Published:Updated:

டீன் கொஸ்டீன்

டீன் கொஸ்டீன்


17-06-09
டீன் கொஸ்டீன்
டீன் கொஸ்டீன்
டீன் கொஸ்டீன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 
கல்யாணப் பரிசு!
டீன் கொஸ்டீன்

எம்.கிருத்திகா, மதுரை-4

''நான் கடந்த ஆண்டு 10--ம் வகுப்புத் தேர்வு எழுதி வெற்றி பெற்றேன். முதுகு வலிப் பிரச்னை காரணமாக பிளஸ் ஒன் படிப்பில் சேரவில்லை. இப்போது டுடோரியல் கல்லூரியில் சேர்ந்து பிளஸ் டூ எழுத நினைத்திருக்கிறேன். டுடோரியல் மூலம் எழுதுவதால் கல்லூரியில் மேற்படிப்புக்கு அட்மிஷன் கிடைப்பதில் பாதிப்பு வருமா?''

டீன் கொஸ்டீன்

ஜெ.தினேஷ், இயக்குநர், ஜெயராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி.

''கவலை வேண்டாம் கிருத்திகா. யாரும் உங்களை ஒதுக்க மாட்டார்கள். 10-ம் வகுப்பு முடித்து இரண்டு ஆண்டுகள் கழித்து, நீங்களும் பிரைவேட்டாக பிளஸ் டூ தேர்வு எழுத வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் கல்லூரியில் மேற்படிப்பு படிக்கத் தகுதியானவர்தான். டுடோரியலில் படித்தவர் என்பதற்காக கல்லூரிகள் சீட் கொடுப்பதில் பாரபட்சம் காட்டுவதில்லை. காட்டவும் கூடாது. கல்லூரியில் படிக்க நீங்கள் சமர்ப்பிக்கும் விண்ணப்பம் உரிய தகுதியோடு, தேவையான மதிப்பெண்களோடு இருக்கிறதா என்று மட்டும்தான் பார்ப்-பார்கள். மற்றபடி, பள்ளியில் படித்தீர்களா, தனியாகத் தேர்வு எழுதினீர்களா என்றெல்லாம் பார்ப்பது இல்லை. பள்ளியில் சேர்ந்து படித்திருந்தால் பொறியியல், மருத்துவம் படிப்புக்குச் செல்லும்போது, செய்முறை அனுபவமும் இருக்கும். தனித் தேர்வு எழுதினீர்கள் என்றால் அது இருக்காது. அவ்வளவுதான். மற்றபடி வேறு எந்த வித்தியாசமும் இல்லை!''

ஆர்.சுந்தர், சென்னை-14.

''நான் தினமும் லெமன் ஜூஸ், கூல் டிரிங்க் குடிப்பேன். 'அதிக சர்க்கரை உடலில் சேருவதால் எடை கூடும். கூடவே, சர்க்கரை நோயும் வரும்' என்று பயமுறுத்துகிறார்கள் என் நண்பர்கள். இது உண்மையா?''

டீன் கொஸ்டீன்

ஷைனி சந்திரன், நியூட்ரீஷியனிஸ்ட்.

''உடலில் சர்க்கரை அதிகம் சேரும்போது, உடல் எடை அதி-கரிக்கும் என்பது உண்மை. லெமன் ஜூஸ் மட்டுமல்ல, எந்த ஒரு ஜூஸாக இருந்தாலும் அதில் அதிக சர்க்கரை இருந்தால் உடல் எடை அதி-கரிக்கும். சர்க்-கரை-யில் அதிக அளவில் கலோரி உள்ளது. இவை எரிக்கப்-படாமல் இருந்-தால் கொழுப்பாக மாறிவிடும். சர்க்கரையை அதிகமாகச் சாப்பிடுவதால் நீரிழிவு நோய் வரும் என்று பயப்பட வேண்டாம். தொப்பை, உடலில் கொழுப்பு, மன அழுத்தம், அதிக எடை, பரம்பரை என நீரிழிவு நோய் வரப் பல காரணங்--கள் இருக்கின்றன. எனவே, சர்க்கரையை கன்ட்ரோலில் வைத்துக்கொள்வது நல்லது. லெமன் ஜூஸில் சர்க்கரைக்குப் பதில் உப்பு சேர்த்துக் குடிக்கலாம். ஏனெனில், இந்த வெயில் காலத்தில் உடம்பில் உள்ள கால்சியம், குளோரின், சோடியம் போன்ற உப்புக் கள் வியர்வையோடு வெளியேறிவிடும். இதனால் உடல் சோர்வடையும். இந்தச் சமயத்தில் உப்பு கலந்து குடித்தால் கொஞ்சம் புத்துணர்வு கிடைக்கும். ஆனால், பிளட் பிரஷர் உள்ளவர்கள் உப்பு எடுத்துக்கொள்ளக் கூடாது!''

ம.ஸ்வேதா, திருச்சிராப்பள்ளி.

''எனக்குச் சமீபத்தில் திருமணம் நடந்தது. 'திருமணப் பரிசாக எனக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கித் தருகிறேன்' என்கிறார் என் கணவர். சாதாரண ஸ்கூட்டருக்கும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும் உள்ள வித்தியாசம், பேட்டரியை ரீ-சார்ஜ் செய்வது, எப்படிப் பயன்படுத்துவது என்பதெல்லாம் சொல்ல முடியுமா?''

டீன் கொஸ்டீன்

கே.பி.சீனிவாசன், துணைத் தலைவர், பி.எஸ்.ஏ. மோட்டார்ஸ்.

''எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பேட்டரியில் இயங்குகின்றன. இந்த ஸ்கூட் டர் பலவிதங்களில் சௌகரியமானது. இந்த ஸ்கூட்டர்களுக்கு பெட்ரோல் போடத் தேவை இல்லை. புகையும் வராது. காலால் உதைத்து ஸ்டார்ட் செய்யவோ, கியர் போடவோ வேண்டியதில்லை. ஓட்டுவதும் மிக எளிது. நமது செல்போனைப் போல இந்த ஸ்கூட்டருக்குத் தினமும் சார்ஜ் ஏற்ற வேண்டும். சில எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் மற்றும் ரிஜிஸ்ட்ரேஷன்கூடத் தேவையில்லை. 26 ஆயிரம் முதல் 36 ஆயிரம் வரை பல்வேறு மாடல்களில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. பொதுவாக, ஒரு முறை முழுமையாக சார்ஜ் ஏற்றினால், 50 முதல் 80 கி.மீ. தூரம் வரை ஸ்கூட்டர் ஓடும். இதன் பேட்டரியை முழுமை-யாக சார்ஜ் ஏற்றி னால் ஒரு யூனிட்டுக்கும் குறைவாகவே மின்சா ரம் செலவாகும். இந்த வகை ஸ்கூட்டர்-களுக்குக் குறைவான பராமரிப்பே போதும். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்-களை வெளியே எடுத்துச் செல்லும்போது, பேட்டரியில் முழுமை-யான சார்ஜ் இருக்கிறதா என்பதை உறுதி செய்து-கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் எவ்வளவு பவர் இருக்கிறது என்பதைக் கணக்கிடுங்கள். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பல ஆண்டுகள் நீடித்து உழைக்க வேண்டும் என்றால், முறையான பராமரிப்பு மிக அவசியம்!''

கே.ராஜ்குமார், சிவகாசி.

''நான் எம்.பி.ஏ., மாணவன். என் பிரச்னையே ஆங்கிலத்தில் பேசுவதுதான். ஆங்கிலத்தில் பேசும்போது வாய் குழறுகிறது. ஆங்கிலத்தில் சரளமாகப் பேச என்ன மாதிரியான பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்?''

டீன் கொஸ்டீன்

வி.ராஜகோபாலன், தலைவர், வீட்டா.

''புதிதாக ஒரு மொழியில் சரளமாகப் பேச வேண்டும் என்-றால் பயிற்சி மிக மிக அவசியம். பயிற்சி இல்லாமல் எதையும் செய்ய முடியாது. ஆபிரகாம் லிங்கன் தினமும் புத்தகத்தை எடுத்துக் கத்திப் படிப்பார். பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் 'ஏன் இப்படிப் படிக்கிறீர்கள்?' என்று கேட்டபோது, 'நான் படிப்பது என் காதில் விழ வேண்-டாமா?' என்று பதில் சொன்னார். நீங்கள் படிப்பது, பேசுவது எல்லாமே உங்கள் காதுகளில் விழ வேண்டும். நியூஸ் பேப்பர், உரையாடல் வாக்கியங்கள், பாடப் புத்தகம் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொண்டு, கண்-ணாடி முன் நின்றுகொண்டு சத்தமாகப் படியுங்கள். கூச்ச-மாக இருந்தால் கதவு, ஜன்னல்களை அடைத்துவிட்டு உரக்கப் படியுங்கள். சத்தமாகப் பேசப் பேச, உச்சரிப்பு சரியான முறையில் வரும். உச்சரிப்பு நன்றாக வர இன்னொரு பயிற்சி முறை இருக்-கிறது. கண்ணாடி முன் நின்று பேசும்போது, அதை ரெக்கார்ட் செய்துகொள்ளுங்கள். பேசி முடித்த பின், அதைத் திரும்பக் கேட்டுப் பாருங்கள். அப்போதுதான் எந்த இடத்தில் தயங்குகிறீர்கள், எங்கு தப்பு செய்கிறீர்கள் என்பதைக் கண்டுபிடித்துச் சரிசெய்ய-லாம். தப்போ, சரியோ முதலில் உரக்கப் பேசப் பழகினால் எல்லாம் தானாகவே வந்துவிடும்!''

பெயர் வெளியிட விரும்பாத வாசகி, பெங்களூர்.

''எனக்குத் திருமணமாகிப் பத்து மாதங்கள் ஆகின்றன. இதுவரை கருத்தரிக்கவில்லை. டாக்டரிடம் செக்கப் சென்றபோது 'நார்மலாக இருக்கி-றீர்கள்' என்று ஹார்மோன் மாத்திரை மற்றும் டானிக் கொடுத்தார். கரு உருவாகாமல் இருப்பதற்கு என்ன காரணம்?''

டீன் கொஸ்டீன்

வாணி சுந்தரபாண்டியன் மகளிர் மற்றும் குழந்தையின்மைக்கான சிறப்பு மருத்துவர், கரூர்.

டீன் கொஸ்டீன்

''திருமணம் ஆன உடனே கர்ப்பம் தரிக்க வேண்-டும் என்று பெரும்பாலானவர்கள் விரும்பு-கிறார்கள். திருமணம் ஆன புதிதில் குறையில்லாத பெண்ணும், குறையில்லாத ஆணும் தினசரி உறவு வைத்துக்கொண்-டாலும் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு வெறும் 15 முதல் 20 சதவிகிதம் மட்டுமே இருக்கிறது. ஓராண்டுக்குப் பிறகு, கருத்தரிக்கும் வாய்ப்பு 85 சதவிகிதமாக உயரும். இரண்டாவது வருடத்தில் இந்த வாய்ப்பு 90-ல் இருந்து 92 சதவிகிதம் வரை உயரும். திரு-மணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் கர்ப்பம் தரிக்கவில்லை என்றால்-தான், தாய்மைப்பேறு அடைவதில் பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம். கரு உருவாகாமல் இருப்பதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. ஒன்று, முறையான பீரியட்ஸ் வராமல் இருப்பது. இரண்டாவது, உடல் எடை. ரெகுலர் பீரியட் இருக் கிறது என்றால் கருமுட்டை உருவாகிறது என்று அர்த்தம். பீரியட் ரெகுலராக இல்லாதபோது கருமுட்டை உருவாவதில் பிரச்னை வந்து கருத்தரிப்பு தள்ளிப் போகும். உடல் எடையைச் சரியாகப் பராமரிக்கவில்லை என்றாலும் பிரச்னை வரும். பெண்கள் தங்களின் உயரத்துக்கு ஏற்ற அளவில் சரியான எடையோடு இருக்க வேண்டும். கருமுட்டை உருவாகும் சமயம் உறவு வைத்துக்--கொண்டால் கருத்தரிக்கும் என்று பலர் நினைகிறார்கள். இது தவறான எண்ணம். குறைந்தது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை உறவு வைத்துக்கொண்டால், கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். ஆண்களுக்கு புகைபிடித்தல், மது போன்ற பழக்கம் இருந்தால் உயிரணு உற்பத்தி குறைவாக இருக்கும். எனவே, ஆண்கள் அவற்றைத் தவிர்ப்பது நல்லது!''

டீன் கொஸ்டீன்

 
டீன் கொஸ்டீன்
-
டீன் கொஸ்டீன்