Published:Updated:

என்னைச் செதுக்கிய 7 நாட்கள் இந்த வாரம்: சத்யராஜ்

என்னைச் செதுக்கிய 7 நாட்கள் இந்த வாரம்: சத்யராஜ்

கி.கார்த்திகேயன், படங்கள்: கே.ராஜசேகரன்
என்னைச் செதுக்கிய 7 நாட்கள் இந்த வாரம்: சத்யராஜ்
என்னைச் செதுக்கிய 7 நாட்கள் இந்த வாரம்: சத்யராஜ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இந்த வாரம்: சத்யராஜ்
என்னைச் செதுக்கிய 7 நாட்கள் இந்த வாரம்: சத்யராஜ்
என்னைச் செதுக்கிய 7 நாட்கள்!
என்னைச் செதுக்கிய 7 நாட்கள் இந்த வாரம்: சத்யராஜ்
என்னைச் செதுக்கிய 7 நாட்கள் இந்த வாரம்: சத்யராஜ்

'தகடு தகடு' வில்லன் முதல் தகதகக்கும் பட்டு விளம்பரம் வரை தலைமுறைகள் தாண்டி பரபரப்பு பம்பரம் சுழற்றிக்கொண்டே இருப்பது சத்யராஜின் சாதனை. ''பொண்ணு திவ்யா நமக்காக ஃபாரின்ல இருந்து வாங்கிட்டு வந்த கண்ணாடி, தொப்பி. போட்டோக்கு நல்லா இருக்கும்ல!'' என்று ஆறரை அடிக் குழந்தையாகக் குதூகலமாக வரவேற்கிறார் ராங்கி ராஜா.

001 '' 'என்னடா இவன் எம்.ஜி.ஆர். மேல இவ்வளவு வெறியா இருக்கானே... இவன் குடும்பமே திராவிடப் பாரம்பரியமா இருக்குமோ?'ன்னுதான் என்னைப் பத்தி எல்லாரும் நினைப்பாங்க. ஆனா, எங்க குடும்பமே உஜாலா போட்டுத் துவைச்ச பக்கா கதர் காங்கிரஸ் குடும்பம். பெரியப்பா காங்கிரஸ் வேட்பாளரா காங்கேயத்துல நின்னவரு. நான் அஞ்சாவது படிச்சுட்டு இருந்தப்ப, காங்கிரஸ் கொடி கட்டின சைக்கிள்லதான் குரங்கு பெடல் போட்டுட்டு இருப்பேன்.

என் அண்ணன் மாதம்பட்டி சிவக்குமார் எம்.ஜி.ஆர். ரசிகன்னு ஊருக்குள்ள அலப்பறையா இருப்பாப்ல. அவர்தான், 'டேய்! இதுவாடா நம்ம கொடி? நாம் எல்லாம் எம்.ஜி.ஆர். ஆளுங்கடா!'ன்னு சொல்லி தி.மு.க. கொடியை என் சைக்கிள்ல கட்டிவிடுவாரு. எனக்கும் எப்படியாவது ஒரு எம்.ஜி.ஆர். படம் பார்த்துப்புடணும்னு மனசுக்குள்ள ஆசை. சினிமாவுக்குலாம் போறது கொலைக் குத்தமா இருந்த காலம் அது. அப்ப ஒரு வெள்ளிக்கிழமை 'பரிசு', 'வேட்டைக்காரன்'னு ரெண்டு எம்.ஜி.ஆர். படங்கள் ரிலீஸ் ஆவுது. 'அண்ணே! எந்தப் படத்துக்கு அழைச்சுட்டுப் போற?'ன்னு அவர்கிட்டே கேட்டேன். 'ரெண்டு கண்ணுல எந்தக் கண்ணு நல்ல கண்ணுன்னு கேட்டா நான் என்ன சொல்லுவேன்?'னு அவர் ஃபீலிங்ஸைப் போடுறாரு. துப்பாக்கி வெச்சுட்டு இருக்காரேன்னு 'வேட்டைக்காரன்' பாக்கப் போறோம். தலைவரு நிக்கிறதுக்கு, நடக்கறதுக்கு, பாடுறதுக்கு, ஆடுறதுக்குலாம் தியேட்டருல சாமியாடுறாங்க. எனக்குள்ளயும் ஏதோ ஒரு கிறுகிறு. அன்னிக்கு ஆரம்பிச்சது தலைவர் பாசமும் நேசமும். இப்பம் வரைக்கும் நம்மளைச் செலுத்திட்டே இருக்கு!''

