Published:Updated:

இன்றைய அரசியல்... சமுதாய அழுக்குகளின் சங்கமம்!

இன்றைய அரசியல்... சமுதாய அழுக்குகளின் சங்கமம்!

பிரீமியம் ஸ்டோரி

24-06-09
இன்றைய அரசியல்... சமுதாய அழுக்குகளின் சங்கமம்!
இன்றைய அரசியல்... சமுதாய அழுக்குகளின் சங்கமம்!
இன்றைய அரசியல்... சமுதாய அழுக்குகளின் சங்கமம்!
 
இன்றைய அரசியல்... சமுதாய அழுக்குகளின் சங்கமம்!
இன்றைய அரசியல்... சமுதாய அழுக்குகளின் சங்கமம்!

மக்கெல்லாம் நன்கு பரிச்சயமான ஒரு பிரமுகரின் வாரிசு, அண்மையில் அனைத்துப் பல்கலைக்கழகப் பண்பாட்டு மன்றம் நடத்திய போட்டியில், 'இன்றைய அரசியலும் மாணவ சமுதாயமும்' என்ற தலைப்பில் எழுதி, முதல் பரிசு பெற்ற கட்டுரை இது. பண்பாட்டு மன்றத்தின் சிறப்பு மலரிலிருந்து தொகுக்கப்பட்ட கட்டுரையின் சில பகுதிகள் இங்கே...

வெண்ணிலாவைப் பிடித்து வட்டிலாக்கி, வைரச் சோறு படைக்கும் வாக்குறுதிகள்; வற்றிய காவிரியில் தேனாறும் பாலாறும் ஓடவிட்டு, இந்தப் பட்டினி சாம் ராஜ்யத்தை அதில் பவனி வர விடும் சத்தியங்கள்; எதிராளியை விமரிசிக்கப் புடம் போட்டு எடுத்த மூன்றாந்தர வாக்கியங்கள்; கட்டாரி, குத்து, வெட்டு, சோடா பாட்டில், சைக்கிள் செயின் வீச்சு என்று தொல் தமிழகத்தின் வீரத் துக்குச் சான்றுகள்; வென்று பதவிக்கு வந்த பின் நடந்து வந்த பாதையும், வாக்களித்த மக்களும் மறந்து, தன் வருமானம், சுவிஸ் பாங்க் அக்கவுன்ட் இவையே கருத்துக்களில் நிறைய! எதிர்த்துக் கேட்டால் மைக்குகளும் காலணி களும் பறந்து வரும். இதுதான் இன்றைய அரசியல் சமுதாய அழுக்குகளின் சங்கமம்!

'மாணவர்கள் அரசியலைப் பற் றித் தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால், அதில் ஈடுபடுதல் கூடாது' என்று அறிஞர் அண்ணா கூறினார்.

இருப்பினும், தேச விடுதலைப் போராட்டத்திலும், இந்தி எதிர்ப் புப் போராட்டத்திலும் மாணவர் களின் பங்கை யாரும் மறந்துவிட முடியாது.

ஆனால், அன்று லட்சியங்கள் இருந்தன. ஓர் இலக்கை நோக்கி மாணவ சமுதாயம் செலுத்தப்பட் டது. இன்று தலைவர்களும் கட்சி களுமே தமது கொள்கைகளைப் பதவிக்குப் பண்டமாற்றுச் செய்து விட்ட பிறகு, அவர்களின் வழி நடக்கும் இளைய தலைமுறையின் கதி?

மாணவர்கள் தங்கள் சக்தியை உணரவேண்டும். தங்கள் சக்தியை முன்னேற்றப் பாதை படைக்கப் பயன்படுத்த வேண்டும்.

சோவியத் நாட்டை 'ஜார்' அரசர்களின் ஏகாதிபத்தியப் பிடியிலிருந்து மீட்டு, உலகம் போற்றும் அளவில் ஓர் உன்னத நிலைக்கு உயர்த்திய லெனின், மாணவப் பருவத்தில் அரசியலுக்கு வந்தவர்தான்;

சோவியத் நாட்டை ஒரு வல்லரசாக, வளமிக்க பூமியாக மாற்றி, 'இரும்பு மனிதன்' என்று வர்ணிக்கப்பட்ட ஸ்டா லின், மாணவப் பருவத்தில் அரசியலில் ஈடுபட்டவர்தான்;

ஏன், தமிழகத்தில், தென்னகத்தின் காந்தி என்று போற்றப்பட்டு, காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக விளங்கிய பெருந்தலைவர் காமராஜரை, 1967-ம் ஆண்டு தேர்தலில் விருதுநகரில் வெற்றி கொண்டு வையகத்தை வியப்பில் ஆழ்த்திய விருதுநகர் சீனிவாசனும் ஒரு மாணவர் தலைவர்தான்.

எனவே, மாணவனே, நீ....

எரிமலையாய், சுடுதழலாய், எதிர்ப்புகளை நடுங்க வைக்கும் இடியலியாய், தவறுகளைத் தட்டிக்கேட்கும் புயலாய் ஆர்த்தெழுந்து வந்து ஒரு விடியலை உருவாக்கு!

யார் அந்த வாரிசு?

விடை:

இன்றைய அரசியல்... சமுதாய அழுக்குகளின் சங்கமம்!
 
இன்றைய அரசியல்... சமுதாய அழுக்குகளின் சங்கமம்!
-
இன்றைய அரசியல்... சமுதாய அழுக்குகளின் சங்கமம்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு