Published:Updated:

டீன் கொஸ்டீன் - பிராய்லர் கோழி சாப்பிடலாமா பிரசவத் தோழி!

டீன் கொஸ்டீன் - பிராய்லர் கோழி சாப்பிடலாமா பிரசவத் தோழி!

டீன் கொஸ்டீன்
டீன் கொஸ்டீன் - பிராய்லர் கோழி சாப்பிடலாமா பிரசவத் தோழி!
டீன் கொஸ்டீன் - பிராய்லர் கோழி சாப்பிடலாமா பிரசவத் தோழி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
டீன் கொஸ்டீன் - பிராய்லர் கோழி சாப்பிடலாமா பிரசவத் தோழி!
பிராய்லர் கோழி சாப்பிடலாமா பிரசவத் தோழி!
டீன் கொஸ்டீன் - பிராய்லர் கோழி சாப்பிடலாமா பிரசவத் தோழி!
டீன் கொஸ்டீன் - பிராய்லர் கோழி சாப்பிடலாமா பிரசவத் தோழி!

ளைஞர்களே... உங்கள் சந்தேகம், குழப்பம், மயக்கம் எதுவாக இருந்தாலும், 'டீன் கொஸ்டீன்' பகுதிக்கு அஞ்சலில் எழுதி அனுப்பலாம். அல்லது 044-42890004 என்ற தொலைபேசி எண்ணிலும் உங்கள் குரலிலேயே பதிவு செய்யலாம். நாங்கள் உதவக் காத்திருக்கிறோம்!

டீன் கொஸ்டீன் - பிராய்லர் கோழி சாப்பிடலாமா பிரசவத் தோழி!

எஸ்.சௌமியா, தஞ்சாவூர்.

''நான் பி.காம்., படித்துக்கொண்டு இருக்கிறேன். இரவு நீண்ட நேரம் கண் விழிப்பது இல்லை. இருந்தும் கண்ணுக்குக் கீழே கருவளையம் ஏற்பட்டுள்ளது. கடலை மாவு தடவினால் சரியாகிவிடும் என்றார்கள். ஆனால், மறையவில்லை. தற்போது கண்ணுக்குக் கீழே சிறிதாகக் குழியும் ஏற்பட்டுள்ளது. கருவளையம் எதனால் ஏற்படுகிறது? இதைப் போக்க என்ன செய்ய வேண்டும்?''

டீன் கொஸ்டீன் - பிராய்லர் கோழி சாப்பிடலாமா பிரசவத் தோழி!

சவுந்தரி,
கண் மருத்துவர், சென்னை.

''பொதுவாக, நீண்ட நேரம் கண் விழித்திருப்பவர்களுக்குக் கண்ணைச் சுற்றி கருவளையம் மற்றும் குழி விழுவது வாடிக்கை. சத்துக் குறைபாடு காரணமாகவும் கறுப்பு வட்டம் போல் வரும். இந்த மாதிரி இருப்பவர்கள் இரவில் நன்றாகத் தூங்க வேண்டும். குறைந்தபட்சம் 6 முதல் 7 மணி நேரமாவது நிம்மதியாகத் தூங்க வேண்டும். இரவில் அதிகம் விழித்திருப்பது இல்லை என்கிறீர்கள். எனவே, உங்களுக்குச் சத்துக் குறைபாடு இருக்கலாம். சத்துக்கள் நிறைந்த பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், பழங்களை அதிக அளவில் சாப்பிட வேண்டும். இரவில் நன்றாகத் தூங்குங்கள். இதைச் செய்தாலே போதும். தானாகவே கருவளையமும் குழியும் சரியாகிவிடும்!''


கே.பால்ராஜ், தூத்துக்குடி

''பிராய்லர் கோழி மற்றும் கோழி முட்டை சாப்பிட்டால் கருத்தரிப்பதில் பெண்களுக்குப் பிரச்னை வரும் என்று நண்பன் கூறுகிறான். இது உண்மையா?''

டீன் கொஸ்டீன் - பிராய்லர் கோழி சாப்பிடலாமா பிரசவத் தோழி!

காமராஜ்
கருவாக்கவியல் மருத்துவர், சென்னை.

''பிராய்லர் கோழி மற்றும் கோழி முட்டை சாப்பிடுவதால் கருத்தரிப்பதில் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது. பயப்பட வேண்டாம். பிராய்லர் கோழியில் எவ்விதக் கெடுதல் விளைவிக்கும் ஹார்மோன்களும் இல்லை. அதிக அளவில் புரதமும் கொழுப்புச் சத்தும்தான் அதில் உள்ளன. பொதுவாக, உணவுப் பழக்கவழக்கத்தில் இப்படி நிறையக் கருத்துக்கள், குழப்பங்கள் உள்ளன. ஆனால், இவை எதுவும் உண்மை இல்லை. குண்டாக இருந்தால் மட்டுமே கருத்தரிப்பதில் பிரச்னை ஏற்படும். குண்டாக இருக்கும்

ஆண்களுக்குக் கொழுப்பு அதிகமாவதால் அது தோலுக்கு அடியில் aromatization எனும் ஒரு செயல்பாட்டை மேற்கொண்டு, பெண்களுக்கு உரிய ஹார்மோனைச் சுரக்கிறது. ஆண்களுக்கான ஹார்மோன் சுரந்தாலும், கூடவே பெண் ஹார்மோன் சுரப்பதால் இவர்களுக்குப் பெண் தன்மை, சருமம் மென்மை அடைவது போன்றவை ஏற்பட்டு, கரு உருவாக்குவதில் பிரச்னை ஏற்படுகிறது. குண்டாக இருக்கும் பெண்களுக்கு சினைமுட்டைப் பையில் நீர்க்கட்டி ஏற்பட்டு, கருமுட்டை உருவாவதைத் தடுக்கிறது. மேலும், ஹார்மோன்கோளாறு களையும் உண்டாக்குகிறது. பாதாம் சாப்பிட்டால் நல்லது என்பார்கள். இதிலும் உண்மை இல்லை!''


ராஜ்குமார், திருச்சி மத்திய சிறை.

''நான் சிறுநீரக் கோளாறால் அவதிப்பட்டு வருகிறேன். உப்பு சம்பந்தமான எந்த உணவையும் சாப்பிட முடியவில்லை. இதற்காக ஆங்கில மருத்துவர் அறிவுரைப்படி மாத்திரை எடுத்துக்கொண்டேன். பின்னர், ஹோமியோபதி மருந்து மாத்திரை சாப்பிட்டேன். தொடர்ந்து கிடைக்காததால் மீண்டும் ஆங்கில மருந்து மாத்திரை சாப்பிட ஆரம்பித்தேன். இதனால் வலி அதிகமாக இருக்கிறது. ஹோமியோபதி மருந்து பவர் குறைய மாற்று ஏற்பாடு செய்வது பற்றி ஆலோசனை கூறுங்கள்?''

டீன் கொஸ்டீன் - பிராய்லர் கோழி சாப்பிடலாமா பிரசவத் தோழி!

ஏ.தமிழ்ச்செல்வி
சிறுநீரக மருத்துவர், சென்னை.

''சிறுநீரகத்தில் எந்த மாதிரியான பிரச்னை என்று தெரியாமல் ஆலோசனை கூற இயலாது. உப்பு போட்டுச் சாப்பிட முடியவில்லை என்கிறீர்கள். ஒருவேளை அது சோடியம் அளவு பிரச்னையாக இருக்கலாம். பவர்ஃபுல் மருந்து என்றால், அது வயிற்றை, கல்லீரலை, சிறுநீரகத்தைப் பாதிக்கும். நீங்கள் எந்த மாதிரியான மருந்து மாத்திரை சாப்பிட்டீர்கள் என்பதும் தெரியவில்லை. எனவே, முதலில் உங்கள் சிறையில் உள்ள மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, நெஃப்ராலஜி மருத்துவரை அணுகி, ஆலோசனையும் சிகிச்சையும் பெறுவதுதான் நல்லது!''


ஆர்.ராஜசேகர், சென்னை-91.

''எனக்கு 18 வயது. என் உதடுகள் பெரிதாக உள்ளன. அடிக்கடி நாக்கால் தடவி ஈரப்படுத்தாவிட்டால் அவை வறண்டு விகாரமாகக் காட்சியளிக்கின்றன. உதட்டின் அளவைக் குறைக்க முடியுமா... முடியும் என்றால் எவ்வளவு செலவாகும்?''

டீன் கொஸ்டீன் - பிராய்லர் கோழி சாப்பிடலாமா பிரசவத் தோழி!

பிரியா,
தோல் நோய் மருத்துவர், சென்னை.

''பொதுவாக, உதடுகள் ஏதாவது நியூட்ரிஷன் குறைவு, அலர்ஜி, சருமப் பிரச்னை, சூரிய ஒளி, சில மாத்திரைகள் சாப்பிட்டதால், பருவ நிலை மாற்றம் உண்டாக்கும் பிரச்னைகளால் உலர்ந்து வெடிப்பு ஏற்பட்டு, அதன்மூலம் பெரிதாகக் காட்சி தரும். இதை cheilitis என்போம். எனவே, முதலில் சருமப் பராமரிப்பு மருத்துவரை அணுகி, என்ன பிரச்னை என்று அறிந்து, அதற்கேற்ப சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள். அதன் மூலம் உதட்டின் வீக்கம் கட்டுப்படுத்தப்படும். அதன்பிறகும் உதடு பெரிதாகவே இருந்தால், பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்வதைப் பற்றி யோசிக்கலாம். பிளாஸ்டிக் சர்ஜன்களை அணுகினால் அவர்கள் லிப் ரிடெக்ஷன் சர்ஜரி செய்வார்கள். அதன் மூலம் உதட்டின் அளவு குறைக்கப்படும். ஆனால், இது கொஞ்சம் காஸ்ட்லி. மருத்துவமனை மற்றும் மருத்துவரைப் பொறுத்து செலவு வித்தியாசப்படும். முதலில் ஒரு சருமப் பராமரிப்பு நிபுணரிடம் ஆலோசனை பெறுங்கள்!''

டீன் கொஸ்டீன் - பிராய்லர் கோழி சாப்பிடலாமா பிரசவத் தோழி!
ப.கல்யாணி, கோயம்புத்தூர்-9.

''என் தந்தையின் வேலை நிமித்தமாக சில வருடங்கள் வெளியூரில் இருந்துவிட்டு, தற்போதுதான் சொந்த ஊருக்கு வந்தோம். அங்கு எங்கள் பூர்வீக வீடு பழுதடைந்து இருப்பதால் அங்கு தங்க வேண்டாம் என்று அப்பாவின் சகோதரர்கள் எங்களுக்குத் தடை போடுகிறார்கள். அந்த வீட்டின் தாய்ப் பத்திர நகலையும் தர மறுக்கிறார்கள். வீட்டைச் சட்டப்படி பிரித்துக்கொள்ளலாம் எனில், எங்கள் பாகத்தை எப்படிக் கேட்பது? எங்கள் பாகத்தைத் தேர்வு செய்து அதற்கு மட்டும் பட்டா வாங்கி, அங்கே வீடு கட்ட முடியுமா?''

டீன் கொஸ்டீன் - பிராய்லர் கோழி சாப்பிடலாமா பிரசவத் தோழி!

பி.அமர்நாத்
வழக்கறிஞர்.

''உங்கள் அப்பாவின் சகோதரர்கள் உங்களுக்குத் தடை போடுகிறார்கள் என்றால், பாகப் பிரிவினை கோரி வழக்கு தாக்கல் செய்ய வேண்டியது உங்கள் உரிமை. ஒரு வழக்கறிஞரை அணுகி, அந்த சொத்தின் பாகத்தைப் பெற உரிமை கொண்ட ஒவ்வொருவருக்கும் பிரிவினை கேட்டும், சொத்தில் உங்களுக்கு உரிய அளவைக் குறிப்பிட்டும் நோட்டீஸ் அனுப்புங்கள். தற்போது அந்த பூர்வீகச் சொத்தை அனுபவித்து வருபவர்கள், பூர்வீகச் சொத்து யார் பெயரில் உள்ளதோ அவர்களுக்கு மட்டும் நோட்டீஸ் வழங்கினால் போதாது. உரிமை உள்ள ஒவ்வொருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இது மிகவும் முக்கியம். அதன் பிறகும் அவர்கள் உங்கள் பாகத்தினைப் பிரித்து வழங்க மறுத்தால், உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி, பாகப் பிரிவினை கோரி வழக்கு தொடருங்கள். நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகுதான் உங்கள் பகுதி இறுதி செய்யப்படும். பின்னர்தான் பட்டா மாற்றம், வீடு கட்டுதல் போன்றவற்றை மேற்கொள்ள முடியும்!''

 
டீன் கொஸ்டீன் - பிராய்லர் கோழி சாப்பிடலாமா பிரசவத் தோழி!
டீன் கொஸ்டீன் - பிராய்லர் கோழி சாப்பிடலாமா பிரசவத் தோழி!