Published:Updated:

நாயகன் - அன்னை தெரசா

நாயகன் - அன்னை தெரசா

பிரீமியம் ஸ்டோரி

24-06-09
நாயகன் அன்னை தெரசா
நாயகன் - அன்னை தெரசா
நாயகன் - அன்னை தெரசா
 
அஜயன் பாலா
நாயகன் - அன்னை தெரசா

சென்ற இதழ் தொடர்ச்சி...

'எண்ணெய் ஊற்றிக்கொண்டே இருந்தால்தான் விளக்கு தொடர்ந்து எரிகிறது. அதே போல அன்பு எனும் வெளிச்சம்
நம் மீது இடைவிடாமல் படர வேண்டுமானால், நம்மிடம் இருந்தும் அன்பு தொடர்ந்து வெளிப்பட வேண்டும்!'

- அன்னை தெரசா

ன்பு ததும்பும் மனதுடன் நோயுற்றுக்கிடப்பவர்களின் அருகே சென்று மெதுவாக அவர்களின் கைகளைப் பற்றிப் பாருங்கள். உங்களின் உடலில்இருந்து ஒரு காந்த சக்தி அவர்களது உடலுக்குள்புகுவதைநிச்சய மாக உணர முடியும். அன்பு ஒரு சக்தி. உலகின் சகல நோய்களையும் நீக்கக்கூடிய பேராற்றல்கொண்டது. அன்னையின் உருவத்தை அல்லது தோற்றத்தைக் கண்ட மாத்திரத்தில் பலரது கண்களில் இருந்து நீர் தானாகப் புறப்பட்டுக் கன்னங்களில் வழியும். காரணம், அன்னையின் அந்த அளவற்ற காந்த சக்தி.

நாயகன் - அன்னை தெரசா

92-ல் வளைகுடா போர் நடந்துகொண்டு இருந்த நேரம். போரை நிறுத்தச் சொல்லி அன்னை, ஜார்ஜ் புஷ்சுக்கும் சதாம் ஹ§சேனுக்கும் தொடர்ந்துகடிதங் களை எழுதி வந்தார். போர் முடிந்தபோது இராக் நாடே அலங்கோலமாகக் கிடந்தது. மக்களிடையே பீதியும் பயமும் வாழ்வின் மீது அவநம்பிக்கையும்அதிக ரித்து இருந்தன. நாட்டை மட்டுமல்லாமல் மக்களின் மனதையும் மறு நிர்மாணம் செய்ய வேண்டிய நிர் பந்தம்.

அன்னை தெரசா தனக்கு அனுப்பிய கடிதங்களை எல்லாம் எடுத்து வரச் செய்து படித்துப் பார்த்தார் சதாம் ஹ§சேன். உடனடியாக அன்னையைஇராக்குக்கு வர ஏற்பாடு செய்யும்படி உத்தரவிட்டார்.

ஜூன் 11, 1992-ல் பாக்தாத் விமான நிலையத்தில் அன்னையும் அவரது வெள்ளுடைச் சகோதரிகளும்வந்து இறங்கினர். பாக்தாத் வீதிகளில் மீண்டும் வீசத் துவங்கியது அன்பின் காற்று. தொடர்ந்த சில நாட்களில், பாக்தாத் நகரம் அன்னையின் இதயக் கூட்டுக்குள் அடைக்கலமானது. சொற்ப நாட்களிலேயே இராக்கின் ஆன்மா மீண்டும் உயிர்த்து எழுந்தது.

1985-ம் ஆண்டு உலகையே பரபரப்படைய வைத்த ஒரு வார்த்தை 'எய்ட்ஸ்'!

உயிர்க்கொல்லி நோயால் உலகமே பீதியில் உறைந் தது. அந்த நோயைக் காட்டிலும் மற்றவர்கள் காட்டிய வெறுப்பு உணர்ச்சியும் நிராகரிப்புமே நோயாளிகளை மிகவும் துன்புறுத்தின. இச்சூழலில், 1985 ஜூன் மாதத்தில் அமெரிக்காவுக்கு வந்திருந்த அன்னை, வாஷிங்டன் மருத்துவமனைக்கு விரைந்தார். மருத்து வர்களே அருகில் செல்லத் தயங்கியஅந்த நோயாளிகளிடம் அருகில் சென்று,கருணையுடன் அவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்தார். எய்ட்ஸ் நோயாளி களுக்கு என மன்ஹாட்டன் தீவில் ஒரு திறந்தவெளி மருத்துவமனை ஒன்றையும் உருவாக்கினார். நியூயார்க்கி லும் துவங்கினார்.