002 ''நாம பி.எஸ்ஸி., பாட்டனி செகண்ட் அட்டெம்ப்ட். அப்ப அந்தப் படிப்புக்கு 250 ரூபா சம்பளத்துலதான் வேலை கிடைக்கும். நாம மாடி வீட்டு ஏழை கேட்டகிரி. அதனால ஏதாவது வெறுங் கையில மொழம் போட்டு கோல் போட்டுரலாம்னு சுத்திட்டுத் திரிஞ்ச காலம். சின்ன வயசுல இருந்தே மிமிக்ரி நல்லா வரும். 'காதலிக்க நேரமில்லை' படத்துல வர்ற எல்லா கேரக்டர்கள் மாதிரியும் முழு நீள நகைச்சுவைச் சித்திரமா மிமிக்ரி பண்ணிட்டு இருப்பேன். மெட்ராசுக்கு டிரெயின்ல வந்து போறப்ப பொழுது போகாம நான் மிமிக்ரி பண்ணதைப் பார்த்த மாதம்பட்டி சிவக்குமார் அண்ணன் படக்னு, 'நீ ஏன் நடிக்கக் கூடாது?'ன்னு கேட்டார். என்ன பண்றதுன்னு தெரியாமச் சுத்திட்டு இருந்தவனுக்கு அது ஒரு பளிச் பல்பு. 'ஏனுங்ணா... நமக்குல்லாம் நடிப்பு வருமாங்ணா..? மெட்ராஸ் போனாக்கா, பெரிய ஆளாயி இண்டஸ்ட்ரியை ஒரு கலக்கு கலக்கிப்புடலாமாங்ணா?'ன்னு விடாமக் கேட்க ஆரம்பிச்சுட்டேன்.

'டேய்! 30 லட்சம் பேருக்குச் சோறு போடுற மெட்ராஸ் உன் ஒருத்தனை வேண்டாம்னு சொல்லிடுமா? தைரியமாக் கிளம்புடா!'ன்னு சொல்றார். அந்த ஒரு வார்த்தைதான் என்னை சென்னைக்கு இழுத்துட்டு வந்துச்சு. அப்பவும் ஊருக்குக் கிளம்பத் துணிமணி எடுத்துவைக்குறப்ப, என் டிரைவிங் லைசென்ஸைத்தான் முதல் அயிட்டமா எடுத்து வெச்சேன். சினிமான்னு நம்பிக் கிளம்புறோம். அது இனிமா குடுத்தாலும் டிரைவர் வேலை செஞ்சாவது பொழைச்சுக் கலாம்னு நம்பிக்கை கொடுத்த வார்த்தைகள் அது!''

003 ''நடிக்க ஆரம்பிச்சு ஆறு வருஷங்களுக்கு 'யெஸ் பாஸ்' மட்டும் சொல்ற கேரக்டர்தான் நமக்குக் கிடைச்சுச்சு. 'என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்குறீங்களே'ன்னு நான் நிறையப் படங்களில் சொல்லியிருக்கேன். ஆனா, உண்மையிலேயே என்னாலயே என் கேரக்டரைப் புரிஞ்சுக்க முடியாது. அடுத்தவங்க எடுத்துச் சொன்னாத்தான் புரியும். அப்ப ஆர்.சுந்தர்ராஜன் அண்ணன் நல்ல பழக்கமானாரு. அவரோட கதையைப்பத்தி பேசிட்டு இருக்குறப்ப 'இதை இப்படிப் பண்ணா நல்லா இருக்குமே... அதை அப்படிப் பண்ணா நல்லா இருக்குமே'ன்னு நாம கருத்துச் சொல்லுவோம். அப்ப ஒரு நாள் அவர்கூட 'தில்லானா மோகனாம்பாள்' படம் பார்த்துட்டு இருக்கேன். ஸ்கிரீன்ல சிவாஜி சார், நாகேஷ் சார், பாலையா சார்னு எல்லாரும் பின்னிப் பெடலெடுத்துட்டு இருக்காங்க. என்னை ஒரு பார்வை பார்த்தவரு, 'இதுக்கு மேலயும் நீ நடிப்பேன்னு அடம்பிடிச்சேன்னா அது எம்புட்டு கொழுப்பு? பேசாம என்கூட டிஸ்கஷனுக்கு வந்துட்டுப் போப்பா!'ன்னுட்டாரு. 'சரி, நமக்கும் நடிப்பு வராது. யோசிக்காம டைரக்டரா ஷிஃப்ட் ஆயிடுவோம்'னு அவர் கூடவே திரிஞ்சேன். ஒரு க்ரைம் த்ரில்லர் கதை ரெடி பண்ணிட்டு, மணிவண்ணன்கிட்டே போனேன். அப்பதான் அவர் 'நூறாவது நாள்' படம் எடுத்துட்டு இருந்தார்.

நான் கதையைச் சொல்லி முடிக்கவும், 'இந்தக் கதையை நம்மகிட்டே குடுத்துருங்களேன்'னாரு மணிவண்ணன். 'இல்லைங்க... ஊருல இருந்து கரும்பு, மஞ்சள், பருத்தினு எதையாவது வித்துட்டு மஞ்சப் பை நிறைய காசோடு நிறையப் பேர் இங்கே வர்றாங்க. டமால் டுமீல், டம்மு டும்முன்னு அவங்ககிட்ட ரீ-ரெக்கார்டிங்கோடு கதை சொன்னா மயங்கிடுவாங்க. அதுக்கு எனக்கு இந்தக் கதை வேணும்'னு சொல்லிட்டேன். 'அப்ப ஒண்ணு பண்ணுங்க. இந்தப் படத்துல ஒரு மொட்டை கேரக்டர் செட் ஆகும். ஒரு பருத்திக் காடு புரொடியூஸர்கிட்டே கதை சொல்ற உற்சாகத்தோடு நடிங்க. மத்ததை அப்புறம் பார்த்துக்கலாம்'னு சொல்லி 'நூறாவது நாள்' படத்துல நடிக்கவெச்சார். படமும் என் கேரக்டரும் சூப்பர் ஹிட். நம்மகிட்ட இருக்குற பிளஸ், மைனஸை விஷயம் தெரிஞ்சவங்க சொல்லும்போது கேட்டுக்கணும்னு அவங்க ரெண்டு பேரும்தான் எனக்குப் புரிய வெச்சாங்க!''

என்னைச் செதுக்கிய 7 நாட்கள் இந்த வாரம்: சத்யராஜ்

004 ''வில்லனா இருந்து ஹீரோவா மாறி சினிமாவுல 'நடிகன்'னு அங்கீகாரம் கிடைச்சாலும் நமக்கு இந்த டூயட் கண்றாவி மட்டும் வரவே வராது. மொதப் படத்துல டூயட் ஆடுறப்ப எதையாவது பண்ணிச் சமாளிக்கணுமேனு எம்.ஜி.ஆர். மாதிரியே டான்ஸ் ஆடித் தப்பிச்சேன். ஆனா, அந்தப் பாட்டுக்கு தியேட்டர்ல ஒன்ஸ்மோர் ரெஸ்பான்ஸ். ஏதோ மைக்கேல் ஜாக்சன் மாதிரி ஆடுனது போலக் கொண்டாடுறாங்க. நமக்கு ஜில்லுன்னு ஆயிருச்சு. அடுத்தடுத்த படங்கள்லயும் டான்சுக்கு ரொம்ப மெனக்கெடாம தலைவர் மாதிரி ஆடி மேனேஜ் பண்ணிக்கிட்டு இருந்தேன். அவரோட மேனரிஸம் அப்படியே மெள்ள மெள்ள நடிப்புலயும் தொத்திக்கிச்சு. ஒரு நாள் ராஜேஷ் சார்கிட்ட பேசிட்டு இருந்தப்ப அவர் சொன்னாரு, 'நான் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல ஒரு போட்டிக்கு நடுவராப் போயிருந்தேன். அங்கே நடிச்ச 100 பேருல 25 பேரு எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல்னு கலந்து கட்டி நடிச்சாங்க. மீதி 75 பேரு ஒரிஜினல் சத்யராஜ் மாதிரி 'தகடு தகடு'ன்னு டயலாக் பேசி நடிக்கிறான். நடிச்சுப் பெரிய ஆளா வரணும்னு வர்ற ஆளுங்களை நீ பாதிச்சிருக்க. ஆனா, நீயே இப்ப உன்னைத் தொலைச்சுட்டு இருக்க. ஏன்?'னு ஒரு கேள்வி கேட்டாரு. பதில் சொல்லத் தெரியலை எனக்கு. ஆனா, தலைவர் மேல இருக்கிற அபிமானத்துல நம்மளைத் தொலைச்சுரக் கூடாது. நம்ம அடையாளத்துக்காக மெனக்கெடணும்னு அப்ப புரிஞ்சுக்கிட்டதாலதான் 'நடிகன்', 'அமைதிப்படை' மாதிரியான படங்களில் நடிக்க முடிஞ்சது!''

005 ''சின்ன வயசுல கடவுளோடு நாம ரொம்பவே க்ளோஸா இருந்தோம். பரீட்சையில ஜஸ்ட் பாஸ் ஆனா பழநியில மட்டும் மொட்டை... ஃபர்ஸ்ட் கிளாஸ் பாஸ்னா பழநி அண்டு திருப்பதி. இப்படி கடவுள்கிட்டயே கண்டிஷன் போட்டு பல டீலிங் பண்ணிட்டு இருப்போம். காலேஜ்லயும் இந்த கலாட்டா பண்ணிட்டு இருந்தப்ப, ஒரு புரொஃபஸர் கூப்புட்டாரு. அவர் பகுத்தறிவுச் சிந்தனைகள் மிக்க பெரியாரிஸ்ட். 'எதுக்கு இந்த மொட்டை?', 'பரீட்சையில பாஸ் பண்ணதுக்காக திருப்பதிக்கு வேண்டிக்கிட்டது!', 'ஏன் படிக்கலையா?', 'இல்லைங்க... நல்லாப் படிச்சேங்க!', 'படிச்சதால பாஸ் பண்ணியா... மொட்டை அடிச்சதால பாஸ் பண்ணியா?', 'படிச்சதாலதாங்க!', 'படிச்சேல்ல... அப்புறம் ஏன் அடிச்சே?'ன்னு கேட்டார். பதில் தெரியாம திருதிருன்னு முழிச்சேன்.

எனக்குப் பதில் தெரியலைன்னாலும் அந்தக் கேள்வி எனக்குப் பிடிச்சிருந்தது. ஆனாலும், நம்மளால கடவுளோட டீலிங் வெச்சுக்காம இருக்க முடியலை. நடிக்க ஆரம்பிச்ச பிறகும் சில கண்டிஷன்களோடு வேண்டுதல்கள் வெச்சுட்டே இருந்தேன்.

அப்ப ஒரு நாள் வேலு பிரபாகரன் பெரியாரோட 'கடவுள்' புத்தகத்தைக் கொடுத்தார். படிக்கப் படிக்க... அன்னிக்கு அந்த புரொஃபஸர் கேட்ட கேள்விக்கான அர்த்தமும் பதிலும் எனக்குப் புரிஞ்சது. அன்னிக்குதான் நான் முழு நாத்திகன் ஆனேன். அதுக்குப் பிறகு நான் மேற்கொண்ட பயணம்தான் எனக்கு 'பெரியார்' படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தது. அது என் வாழ்நாளுக்கான கௌரவத்தையும் கொடுத்தது!''

006 'சத்யா, உங்களோடது ரொம்ப வித்தியாசமான முகம். உலகத்தின் எந்த மொழி சினிமாவிலும் எந்த கேரக்டருக்கும் செட் ஆகும். தமிழ்ல மட்டுமே நடிச்சுட்டு இருக்காதீங்க'ன்னு ஒரு தடவை ரஜினி சொன்னார்.

'ஏன் விக் வெச்சுட்டே ஒவ்வொரு படமும் நடிக்கிறீங்க. சில குறிப்பிட்ட கேரக்டர்களில் மட்டுமே நடிக்கிறீங்க. எவ்வளவு பெரிய சுதந்திரம் இருக்கு உங்களுக்கு. ஆனா, ஒரு சின்ன வட்டத்தை விட்டு வெளியே வரத் தயங்குறீங்க?'ன்னு கமல் ஒரு நாள் கேட்டார். ஆனா தெலுங்கு, மலையாளம்னு பட வாய்ப்புகள் வந்தப்பவும் 'மொழி தெரியாம ப்ராம்ப்ட்டிங் பண்ணி நடிக்கத் தெரியாது'ன்னு சொல்லித் தவிர்த்துட்டே இருந்தேன்.

ஒரு நாள் அஜயன் பாலா எழுதுன மார்லன் பிராண்டோவின் சுயசரிதைப் புத்தகம் படிச்சேன். அதுல ஒரு தகவல். உலகத்துலயே சிறந்த நடிகர் மார்லன் பிராண்டோ, 'ஹாலிவுட்டின் சிவாஜி'ன்னுல்லாம் நாம கொண்டாடுறோம். ஆனா, 'கம் இன்' அப்படிங்கிற டயலாக் கைக்கூட யாராவது ப்ராம்ப்ட் பண்ணாத்தான் அவரால நடிக்க முடியுமாம். 'பாடி லாங்குவேஜ், எக்ஸ்பிரெஷன், ரியாக்ஷன்... இதுதான் ஒரு நடிகனுக்கு முக்கியம். டயலாக் மனப்பாடம் பண்ணி பரீட்சையா எழுதப் போறோம்'னு அவர் சொல்வாராம். ஆஸ்கர் வாங்குன நடிகரே ப்ராம்ப்டிங் பண்ணி நடிக்கும்போது, நமக்கு என்ன வந்துச்சுனு ஒரு தெலுங்குப் படத்துல நடிச்சேன். முதல் ஒரு வாரம்தான். அப்புறம் அந்த சூட்சுமம் நமக்கும் புடிபட்டுருச்சு. இப்ப செக்கோஸ்லோவேகியா, பஹரின், அரபின்னு எந்த மொழிப் படத்திலும் நடிக்க இந்த சத்யராஜ் ரெடி!''

007 ''நம்மளை மாதிரி ஒரு திமிர் புடிச்ச ஆளை நீங்க பார்க்க முடியாதுங்க. வண்டிச்சோலைன்னு ஓர் ஊர்ல வீடு வாங்கிட்டா அடுத்த படத்துக்கு 'வண்டிச்சோலை சின்ராசு'ன்னு பேர் வைக்குறது. பொண்டாட்டி ஊரு பொள்ளாச்சி... 'பொள்ளாச்சி மாப்ளே'ன்னு ஒரு டைட்டில். மொத தடவை தலைவரோட ராமாவரம் வீட்டுக்குப் போயிட்டு வந்த சந்தோஷத்தோடு 'வாத்தியார் வீட்டுப் பிள்ளை'ன்னு திருநாமம். 'பிரம்மா', 'வள்ளல்'னு யாருமே யோசிக்கிற சங்கதிகளை ஜஸ்ட் லைக் தட் பண்ணிட்டுப் போயிட்டே இருப்போம். நம்ம பாலிசியே இதுதானே... நமக்கு எந்த ஃபீலிங்சும் கிடையாது. கிண்டல், கேலி, நக்கல், நையாண்டி இது மட்டும்தானே நமக்குச் சொந்தம்'னு தெனாவட்டாத் திரிஞ்சுட்டு இருந்தேன். 'குருதிப்புனல்' படத்துல 'ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒரு பிரேக்கிங் பாயின்ட் இருக்கும்'னு கமல் ஒரு வசனம் பேசுவார். அப்படி என்னோட பிரேக்கிங் பாயின்ட் எதுன்னு எனக்குப் புரியவெச்சது பிரபாகரன் அண்ணனின் மரணம் பத்தின செய்திகள்.

புலம்புறேன், அழுவுறேன். 'கவலைப்பட வேண்டாம். சீக்கிரம் நல்ல செய்தி வரும்'னு ஒரு செய்தி. கொஞ்சம் தெம்பா இருந்தாலும் என்ன பண்றதுன்னு தெரியாம மருதன் எழுதுன ஃபிடல் காஸ்ட்ரோ பத்தின புத்தகத்தைப் படிக்க ஆரம்பிச்சேன். ஒரு போராட்டத்தில் என்னென்ன இழப்புகள் ஏற்படும். நம்ம இலக்கை அடைய நம்ம மன உறுதி எந்தளவுக்குத் திடமா இருக்கணும்னு ஃபிடல் காஸ்ட்ரோ வாழ்க்கையில அத்தனை உதாரணங்கள். அதே நிலைமைதானே அங்கேயும். இது முடிவில்லை... ஓர் ஆரம்பம்னு மட்டும் தோணுச்சு. 'புதைக்கப்படுவதில்லை... விதைக்கப்படுகிறார்கள்'னு சொல்றதுல இன்னும் அழுத்தமா நம்பிக்கை வந்துச்சு. காத்துட்டு இருப்போம்... என்ன சொல்றீங்க!''

 
என்னைச் செதுக்கிய 7 நாட்கள் இந்த வாரம்: சத்யராஜ்
என்னைச் செதுக்கிய 7 நாட்கள் இந்த வாரம்: சத்யராஜ்