இரண்டாவது மாடிக்குப் புதிதாக ஒரு குடும்பம் வந்தது. இரண்டு வருடங்களில் நான்கு குடும்பங்கள் வருவதும் போவதுமாக இருந்தன. எல்லாமே முதல் மாடிக்காரர் ஏற்பாடுதான். இந்த இடைவெளியில் முதல் மாடிக்காரர் மிக நெருக்கம் காட்டி வீட்டு வரி, தண்ணீர் வரி கட்டுவதில் எல்லாம் ஓனருக்கு உதவ ஆரம்பித்தார். ஓனரும் நம்பிப் பத்திர நகல்களை எல்லாம் கொடுத்தார்.

திடீர் என ஒருநாள் முதல் மாடிக் குடித்தனக்காரர் வாடகை தராமல் மல்லுக்கட்ட, ஹவுஸ் ஓனர் தனக் குத் தெரிந்த வழிகளை எல்லாம் கையாண்டுவிட்டு, வேறு வழியில்லாமல் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனார். அங்கு, 'இது என் வீடு. பாருங்க, வீட்டு பேர்ல பேங்க் லோன்கூட வாங்கியிருக்கேன்' என்று புதிதாகக் குண்டுபோட்டார் அந்த முதல் மாடி ஆள். அவர் உண்மையாகவே அந்த வீட்டின் பெயரில் வங்கிக்கடன் வாங்கியிருந்தார். எல்லாம் பத்திரப் பதிவு அலுவலகத்தோடு தொடர்புடைய சிலரோடு சேர்ந்து ரெடி பண்ணிய போலி பத்திரங்கள் செய்த மாயம். ஹவுஸ் ஓனர் நடுங்கிப்போனார். தனித்து விடப்பட்ட ஹவுஸ் ஓனர் சில லட்சங்களை பேரம் பேசி, லஞ்சமாகக் கொடுத்துத்தான் வீட்டை மீட்க முடிந்தது.

நீதி... சிரமப்பட்டுக் கட்டிய வீட்டை வாடகைக்கு விடும் முன்பு கவனமாக இருங்கள். வாடகைக்கு வருபவர் என்ன சாதி என்று பார்ப்பதைவிட, வாடகை தரும் அளவுக்கு வருமானம் வருகிறதா, அலுவலக முகவரி என்ன, சொந்த ஊர் எது என்பது போன்ற விவரங்களைத் தெரிந்து வைத்துக்கொள் ளுங்கள். நாளை ஒரு பிரச்னை என்றால், சாதியை வைத்து எதையும் சாதிக்க முடியாது.

ஹவுஸ் ஓனர் - வாடகைதாரர் பஞ்சாயத்துகள் போலவே வீட்டைக் கட்டித் தரும் பில்டருக்கும் வீடு கட்டச் சொல்லும் ஓனருக்கும் பல இடங்களில் மனச் சங்கடங்கள். 'சொன்னதைச் செய்யவில்லை, ஆரம்பத் தில் ஒரு ரேட் சொன்னார். இப்போது இன்னும் 4 லட்சம் கேட்கிறார்' என்றெல்லாம் ஏராளமான அவநம்பிக்கைப் புகார்கள். பில்டர்களிடம் கேட்டால், 'சிமென்ட் விலை ஏறிப்போச்சு, கம்பி விலைக் கூடிப் போச்சு' என்று அவர்களுக்கும் ஆயிரம் காரணங்கள். என்ன செய்யலாம்?

கிரஹப்பிரவேசம்

வழக்கறிஞர் அழகுராமன் இதற்கு ஒரு தீர்வு சொல் கிறார். "ஒரு சில இடங்களைத் தவிர, நிறைய இடங் களில் பில்டர்கள் மீது மக்களுக்கு வருத்தங்களே மிஞ்சு கின்றன. 15 லட்சத்தில் கட்டித் தருவதாகச் சொன்ன வீட்டுக்கு திடீரென 17 லட்சம் கேட்பார்கள். ஒரு வருடம் ஆகியும் பாதி வேலைகூட முடிந்திருக்காது. 'குட்டிச்சுவர் கட்டவா இத்தனை லட்சம்?' என்று மனம் வெதும்பும் மக்கள் வேறு பில்டரிடமும் போக முடியாமல், மேற்கொண்டும் கடன்களை வாங்கி, மீள முடியாத சுழலில் சிக்கிக்கொள்வதும் உண்டு. இதைத் தவிர்க்கத் தெளிவான முன்திட்டமிடல் அவசியம்.