1962, ஜனவரி 26-ம் நாள் அன்னைக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்தது. இந்தியர் அல்லாத ஒருவருக்கு அந்த விருது கொடுக்கப்பட்டது அதுவே முதல் முறை. அதன் பிறகு, உலகின் மிகப் பெரிய மனிதர்களின் இதயங்கள் அன்னையைக் காண ஏங்கின. உலகின் மிகச் சிறந்த விருதுகள், பரிசுகள், பட்டங்கள் அனைத்தும் அன்னையைத் தேடி வந்தன. 1979-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் நாள் வழங்கப்பட்ட உலகின் சமாதானத்துக்கான மிக உயர்ந்த விருதான நோபல் பரிசு அவரது புகழுக்கு மகுடமாக விளங்கியது. அதற்கான விழாவில் கலந்துகொள்ள நார்வே சென்ற அன்னை, விழா நடக்கும் இடத்துக்குச் சாதாரண பேருந்திலேயே சென்று இறங்கினார். விலை குறைந்த நூல் சேலையையே அணிந்திருந்தார். 1980-ம் ஆண்டு அவருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான 'பாரத ரத்னா' வழங்கப்பட்டது.

இடையில், அன்னைக்குப் பார்வைக் குறைவு ஏற்பட்டு, காட்ராக்ட் ஆபரேஷன் நடத்தப்பட்டது. அன்றிலிருந்தே தனது பணிகளைக் குறைத்துக்கொண்ட அன்னை, ஒரு கட்டத்தில் தன் பொறுப்புகளைத் தகுதி யான இன்னொருவரிடம் ஒப்படைத்துவிட்டு, ஓய்வுஎடுத்துக்கொள்ள விரும்பினார். ஆனால், அறக் கட்டளையின் இதர சகோதரிகளுக்கு இதில் உடன்பாடு இல்லை. எனவே, வாக்கெடுப்பு நடத்தலாம் என அன்னை முடிவு செய்தார். அதன்படி நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஒரே ஒரு வாக்கைத் தவிர, மற்ற அனைத்துமே அன்னையைத் தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டியது. அன்னை ஓய்வெடுக்க ஆதரவு தெரிவித்த அந்த ஒரே ஒரு ஓட்டு அன்னையினுடையது தான்!

ஆனாலும், மார்ச் 13, 1997-ல் உடல்நிலை பாதிப்புக்கு உள்ளான அன்னை, தனக்கு அடுத்து அறக்கட்ட ளைகளை வழி நடத்த முற்றிலும் தகுதியான சகோதரி நிர்மலாவைத் தன் பதவிக்குப் பரிந்துரைத்து, நிரந்தரமாக ஓய்வெடுக்கப் போவதாக திட்டவட்டமாக வெளியுலகுக்கு அறிவித்தார். பி.பி.சி. தொலைக்காட்சி அன்னையைப் பற்றி ஓர் ஆவணப்படம் எடுத்தது, பல கோடி மக்களுக்கு அன்னையின் சேதிகளைக் கொண்டுசென்றது. அன்பையே தொழிலாகச் செய்த அந்த இதயம் 5 செப்டம்பர் 1997 அன்று இரவு பழுதடைந்த காரணத்தால், அன்னை நிரந்தரமாக இந்த உலக வாழ்க்கையிலிருந்து ஓய்வெடுக்க வேண்டி யதானது.

விருதுகளைப் போலவே, அன்னையை நோக்கி வந்த விமர்சனங்களுக்கும் பஞ்சம் இல்லை. அன்னை யின் மீது எழுந்த அனைத்து விமர்சனங்களிலும் அதிகமாகக் காணப்பட்டது 'அவர் கருணையைப்போர் வையாக அணிந்து, மத மாற்றம் செய்து வந்தார்' என்பதுதான். இவற்றுக்கு எல்லாம் பதில் சொல்கிறாற் போல் அன்னையே எழுதிய கடிதங்கள் இன்று புத்தகமாகத் தொகுக்கப்பட்டு வெளியாகியுள்ளன. அதில், தனக்குக் கடவுள் நம்பிக்கை மீதே கேள்விகள் உள்ளது என்றும், பல நேரங்களில் இந்தக் காரியத்தை எல்லாம் விட்டுவிட்டு, ஏன் நாமும் மற்றவர்கள் போல வாழக் கூடாது என நினைத்ததாகவும் கூறியிருக் கிறார்.

தான் செய்தது அனைத்தும் அதிசயங்கள் அல்ல. ஒரு சாதாரண மனிதன் சக மனிதர்களின் மீதுகொண்ட அன்பினால் விளைந்தது என்பதுதான் அன்னை நமக்குச் சொல்ல வரும் சேதி. ஆனால், திருச்சபையோ அன்னையை அவ்வளவு சுலபமாக விட்டுவிடவில்லை. அன்னையின் காரியங்களுக்கும் இறைவனுக்கும் தொடர்பு இருக்கிறது என நிரூபிக்கும் வகையில் அவருக்குப் புனிதர் பட்டத்தைத் தரத் தீர்மானித்து, அக்டோபர் 19, 2003-ல் வாடிகனில் போப் இரண்டாம் ஜான்பால் முன்னிலையில் புனிதர் பட்டத்தை வழங்கி மகிழ்ந்தது. அந்தப் பட்டம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. காரணம், விதிப்படி அடுத்து ஒரு அதிசயம் அவரால் நிகழ வேண்டும்.

அன்னையின் செயல்பாடுகளுக்குக் காரணம் மனிதமா... மதமா என்பதைக் காலம்தான் தீர்ப்பு எழுத வேண்டும்!

 
நாயகன் - அன்னை தெரசா
-
நாயகன் - அன்னை தெரசா
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு