Published:Updated:

ஆலயம் ஆயிரம்

ஆலயம் ஆயிரம்


17-06-09
கீதை அருளிய கீதாச்சாரியன் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி
ஆலயம் ஆயிரம்
ஆலயம் ஆயிரம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 
காஷ்யபன் ஆலயம் ஆயிரம். ஓவியங்கள்: ஜெ.பி. படம்: பொன்.காசிராஜன்
ஆலயம் ஆயிரம்
ஆலயம் ஆயிரம்

புகழ்பெற்ற கிருஷ்ணாவதாரத்தின்அந்தி மக் காலத்தில், துவாபர யுகத்தின் முடிவில்கௌர வருக்-கும் பாண்டவருக்கும் போர் மூண்டது.

துரியோதனனும் பார்த்தனும், கண்ணனின் உதவி வேண்டி வந்து நின்றனர்.

துரியோதனன் விரும்பிய வண்ணம் தனது படையை கௌரவருக்கு வழங்கினான் கண்ணன். அர்ஜுனன் ஆசைப்பட்டபடி தான் மட்டும் பாண்டவர் பக்கம் ஆயுதம் தாங்காமல் தேரோட்டி-யாக நின்றான்.

அமர்க்களத்தில் எதிரணியில் திரண்டு இருந்த அம்மான், அண்ணன் ஆகிய நெருங்கிய உறவினர் மீதே அம்பு தொடுத்து அழிப்பதா என்று அர்ஜுனன் மதிமயங்-கினான்.

அதர்மத்தை அழிக்க அவதரித்து இருந்த கண்ணன் அவ்-வமயத்-தில், அவனியில் மானிடர் வாழ வேண்டிய முறையைப் பார்த்த-னுக்கு உபதேசிக்கும் முகமாக, வேதங்-களுக்கு எல்லாம் வேதமான கீதையை அருளினான். தர்மத்தின் பக்கம் நின்று, அதற்கு வெற்றியையும் தேடித் தந்தான்.

மகாபாரதத்தை இயற்றிய வேதவியாசர் கிருஷ்ணனை தேரோட்டி கோலத்தில் தரிசிக்க விரும்பினார். ஆதலால் கிருஷ்ணன் தனது தேரோட்டி கோல உருவச் சிற்பம் ஒன்றினை அவருக்கு அருளினான்.

தான் மட்டும் அல்லாமல் தரணி மாந்தரும் அதே திருக் கோலத்தில் திருமாலைத் தரிசிக்க வேண்டும் என்ற அவா-வுடன் வியாசர் அந்தச் சிற்பத்தை ஆத்ரேய மகரிஷிக்கு அருளினார்.

அவர் அதனை பாரதத்தின் தென் திசையில், கிழக்குக்கடற் கரையில், கைரவிணி புஷ்கரிணிக் கரையில், பிர-திஷ்டை செய்து ஆலயம் அமைத்தார்.

சென்னை- திருவல்லிக்கேணியில் அமைந்திருக்கும் புகழ் பெற்ற பார்த்தசாரதி ஆலயம், 108 வைணவத் திருப்பதி-களில் ஒன்று. பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் ஆகியோரால் பாடல் பெற்ற தலம்.

ஆலயம் ஆயிரம்

சுமதி என்னும் பெயர்கொண்ட மன்னன், வேங்கடா-சலபதி யின் பக்தன். அவன் வேங்கடவனை கீதை உரைத்த கண்ணனாகத் தரிசிக்க ஆசைப்பட்டான். திருவல்லிக்கேணி-யில் அந்தத் திருக் கோலத்தில் காட்சி அளிப்பதாக திரு-மலையப்பன் அருளி னான்.

திருவாக்கின்படியே சுமதி மன்னனுக்கு வேங்கடவனாக நின்ற கோலத்தில் காட்சி தந்தான். அதனால் மூலவர் வேங்கட கிருஷ்ணன் என்ற திரு-நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அறுதியிட முடியாத காலம் தொட்டு இருந்து வந்த ஆலயத்தை எட்டாம் நூற்றாண்டில் பல்லவர்கள் பிரமாண்டமாகக் கட்டிப் பேணி- இருக்கிறார்கள். பிற்காலத்தில் விஜயநகர மற்றும் நாயக்கர் மன்னர்கள் பராமரித்து உள்ளார்கள்.

முதலில் கண்களை நிறைப்பது நீராழி மண்டபத்-துடன் கூடிய புஷ்கரிணி. அதற்கு மேற்கில் நாற்கால் மண்டபம், சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள் நிறைந்த முன்மண்டபம் என ஆலய வாசல் அம்சமாகக் காட்சியளிக்கிறது.

அடுத்திருக்கும் ஐந்து அடுக்கு ராஜ கோபுரத்தைக் கடந்தால், கல் தீபத் தூண், பலிபீடம், கொடிமரம் மற்றும் கருட சந்நிதி.

மகாமண்டபத்தில் ராமானுஜர், வேதாந்த தேசிகர், மணவாள மாமுனிகள் ஆகியோர் எழுந்தருளி -இருக்-கிறார்கள்.

கருவறை நோக்கிச் செல்லும் நடையில் ராமர், அரங்கன், வராகமூர்த்தி ஆகியோர் சந்நிதிகள்.

கருவறையில் வேங்கட கிருஷ்ணன் கிழக்கு முகமாக நின்ற திருக்கோலத்தில் நெடிய திரு-வுருவுடன் கம்பீர மாகத் தரிசனம் அளிக்-கிறார்.

பார்த்தனுக்குத் தேரோட்டிய சாரதியான கிருஷ்ணன் குருஷேத்திரக் களத்தில் எப்படிக் காட்சி தந்தாரோ, அதே கோலத்தில் இங்கும் எழுந் தருளி உள்ளார்.

வலது கரத்தில் சங்கு, திருமாலுக்கு உரிய சக்கர ஆயுதம் துரியோதனனுக்குக் கொடுத்த வாக்கின்படி இங்கு இல்லாது மறைந்துள்ளது. மாறாக, இடது கரம் 'என்னைச் சரணடை' என்று திருவடியைச் சுட்டிக்காட்டுகிறது.

கிருஷ்ணன் யாதவ குலத்தவன். க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடிப்பவன். அதனால், வேறு எந்தத் திருத்தலத்திலும் காண முடியாத மிடுக்கான மீசை திருமுகத்தை அலங்கரிக்கிறது. இடையில் நீண்ட கத்தி மற்றும் குறுவாள்.

பெருமானின் வலது புறம் ருக்மிணி தாயா ரும், கலப்பையுடன் பலராமனும் தரிசனம் நல்குகிறார்கள். இடது புறம் சகோதரர் சாத் யகி, மகன் பிரத்யும்னன், மற்றும் பேரன்அநிருத் தன் ஆகியோர் எழுந்தருளி உள்ளார்கள்.

பெருமான் முன் ஸ்ரீதேவி, பூதேவி சகிதம் உற்சவர் பார்த்த-சாரதி. பாரதப் போரில் பீஷ்மர் அர்ஜுனன் மேல் தொடுத்த கொடுங்கணைகள் அனைத்தை-யும் தாமே ஏற்றதால் முகம் தழும்புகள், வடுக்கள் பல தாங்கி உள்ளது.

இம்மைக்கும், மறுமைக்கும் வாழ வழிகாட்டி, வாழ்வாங்கு வாழ அருள்தரும் பகவத் கீதையே வடி-வான பெரு மானைத் தரிசித்து கண்கள் மகிழ்கின்றன.

மூலவர் சந்நிதிக்குத் தெற்கில் தனிக் கோயிலில் வேதவல்லித் தாயார் எழுந்தருளி உள்ளார்.

தாயார் சந்நிதிக்கு மேற்கில் கஜேந்திர வரதர் சந்நிதி உள்ளது. மூலவர் கருடன் மேல் ஆரோகணித்த வாறு காட்சி அருளு-கிறார்.

வரதர் சந்நிதிக்கு வடக்கில் தனிக் கொடி-மரம், பலி பீடம், கருடன் சந்நிதி இவற்றுடன் யோக நரசிம்மர் கோயில் கொண்-டுள்ளார்.

மூலவர் யோக நிலையில் தன் கைகளால் கால்களை அணைத்தவாறு, அமர்ந்த நிலை-யில் அருள் பாலிக் கிறார்.

உற்சவர் அழகியசிங்கர். இடது திருக்கரம் 'வா' என அழைக்க, வலது கரம் 'அஞ்சேல்' என அபயஹஸ்தமாகத் துலங்க, ஸ்ரீதேவி, பூதேவி சகிதமாக சேவை சாதிக்கிறார்.

அழகிய ஆண்டாளுக்கு ஒரு தனிச் சந்நிதி.

ஆலயம் ஆயிரம்

ஆலயத்தில் இரண்டு தனிக் கொடிமரங்கள் இருப்பதால், பார்த்தசாரதிக்கும் நரசிம்மருக்கும் இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெறு-கின்றன.

வெகுநாட்கள் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்த ராமானுஜரின் பெற்றோர் இங்கு வந்து வழிபட, பார்த்தசாரதியின் அருள் பெற்று, அவன் அம்சமாகவே வைணவ ஆச்சார்யரான ராமனுஜரைப் புத்திரராக அடைந்தார்கள் என்பது வரலாறு.

அல்லிக்கேணியில் ராமர், யோக நரசிம்மர், ரங்கநாதர், வரதர், மற்றும் வேங்கட- கிருஷ்ணர் என திருமாலின் ஐந்து மூர்த்தங்களையும் தரிசித்தால், அயோத்தி, அகோபிலம், ஸ்ரீரங்கம், காஞ்சி புரம் மற்றும் திருப்பதி ஆகிய தலங்கள் சென்ற பலனை அடையலாம்.

நாமும் அடைவோம்!

ஆலயம் ஆயிரம்
 
ஆலயம் ஆயிரம்
-தரிசிப்போம்...
ஆலயம் ஆயிரம்