Published:Updated:

வருங்காலத் தொழில்நுட்பம்

வருங்காலத் தொழில்நுட்பம்


17-06-09
வருங்காலத் தொழில்நுட்பம்
வருங்காலத் தொழில்நுட்பம்
வருங்காலத் தொழில்நுட்பம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 
அண்டன் பிரகாஷ்
வருங்காலத் தொழில்நுட்பம்

மெயின் மேட்டருக்கு முன், குட்டி டெக்னிக் பிக்னிக்.

தொட்டுப் பிடிக்க முடியாத உயரத்தில் கொடி கட்டிப் பறக்கும் கூகுளைக்கண்டு தொடை நடுங்கிக் கொண்டு இருக்கும் மைக்ரோசாஃப்ட், 'பொறுத்தது போதும்... பொங்கி எழலாம்!' என முடிவெடுத்து, கடந்த வாரம் 'பிங்' என்றது. new.bing.com. மைக்ரோ சாஃப்ட்டின் புதிய தேடல்தளம். 'பிங்' கூகுளுக்குக் குடைச்சல் கொடுக் குமா, புலி-பூனை சூடு கதையா என்பது தெரிய சில மாதங்கள் ஆகும்.

வருங்காலத் தொழில்நுட்பம்
வருங்காலத் தொழில்நுட்பம்

'இணையம்தான் ஆபரேட்டிங் சிஸ்டம்!' எனத் தொடர்ந்து முழங்கி வரும் கூகுள், வேவ் (wave) என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. தகவல் தொடர்பு சேவைகளான இ-மெயில், இன்ஸ்டன்ட் மெசேஜிங், எஸ்.எம்.எஸ். எனக் கரை மோதும் அலைகளாகத் தொடரும் சேவைகளைக் கூர்ந்து கவனித்தால் ஒன்று புரிகிறது. பாயின்ட் A-யில் இருந்து பாயின்ட் B-க்குத் தகவலைக் கொண்டு சேர்த்த தொழில் நுட்பங்களை ஒதுக்கிவிட்டு, சமநேரத்தில் (real time) அப்டேட் செய்ய முடிகிற தொழில் நுட்பங்களுக் குத்தான் இனி எதிர்காலம். ஓவர்நைட் சக்சஸ் ஆன டிவிட்டர் இதற்கு நல்ல உதாரணம். ஆனால், 'அந்தச் சின்னச் சின்ன அலைகளை அமுக்கிப் போடும் சுனாமியாக இருக்கும் எங்கள் வேவ்!' என்கிறது கூகுள். பார்க்கலாம். (வேவ் பற்றி அறிதல், புரிதல் உள்ளவர் களுக்கே இப்போது அவ்வசதி அளிக்கப்படுகிறது. 'அது என்னதான் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்' என்று விரும்பினால், http://wave.google.com ஐ சொடுக்குங்கள்.)

கூகுளுக்கும் மைக்ரோசாஃப்ட்டுக்கும் இடையே முக்கிய வித்தியாசம், பகிரங்கத்தன்மை (Openness) பற்றி இரு நிறுவனங்களுக்கும் இடையிலான கருத்து வேறு பாடுகள். 'இணையம் என்ற எல்லாருக்கும் பொதுவான ஆபரேட்டிங் சிஸ்டத்தில் வெவ்வேறு பயனளிக்கும் applications தயாரிக்கலாமே' என்பது கூகுளின் தாரக மந்திரம். மைக்ரோசாஃப்ட் இன்னமும் தனது விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தைக் கைவிட முடியாமல், அதைச் சார்ந்தே தனது applicationகளைத் தயாரிக்கிறது. இன்றைய தேதியில் இந்த இருவரும் போடும் குஸ்தியில் கூகுள் பல ரவுண்டுகள் முன்னணியில் இருப்பது தெளிவு!

சென்ற வார Sixth Sense தொழில்நுட்பம் பரவலான ஆர்வத்தை உருவாக்கி இருப்பது வாசகர் பின்னூட்டங்களில் இருந்து தெரிந்தது. அதன் முக்கியக் காரணம், அந்தத் தொழில்நுட்பத்தின் எளிமை. 'அட, இத்தனை ஈஸியா?' என நினைக்கவைக்கும் தொழில்நுட்பம்; வாங்கு வதற்குத் தோதான விலையிலும் இருந்துவிட்டால், அது இமாலய வெற்றி அடையும்.

இந்த எளிமையை இன்று அளிப்பது இணையம். குறிப்பாக, இணைய சேவைக் கூறுகள் (Web services).

வருங்காலத் தொழில்நுட்பம்

வலைத்தளங்கள் பின்னிப் பிணைந்துகிடக்கும் வனமாக மட்டுமே இணையம் இருந்த காலத்தில், வானரங்களாக மரம்விட்டு மரம் தாவி வலைத்தளங்களை மேய்ந்து திரிந்த இணையப் பயனீட்டாளர்களை, பரிணாம வளர்ச்சியடையச் செய்ததில் இணைய சேவைக் கூறுகளுக்கு முக்கிய இடம் உண்டு. வன இணையம், மர வலைத்தளம் உருவகத்தைப் பயன்படுத்தியே இதன் அடிப்படைகளைப் பார்த்துவிடலாம். மரங்களில் இருக்கும் பழங்களை வலைத்தளத் தகவல்களாகக் கருதலாம். பழங்களைப் பெற்றுக்கொள்ள மரத்தில் ஏறியே ஆக வேண்டும். இதற்குப் பதிலாக மரங்கள் அனைத்திலும் தபால் பெட்டி ஒன்றை இணைத்துத் தேவையான பழ ஆர்டர்களை அதில் குறிப்பிட, அதற்கேற்ப மரங்களும் பழங்களை ஹோல்சேலாகப் பழ மண்டிக்கு அனுப்பி வைத்தால் எப்படி இருக்கும்? ரோட்டோரத்தில் தள்ளு வண்டியில் பழம் விற்கும் சிறு வியாபாரியும் இதேபோல ஆர்டர்களை அனுப்பிப் பெற முடியும்.

தபால் பெட்டி, ஆர்டர்களின் உருவமைப்பு (format) போன்றவை உள்ளிட்ட புரோட்டோகால்தான் இணைய சேவைக் கூறுகள். சுருக்கமாகச் சொன்னால், கோரிக்கை (Request), அதற்கான பதில் (Response) இரண்டையும் கொண்ட எளிமையான புரோட்டோகால்.

ஒரு பிராக்டிக்கல் பயன்பாட்டைப் பார்க்கலாம்...

மெடிக்கல் ரெப் ஆக சென்னையில் இருக்கும் ராமநாதனுக்கு மாதம் முழுவதும் பல ஊர்களுக்குச் செல்ல வேண்டிய தேவை. வழக்கமாகப் போகும் ஊர் களில் தட்பவெப்பம் எப்படி இருக்கிறது என்பதை ஆட்டோமேடிக்காகத் தனது அலைபேசியில் பார்க்க விரும்பினால், அதை எளிதாக நடைமுறைப்படுத்த உதவுவது இணைய சேவைக் கூறுகளைப் பயன்படுத்திக் கட்டப்பட்ட RSS (Really Simple Syndication) சேவை. யாஹூ அளிக்கும் தட்பவெப்ப RSS சேவை, அதற்கு எப்படி கோரிக்கை அனுப்ப வேண்டும், அது என்ன formatல் பதில் அளிக்கும் போன்ற விவரங்கள் அறிய http://developer.yahoo.com/weather/ஐ சொடுக்குங்கள்.

நீங்கள் இந்த வரியைப் படிக்கும் இந்தக் கணத்தில் கோடிக்கணக்கான கோரிக்கைகளும் பதில்களும் இணையத்தில் குறுக்கும் நெடுக்குமாக அலைந்தபடி இருக்கின்றன. பல கோரிக்கைகளும் பதில்களும் வலைத்தளங்களுக்கு இடையில் நடைபெறுகின்றன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு, சேவை சார்ந்த வடிவமைப்பு (Service Oriented Architecture, சுருக்கமாக, SOA) என்ற இயலே உருவாக் கப்பட்டு ஐ.டி. துறை இளைஞர்கள் ஜல்லியடிக்கப் பயன்படுவதுடன், சாதாரண மனிதனின் கண்களுக்குப் புலப்படாத பின்னணியில் மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளது.

அமேசான் (new.amazon.com) நல்ல ஓர் உதாரணம். ஆன்லைன் புத்தகக் கடையாகத் தொடங்கப்பட்ட அமேசான், கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து கழிவறைக் காகிதம் முதல் கார் உதிரிபாகங்கள் வரை விற்கும் ஆன்லைன் சூப்பர் மார்க்கெட் ஆனது தெரிந்த விஷயம். ஆனால், இணைய சேவைக் கூறுகளை கமர்ஷியலாக விற்பதில் நம்பர் ஒன் எது என்பது இணையஇண்டஸ்ட்ரி யைக் கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கு மட்டுமே தெரியும். இதில் கிடைக்கும் லாப சதவிகிதம் (Profit Margin) சூப்பர் மார்க்கெட்டாக இருப்பதைவிட அதிகமாக இருப்பதால், இணைய சேவைக் கூறுகளை மட்டுமே விற்கும் நிறுவனமாக மாறுவது சாத்தியம். மேலும், விவரங்கள் அறிய http://aws.amazon.com/க்குச் செல்லுங்கள்.

'என்னிடம் கம்ப்யூட்டர் உள்ளது; இன்டர்நெட் கனெக்ஷனும் உள்ளது. இணையத்தைத் தேவைகளுக் காகப் பயன்படுத்தவும் தெரிந்துள்ளது. ஆனால், இதைப் பயன்படுத்தி பார்ட்-டைம் ஆகவாவது சம்பாதிக்க வழி இருக்கிறதா?' என ஆர்வமாகக் கேட்கும் பாளையங்கோட்டை தங்கராஜ் போன்றவர்களுக்கு இணைய சேவைக் கூறுகளில் கட்டப்பட்ட பல வாய்ப்புகள் உள்ளன. அவற்றில் முக்கியமானது... CrowdSourcing.

இந்தியாவுக்கு பில்லியன்களைக் கொண்டுவந்த அவுட்சோர்ஸிங்கின் அடுத்த பரிணாமமான அதைப் பற்றியும் பார்க்கலாம்!

 
வருங்காலத் தொழில்நுட்பம்
- log off
வருங்காலத் தொழில்நுட்பம்