கட்டுமானத்தை பில்டரிடம் ஒப்படைக்கும் பட்சத் தில் இரு தரப்புக்கும் இடையே அவசியம் ஓர் ஒப்பந் தம் போட்டுக்கொள்ள வேண்டும். எத்தனை சதுரஅடி வீடு, அதில் ஹால், பெட்ரூம், கிச்சன், பாத்ரூம் ஒவ்வொன்றும் எத்தனை சதுரஅடி, தளத்துக்கு என்ன வகையான டைல்ஸ் பதிப்பது, கதவு எப்படி இருக்க வேண்டும், மாடிப்படிகள் எப்படி அமைய வேண்டும், என்ன வகையான பெயின்ட் பயன்படுத்த வேண்டும் என எல்லாவற்றையுமே அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடலாம். அப்படி நுணுக்கமாக ஒப்பந்தம் போட்டுக் கொள்வது நல்லதும்கூட! ஏனென்றால் முழு வீடும் அழகாக இருந்து, உங்கள் பெட்ரூமின் ஒரு சின்ன பகுதி மட்டும் சரியில்லாமல் போய்விட்டால், ஒட்டு மொத்த வீடுமே பிடிக்காத ஒன்றாக மாறி விடும். அதனால் இப்படி ஓர் ஒப்பந்தம் போட்டுக்கொள்வது வருத்தங்களையும் ஏமாற்றங்களையும் தவிர்க்கும். ஒருவேளை பில்டருடன் பிரச்னை எதுவும் வந்துவிட் டால், இந்த ஒப்பந்தம் ஓர் ஆதாரமாகவும் இருக்கும். அந்த ஒப்பந்தத்தைப் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிய வேண்டும் என்று அவசியமில்லை. 20 ரூபாய் ஸ்டாம்ப் பத்திரத் தில் எழுதிக்கொண்டாலே போதுமானது" என்கிறார் அழகுராமன்.

'அடுக்ககங்களில் ஃபிளாட் வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை' என சில முக்கியமானவிஷயங் களைப் பட்டியல் போடுகிறார்கள் நிபுணர்கள்.

கிரஹப்பிரவேசம்

அடுக்ககங்களில் தரைத் தளம் மற்றும் முதல் தளத்தைக் காட்டிலும் இரண்டாவது, மூன்றா வது தள ஃப்ளாட்களின் விலை கொஞ்சமே கொஞ்சம் குறைவு. ஆனால், அந்தக் கொஞ்ச விலை வித்தியாசத்துக்கு ஆசைப்பட்டு மேல் தள வீடுகளை வாங்குவது பிற்காலத்தில் உங்களுக்குப் பெரும் வசதிக் குறைவாக இருக்கும்!

நீங்கள் வீடு வாங்கப் போகும் புர மோட்டர் அதற்கு முன் கட்டிய புரா ஜெக்ட்டுகளை நேரில் சென்று பார்வையிட வேண்டும். அங்கு குடியிருப்பவர்களிடம் 'சொன்னதைச் செய்தார்களா, சொன்ன தொகைக்குள், சொன்ன தேதிக்குள் கட்டி ஒப்படைத்தார்களா?' என் பதை விசாரியுங்கள்!

வீடு உங்கள் வசம் வரும்போது அந்த வீட்டின் பெயரில் வேறு எதுவும் கடன்கள், வரி பாக்கி இல்லை என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண் டும்!

முறைப்படியான குடியிருப்புப் பகுதியில்தான் கட்டப்பட்டு இருக்கிறதா, பட்டா நிலமா, எத்தனை மாடிகள் கட்டு வதற்கு அனுமதி பெறப்பட்டிருக்கிறது என்பனவற்றை புரமோட்டரிடம் நேரிடையாகக் கேட்கலாம். அவர் தரும்விவரங்களை அரசு அலுவலகங்களில் க்ராஸ்செக் செய்வது கூடுதலான நம்பகத்தன்மைக்கு வழிவகுக்கும்.

இன்று விளம்பரங்களில் காட்டப்படும் கலர்ஃபுல் வீடுகளைப் பார்த்துவிட்டு ஃப்ளாட் வாங்கும் பலர், வீட்டில் நுழைந்த துமே பெருத்த ஏமாற்றத்துக்கு உள்ளாகின் றனர். அவர்களின் முதல் குற்றச்சாட்டு, 'சொன்ன சதுர அடியைவிட வீடு குறைவாக இருக்கிறது. எங்களை ஏமாற்றிவிட்டார்கள்' என்பதுதான். நடைமுறையில் கார்ப்பெட் ஏரியா, பில்ட்-அப் ஏரியா, சூப்பர் பில்ட்-அப் ஏரியா என்று புரமோட்டர்கள் வீட்டை மூன்றாகப் பிரிக்கிறார்கள். அதன் வித்தியாசங்களையும் சாதக பாதகங்களையும் தெரிந்துகொண்டால்தான் ஏமாறாமல் தவிர்க்க முடியும்!

 
கிரஹப்பிரவேசம்
- இன்னும் பிரவேசிக்கலாம்...
கிரஹப்பிரவேசம்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு