Published:Updated:

கிரஹப்பிரவேசம்

கிரஹப்பிரவேசம்


17-06-09
கிரஹப்பிரவேசம்: உங்கள் எதிர்காலம் காக்கும் தொடர்-10
கிரஹப்பிரவேசம்
கிரஹப்பிரவேசம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 
உங்களுக்கு ஒரு சொந்த வீடு
கிரஹப்பிரவேசம்
பாரதி தம்பி படம்:கே.குணசீலன்

ரண்டு கை விரல்களையும் மடக்கி கட்டை விரல்களை மட்டும் ஒன்றோடு ஒன்று ஒட்டுமாறு நீட்டினால் வரும் தூரம்தான் 1 அடி. கணித அளவீட்டில் 12 இஞ்ச். நான்கு புறமும் 1 அடிகொண்ட ஒரு சதுரம்தான் ஒரு சதுர அடி. இந்த கை அகல நிலத்தின் பண மதிப்பு இன்று கன்னாபின்னாவென எகிறிவிட்டது. வேறு எந்த முதலீட்டைக் காட்டிலும் நிலத்தில் போடப்படும் பணம் பாதுகாப்பானதாகவும் லாபகரமானதாகவும் கருதப்படுகிறது. லாபம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், பாதுகாப்பு?

கிரஹப்பிரவேசம்

நீங்கள்பாட்டுக்கு விலை குறைச்சலா இருக்கே என நினைத்து, புறநகர்ப் பகுதியில் வீட்டு மனைகளை வாங்குவீர்கள். 10 வருடங்கள் கழித்து விற்றால் நல்ல விலைக்குப் போகும், அதை வைத்துப் பிள்ளைகளின் கல்லூரிப் படிப்பை முடித்துவிடலாம், ஓர் இடத்தை விற்று இன்னோர் இடத்தில் வீடு கட்டலாம் எனப் பல திட்டங்கள் மனதுக்குள் இருக்கும். அதற்கு ஏற்றாற்போல அந்த புறநகர்ப் பகுதியும் நல்ல வளர்ச்சி அடையத் தொடங்கும். இப்படி வளர்ந்து வரும் நகர்ப் பகுதியில் அடுத்தடுத்த கட்டடங்களுக்கு மத்தியில் காலியாகக்கிடக்கும் இடங்கள்தான் நிலமோசடி வில்லன்களின் கண்களை உறுத்துகின்றன. மளமளவெனப் போலிப் பத்திரங்களை உருவாக்கி, போகிறபோக்கில் பொங்கல் வைத்துவிட்டுப் போய்விடுகிறார்கள்.

இதிலேயே சில பேர் 'நரித்தனம் செஞ்சாலும் நாசூக்கா செய்யணும்' என வடிவேலு சொல்வதைப் போல, தாங்கள் குறிவைக்கும் இடத்துக்கு 'முறைப்படி' பத்திரப் பதிவுத் துறை அலுவலகம் போய், வில்லங்கம் போட்டுப் பார்ப்பார்கள். கடந்த 20 வருடங்களில் அந்த நிலம் யாரிடம் எல்லாம் கை மாறி இருக்கிறது, ஏதேனும் வில்லங்கம் இருக்கிறதா என்பதை எல்லாம் தெரிந்துகொள்வார்கள். பிறகு, போலிப் பத்திரம் மூலம் அந்த இடத்தை ஓர் அப்பாவி ஏமாளியின் தலையில் கட்டிவிடுவார்கள். பிற்பாடு ஏதேனும் வில்லங்கம் வந்தால், '20 வருஷத்துக்கு முன்னாடி முருகேசன்கிட்ட இருந்த இடத்தை பாண்டியன் வாங்கினார்; அவர்ட்டேர்ந்து பாஸ்கருக்குக் கைமாறி, முருகன்கிட்ட வந்துச்சு. கடை சியா இந்த இடத்தை ராஜேஷ்கிட்டேயிருந்து நான் வாங்கியிருக்கேன். ஆமாம், இதுல நீங்க யாரு?' என்று விஜயகாந்த் கணக்காகப் புள்ளிவிவரங்களை அள்ளிவிடுவார். அந்த இடத்தை நீங்கள் வாங்கியதைத் தவிர, மீதி அனைத்தையும் புட்டுப்புட்டு வைப்பதைப் பார்த்தால், 'நாமதான் ஏமாந்துட்டமோ' என உங்களுக்கே சந்தேகம் வரும். அந்த அளவுக்கு ஃபிராடுகள் பெருகிவிட்டார்கள்.

வேறு ஊரில் குடியிருந்துகொண்டு, சொந்த ஊரில் வீட்டு மனை வாங்கிப் போட்டு இருப்பவர்கள், அந்த இடத்துக்கு வேலி அமைத்து, உள்ளே சில மரக்கன்றுகளையாவது நட்டுவையுங்கள். அருகில் உள்ள வீட்டுக்காரர்கள் நம்பிக்கையானவர்கள் என்றால், அவர்களிடமும் ஒரு வார்த்தை சொல்லிவைப்பதோடு, மாதம் ஒருதடவையாவது வாங்கிய இடத்தை எட்டிப் பாருங்கள். சிலபேர் 10, 20 வருடங்கள் கழித்து வாங்கிய இடத்தைப் பார்க்கப் போய், 'நாம வாங்கினது எந்த இடம்?' என்று கோயில் பிராகாரம் சுற்று வது போல் சுற்றி வருவார்கள். அது தப்பு.

வீட்டுமனையில் இன்று பவர் மூலமாக இடத்தை வாங்குவதில்தான் பெரும்பான்மையான மோசடிகள் நடக்கின்றன. வாங்கும் நிலத்தை முறைப்படி பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்தால், நிலத்தின் மதிப்பில் 8% தொகையை டாக்குமென்ட் கட்டணமாகச் செலுத்த வேண்டும். நிலமதிப்பு 10 லட்ச ரூபாய் என்றால், 80 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும். 'ஆனை வாங்கியவர் அங்குசம்' வாங்காத கதையாகப் பல இடங்களில் இந்த 80 ஆயிரம் ரூபாயைக் குறைப்பதற்காக விற்பவரும் வாங்குபவரும் சேர்ந்துகொண்டு நிலத்தை பவர் எழுதிக்கொள்கிறார்கள். 'இந்த இடத்தை விற்பதற்கான உரிமையை நான் உங்களுக்கு வழங்குகிறேன்' என எழுதிக்கொடுக்கப்படும் இந்த பவர் பத்திரத்துக்கு 20 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரே போதுமானது. இதில் வில்லங்கம் எதில் வருமென்றால், நிலத்தை விற்பவர் அதே நிலத்தை வேறு சிலருக்கும் பவர் எழுதிக்கொடுத்து பணத்தை வாங்கியிருப்பார். அல்லது, 'மூலப் பத்திரம் தொலைஞ்சு போச்சுங்க. அதனால ஒண்ணும் பிரச்னை கிடையாது. அதான், நான் பவர் எழுதித் தர்றேனே... இந்த பவர் பத்திரமே போதும்' என்று 'ரொம்ப நல்லவராக' மாறிப் பேசுவார்.

10 வருடங்கள் கழித்து அந்த இடத்தின் மதிப்பு உயர்ந்து நிற்கும்போது, தன்னிடம் இருக்கும் மூலப் பத்திரத்தை வைத்து வில்லங்கம் கிளப்புவார். அது சட்டப்பூர்வமாகச் செல்லுமா, கோர்ட்டுக்குப் போனால் யார் பக்கம் தீர்ப்பாகும் என்பது எல்லாம் அப்புறம். ஆனால், பல வருடச் சேமிப்பைக் கொட்டி இடத்தை வாங்கியவர்கள்தான் வருடக்கணக்கில் கோர்ட்டுக்கு அலைந்து நிம்மதியை இழக்க வேண்டிவரும். இதைத் தவிர்க்க, சொத்து வாங்கும்போது சட்டப்படி அதைப் பத்திரப் பதிவு செய்துகொள்ளவேண்டும். இந்த பவர் எழுதி வாங்கும் பஞ்சாயத்தில் சிக்கிக்கொள்ள வேண்டாம்.

பல ஊர்களின் புறநகர்ப் பகுதிகளில் 'குறிஞ்சி நகர், அன்பு நகர்' என போர்டு வைத்து லேஅவுட் போட்டிருப்பார்கள். அடைப்புக்குறிக்குள் 'பஞ்சாயத்தின் அனுமதி பெறப்பட்டது' என்று எழுதி, அந்த அனுமதி எண்ணும்கூட எழுதப்பட்டு இருக்கும். சட்டம் அறியாத சாதாரண மக்கள் இதை உண்மை என்று நம்பி வாங்கவும் செய்கின்றனர். உண்மையில் ஒரு நிலத்தை விற்பதற்குப் பஞ்சாயத்தால் அனுமதி தர முடியாது. அதற்கான எந்த விதச் சட்ட அதிகாரமும் பஞ்சாயத்துக்குக் கிடையாது. 'தன் நிர்வாக எல்லைக்கு உட்பட்ட இந்த நிலத்தை விற்பதற்கு பஞ்சாயத்துக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை' எனத் தடையில்லாச் சான்றிதழ் வழங்குவதுதான் ஒரு பஞ்சாயத்தின் பணி. அந்தத் தடையில்லாச் சான்றிதழைத்தான் 'நிலத்தை விற்பதற்கான அனுமதி' எனப் போலியாக விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றுகிறார்கள்.

உண்மையில், ஒரு நிலத்தை விற்பதற்கு ஒவ்வோர் ஊரிலும் இயங்கும் உள்ளூர்த் திட்டக் குழுமத் திடம்தான் (Local planning authority) அனுமதி பெற வேண்டும். சென்னையில் எப்படி சி.எம்.டி.ஏவோ (Chennai Metropolital Development Authority) அது போலத்தான் இதர ஊர்களுக்கு லிறிகி.

வீட்டு மனையை யாரிடம் இருந்து வாங்குகிறீர்களோ, அவரிடம் இந்த LPA சான்றிதழைக் கேட்டுப் பெற வேண்டும். ஒருவேளை வீட்டுமனையை வைத்து வங்கிக் கடன் வாங்குவதாக இருந்தால், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இந்த LPA நம்பர் இருந்தால்தான் கடன் தருவார்கள்.

இதுவே மலைப்பகுதி என்றால், அங்கு இன்னும் கூடுதல் கவனம் தேவை. மலைப் பகுதியில் போடப்படும் லேஅவுட்டுக்கு Hill area conservation authority, AAA committee என்னும் இரண்டு அமைப்புகளிடமும் அனுமதி பெற்றிருக்க வேண்டும். மலைப் பகுதியில் இடம் வாங்கும் முன்பு இந்தச் சான்றிதழ் வாங்கப்பட்டு இருக்கிறதா என்பதைப் பரிசோதித்துக்கொள்வது நம் கடமை. ஏனென்றால், அது நம் பணம். 'விற்பவரைவிட வாங்குபவரே விழிப்போடு இருக்கவேண்டும்' என்பதே இன்றைய நுகர்வுக் கலாசாரத்தின் அடிப்படை.

அடுக்ககங்களில் இரண்டாவது, மூன்றாவது தளங்களில் ஃபிளாட் வாங்கும் முன்பு, எந்த அளவுக் குக் கவனமாக இருக்க வேண்டும்?

 
கிரஹப்பிரவேசம்
- இன்னும் பிரவேசிக்கலாம்...
கிரஹப்பிரவேசம்